டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத்தில் இயல்பானது தான். ஆனால் அமெரிக்காவிலோ இளம் பெண் ஒருவர் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பாலோயர் என்று கூறியதற்காக உளவியல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 8 நாட்கள் மனநல ஆலோசனைகளுக்கு உடபடுத்தப்பட்டவர் இப்போது அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் லாங்க் ஐல்ண்ட் பகுதியை சேர்ந்த கமிலா பிரோக் எனும் அந்த பெண், கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லெம் பகுதியில் காரில் சென்ற போது போக்குவரத்து காவலர்களிடம் சிக்கியிருக்கிறார். போதை மருந்து பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அவரது காரில் எந்த போதப்பொருளும் இருக்கவில்லை என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
மறு நாள் காரை எடுத்துவர அவர் காவல் நிலையம் சென்ற போது அவர் வலுக்கட்டயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் அவர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணர்ச்சியமயமான நிலையில் இருந்தது உண்மை தான் ஆனால் எந்தவிதத்திலும் மனச்சோர்வுடன் இருக்கவில்லை என்று பிரோக் மறுத்துள்ளார்.
ஹார்லெம் மருத்துவமனையில் டாக்டர்களிடம் அவர் தான் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், டிவிட்டரில் அதிபர் ஒபாமா தன்னை பின் தொடர்வதாகவும் கூறியிருக்கிறார். ஒபாமா மோசமானவர்களின் பாலோயராக இருப்பாரா? என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
டிவிட்டரில் ஒபாமா பாலோயராக இருக்கும் தகவலை சொன்னால் தன்னை நம்புவார்கள் என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அதனாலேயே டாக்டர்கள் அவர் மீது சந்தேகம் கொண்டு அவருக்கு மயக்க ஊசி போட்டு தொடர்ந்து உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த பெண் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார், ஒபாமா டிவிட்டரில் தன்னை பின் தொடரவில்லை என்று கூறுகிறார் என அவரைப்பற்றி மருத்துவமனை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா டிவிட்டர் பாலோயர் என கூறியதால் அவரது மனநிலை குறித்து டாக்டர்கள் மேலும் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.
8 நாட்களுக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான காரணமுன் கூறவில்லை என்கிறார் பிரோக். ஆனால் மருத்துவ கட்டணமாக 13,000 டாலர் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரோக் இந்த சம்பவத்தால் நொந்துப்போய் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.
சமூக ஊடக பாதிப்பு தொடர்பான பலவித உதாரணங்க்ள் இருந்தாலும் பிரோக்கிறகு நேர்ந்த கதி மிகவும் விநோதமானதாக கருதப்படுகிறது.
பிரோக் கூறியபடி உண்மையில் அதிபர் ஒபாமா அவரது டிவிட்டர் பாலோயர் தான். ஆனால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு நிர்வகிக்கப்படும் பக்கமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 6,40,000 பேரை ஒபாமாவின் டிவிட்டர் பக்கம் பின் தொடர்கிறது.
பிரோக்கின் டிவிட்டர் பக்கத்தை பார்த்திருந்தால் இதை எளிதாக உறுதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால் டாக்டர்களும் அதிகாரிகளும் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை என்று இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்தவர்கள் வியப்பாக கூறியுள்ளனர்.
சமூக ஊடக செல்வாக்கு பல நேரங்களில் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத்தரும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிவிட்டரில் அதிபர் பாலோயராக இருக்கிறார் என கூறியதற்காக ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்த சம்பவம் தொடர்பாக நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் பிரோக், எல்லோரிடமும் வைக்கும் வேண்டுகோள், ஒபாமா போலவே நீங்களும் டிவிட்டரில் என்னை பின் தொடருங்கள் என்பது தான். எப்படி இருக்கிறது!
பிரோக்கின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/akilahbrock/