ஹாகிங் அளித்த ஆறுதல்!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துக்களை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது பிரிட்டனில் அவர் வசிப்பிடத்தில் இரண்டு காமிராக்கள் மூலம் அவர் பேசுவது படமாக்கப்பாட்டு அந்த காட்சி சிட்னியில் ஹோலோகிராம் வடிவில் தோன்றியது.

ஹாகிங்கின் மகள் லூசி இந்த உரைக்கான அறிமுகத்தை செய்து வைத்தார். இந்த உரையின் போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குள் நாம் வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான வாய்ப்பை தேடிக்கொள்ளவிட்டால் மனிதகுலம் அழிந்துவிடும் என்றும் ஹாகிங் எச்சரித்தார்.

பின்னர் ஹாகிங்கிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று இளம் பாடகர் ஜயான் மாலிக் ஒன் டைரக்‌ஷன் குழுவை விட்டு விலகி உலகம் முழுவதும் உள்ள இளம் பெண்களை கண்ணீர் சிந்த வைத்ததன் காஸ்மாலாஜிகல் விளைவு என்னவாக இருக்கும் என்பதாகும்.

விஞ்ஞானியிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஹாகிங் இந்த கேள்விக்கு அளித்த பதில் தான் இன்னும் சுவாரஸ்யமானது. கடைசியாக ஒருவர் முக்கியமான கேள்வியை கேட்டிருக்கிறார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட ஹாகிங், இந்த பெண்களுக்கு எனது ஆலோசனை கோட்பாடு பெளதீகத்தை படியுங்கள் என்பதாகும் என்று கூறிவிட்டு, ஏனெனில் என்றாவது ஒரு நாள் இணையான பிரபஞ்சங்கள் இருப்பது நிருபனமாகும். அப்போது நம்முடைய பிரபஞ்சத்திற்கு வெளியே இன்னொரு பிரபஞ்சம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகாது. அந்த பிரபஞ்சத்தில் ஜயான் மாலிக் ஒன் டைரக்‌ஷனில் இருந்து வெளியேறாமலே இருக்கலாம் என்று அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

இதை கேட்ட பின் ,ஜயான் மாலிக் பற்றி கூகுளிட தோன்றுகிறதோ இல்லையோ, இணையான பிரபஞ்சங்கள் பற்றி இணையத்தில் தேடிப்பார்க்க தோன்றும் அல்லவா? அது தான் ஹாகிங்!

இந்த நிகழ்ச்சியில் கவனிக்கத்தக்க விஷயம் இன்னொன்றும் இருக்கிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து அரங்கம் நிரம்பி வழிந்த்து என்பது தான் அது. நம்மூரில் ஹாகிங் போன்றவர்கள் உரை நிகழ்த்த வந்தால் எப்படி இருக்கும், யோசித்துப்பாருங்கள்?

——
நன்றி; தினமணி நெட்டும் நடப்பும் பகுதியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “ஹாகிங் அளித்த ஆறுதல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *