பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்டாலும் கூட, அவர் ஹார்வர்ட்டில் படித்தவர் என்பதும், அங்கு படிக்கும் போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம் தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரமேனும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
சிக்கலான கேள்வி தான். மார்க் வேலைக்கு செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டதால் அவர் வேலைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திய ரெஸ்யூம் எப்படி இருந்திருக்கும் என அறிய வாய்ப்பில்லை. அதனால் என்ன, மார்க் தனக்கான ரெஸ்யூமை தயார் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை என்ஹான்ஸ்சிவி இணையதளம் உருவாக்கி காட்டியிருக்கிறது.
மார்க் வாழ்க்கை இப்போது ஒரு திறந்த புத்தகம் என்பதால் ,அவருடைய கல்வித்தகுதி, கம்ப்யூட்டர் கோடிங் அனுபவம், பேஸ்புக்கிற்கு முன் அவர் துவக்கிய இணைய சேவைகள் போன்ற விவரங்களை எல்லாம் வைத்துக்கொண்டு அவருக்கான ரெஸ்யூமை உருவாக்கியுள்ளனர்.
கண்களில் கனவுடன் பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் துடிப்புடன் விண்ணப்பிக்கும் தொழில்நுட்ப கில்லாடி ஒருவரில் ரெஸ்யூம் எப்படி நவீனமாக இருக்குமோ அப்படி அமைந்திருக்கிறது.
கல்வித்தகுதி, சாப்ட்வேர் அனுபவம், சாப்ட்வேர் சேவைகள் ஆகிய விவரங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளது என்றால், வலது பக்கத்தில், தொழில்நுட்ப பலங்கள், படித்த புத்தகங்கள், சாதனைகள், அறிந்த மொழிகள் மற்றும் ஈடுபாடுகள் ஆகிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மார்க் கல்லூரியில் உளவியலை தான் மூல பாடமாக படித்தார் எனும் தகவலும், ஆங்கிலம் தவிர சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து மொழிகளை அறிந்திருந்தார் எனும் தகவலும் வியப்பை அளிக்காமல் இல்லை.
பேஸ்புக்கிற்கு முன்னதாக பேஸ்மெஷ் எனும் சமூக வலைதளத்தை உருவாக்கிய விவரமும் அதன் பிறகு கோர்ஸ் மேட்ச் எனும் தளத்தை அமைத்ததும் பலரும் அறியாத தகவல்களாக இருக்கும்.
மார்கிற்கு பிடித்த மேற்கோகள் மற்றும் அவரது வாழ்க்கை பழக்கம் பற்றிய வரைபடமும் கவனத்தை ஈர்க்கின்றன.
மொத்தமாக பார்க்கும் போது இந்த ரெஸ்யூம் சிறப்பாக இருப்பதுடன், பேஸ்புக் நிறுவனரை சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக அறிமுகம் செய்து வைக்கிறது.
பக்கம் பக்கமாக வாழ்க்கை வரலாற்றை படித்துக்கொண்டிருப்பதை விட ஒருவரை அவரது சுய விவரக்கோவை ( ரெஸ்யூம்) மூலம் அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.என்ஹான்ஸ்சிவி இணையதளம் தனது அடிப்படை சேவையான புதிய ரெஸ்யூம் தயாரத்தளித்தலுக்கான புதுமையான விளம்பரமாக தான் இதை உருவாக்கி இருந்தாலும் கூட மிக அழகாக மார்க் ஜக்கர்பர்க் பற்றி இது அறிமுகம் செய்கிறது.
ரெஸ்யூம் கீழே, அதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை குறிப்புகள் இதற்கு இன்னும் கூட சுவாரஸ்யம் அளிக்கின்றன. மார்க்கின் தந்தை அவருக்கு அட்டாரி பேசிக் புரோகிராமிங் கற்றுத்தந்தது, பின்னர் பயிற்சியாளர் ஒருவர் மூலமாக தனியே சாப்ட்வேர் திறமை பயிற்றுவித்தது போன்ற விவரங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
மார்க் ஜக்கர்பர் ரெஸ்யூமை காண:http://blog.enhancv.com/the-success-journey-mark-zuckerbergs-pre-facebook-resume/
——
தளம் புதிது: எளிதான கோப்பு பகிர்வு
பொருளோ,சேவையோ, இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக பெற முடிவது சிறந்து இல்லையா? எனில் கோப்பு பகிர்வுக்கு மட்டும் ஏன் இடைத்தரகர்களாக செயல்படும் இணையதளங்களை நாட வேண்டும்? இப்படி கேட்கச்செய்யும் பைல்பிட்சா இணையதளம் இடைத்தரகர் இல்லாமல் கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
கோப்புகளை பகிர இதில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் கூட கிடையாது. பைல் பிட்சா தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள ,கோப்பை தேர்வு செய்க பகுதியை கிளிக் செய்து, நாம் அனுப்ப விரும்பும் கோப்பை தேர்வு செய்து கொண்டால் போதுமானது. உடனே நம்முடைய கோப்புக்கு ஒரு இணைய முகவரி உருவாக்கி தரப்படும்.கோப்பை அனுப்புவதற்கு பதில் இந்த முகவரியை மட்டும் அனுப்பி வைத்தால் போதும். கோப்பை பெற விரும்பும் நபர் , இந்த இணைய முகவரியை டைப் செய்து இயக்கினால் அவரது பிரவுசரில் கோப்பு டவுண்லோடு ஆகத்துவங்கிவிடும்- அவ்வளவு தான்.
ஆனால் இதற்கு கோப்பை அனுப்பியவர் தனது பைல் பிட்சா பக்கத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும். இந்த முறையின் சிறப்பு என்ன என்றால், கோப்பு உண்மையில் எங்கேயும் செல்லவில்லை. பைல் பிட்சா தளத்திலும் சேமிக்கப்படுவதில்லை. அனுப்புகிறவர் பிரவுசரில் இருந்து பெறுபவர் நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்கிறார். இதற்கான இணைப்பு பாலமாக மட்டுமே இந்த தளம் இருக்கிறது. சகாவிடம் இருந்து சகா ( பியர் டூ பியர்) முறை என இது குறிப்பிடப்படுகிறது. டெப் ஆர்டிசி எனப்படும் நுட்பம் இதன் பின்னே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளைப்பொருத்தவரை கோப்புகளை அனுப்ப எளிதான வழி என்பது மட்டும் அல்லாமல்,அனுப்படும் கோப்பு இணையத்தில் எங்கும் தங்காமல் இருப்பதால் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் ஒன்று அனுப்புகிறவர் மற்றும் பெறுபவரின் இணைய இணைப்பு வேகத்திற்கு ஏற்ப தான் பரிமாற்றம் இருக்கும்.
கொஞ்சம் பாதுகாப்பான கோப்பு பகிர்வை நாடுபவர்கள் பயன்படுத்திப்பார்க்கலாம்.
இணையதள முகவரி; http://file.pizza/
——-
செயலி புதிது; எனக்கொரு இமெயில்
நமக்கு நாமே திட்டம் போல, நமக்கு நாமே இமெயில் அனுப்பிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? முக்கிய விஷயங்களை மறக்காமல் இருக்க நினைவூட்டல் சேவையாகவும், குறிப்புகளை அனுப்பவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இமெயில் மீ செயலி இந்த வசதியை அளிக்கிறது.
இந்த செயலி மூலம் ஒருவர் தான் விரும்பும் இமெயில் முகவரிக்கு குறிப்புகளை அனுப்பி வைக்கலாம். செயலியில் ஒரு தட்டு தட்டினால், மெயில் அனுப்புவதற்கான கட்டம் எட்டிப்பார்க்கிறது. அதில் குறிப்பு அல்லது நினைவூட்டல் செய்தியை டைப் செய்து நம்முடைய மெயில் முகவரிக்கு அனுப்பி கொள்ளலாம். வேறு பலவிதங்களிலும் அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது. பயனுள்ள சேவை. ஆனால் கட்டண செயலி.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.superlinear.emailme
—-
வாட்ஸ் அப் வால்பேப்பர்
வாட்ஸ் அப் சேவையில் சேட் செய்யும் போது பின்னணியில் தோன்றும் காட்சிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் தெரியுமா? இந்த வசதியை பயன்படுத்த செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று சாட்ஸ் மற்றும் கால் – வால்பேபர் கட்டளையை தேர்வு செய்து புதிய வால்பேப்பரை பின்னணியில் தோன்ற வைக்கலாம். போனில் உள்ள எந்த கோப்பு படம் அல்லது, வால்பேப்பர் செயலிகளில் படங்களை இந்த முறையை வரவைக்கலாம். அக, உங்கள் வாட்ஸ் அப் அரட்டைகளின் போது பின்னணியும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கும்.
உலகறிந்த ரகசியம் தான் ,ஆனால் இப்போது மீண்டும் நிருபணமாகி இருக்கிறது. ஆம், உலகின் மோசமான பாஸ்வேர்ட் எண்களின் வரிசை என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கபட்டுள்ளது. அதாவது 123456.
பெரும்பாலான இணையவாசிகள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக 12345, abc123 போன்ற பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாஸ்வேர்ட்கள் பல ஆயிரக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுவதால் பரவலானதாக இருப்பதுடன், தாக்காளர்கள் எளிதில் கைவரிசை காட்டக்கூடியதாகவும் இருக்கிறது. இப்படி தாக்காளர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் திருடப்படக்கூடிய பாஸ்வேர்ட்கள் மோசமான பாஸ்வேர்ட்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் முதல் பத்து இடங்களில் 12345 க்கும் இடமுண்டு, பாஸ்வேர்ட் எனும் பாஸ்வேர்டுக்கும் இடம் உண்டு. ஆம், பாஸ்வேர்டை கடவுச்சொல்லாக பயன்படுத்தும் அப்பாவிகளும் அதிகம் இருக்கின்றனர்.
நிற்க, இணைய உலகில் இப்போது ஆஷ்லே மேடிசன் எனும் தகாத உறவு இணையதளமும், அதன் உறுப்பினர் கணக்குகள் தாக்காளர்களால் களவாடப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தளத்தில் இருந்து களவாடப்பட்ட பாஸ்வேர்ட்களில் ஆயிரக்கணக்கானவற்றை பரிசீலித்த போது எண்களின் வரிசையை பலர் பாஸ்வேர்டாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
ஆக பாஸ்வேர்ட் விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
————-
நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது