உங்கள் முகம் மாற்றும் புதிய தேடியந்திரம்

367B421100000578-3702341-Users_type_any_terms_in_the_search_engine_such_as_curly_hair_Ind-a-11_1469144474873புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தேடியந்திரம் புகைப்படங்களை தேட உதவுகிறது.
ஆனால் இது வழக்கமான புகைப்பட தேடியந்திரம் அல்ல; கொஞ்சம் மாறுபட்டது. இது,ஒருவரது தோற்றத்திற்கான புகைப்படங்களை தேட உதவுகிறது.

டீரிம்பிட் எனும் இந்த தேடியந்திரம் பயனாளிகளின் பிரத்யேக முக அம்சங்களை அலசி, ஆராய்ந்து குறிப்பெடுத்து அதனடிப்படையில், வேறு வித அம்சங்கள் அல்லது பல்வேறு காலகட்டங்களில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என அடையாளம் காட்டுகிறது.

தனிப்பட்ட புகைப்பட தேடியந்திரம் என வர்ணிக்கப்படும் இதில் பயனாளிகள் தங்கள் புகைப்படத்தை சமர்பித்துவிட்டு, கூடவே தாங்கள் காண விரும்பும் தோற்றத்திற்கான குறிப்பையும் தெரிவிக்கலாம். உதாரணத்திற்கு சுருள் முடியுடன் கூடிய தோற்றம் என்றோ, வயதான கால தோற்றம் என்றோ குறிப்பிடலாம். உடனே, தனது தரவு பட்டியலில் உள்ள புகைப்படங்களில் அதற்கு நிகரான அம்சம் கொண்டவற்றை கண்டெடுத்து அதில் பயனாளியின் முகத்தை பொருத்தி தோன்றச்செய்கிறது.

இப்படி ஒருவர் தனது தோற்றம் எப்படி எல்லாம் இருக்கும் என தேடிப்பார்த்துக்கொள்ளலாம். நிறம், தலைமுடியின் அம்சங்கள் மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட கால கட்டத்தின் தோற்றத்தையும் தோன்றச்செய்யலாம்.
இந்த தளத்தில் நுழைந்தால் இந்த புகைப்பட மாற்று தேடல் நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று இப்போதைக்கு முன்னோட்ட வடிவில் இருப்பதால், இதை பயன்படுத்த விரும்புகிறவர்கள் இமெயில் முகவரியை அளித்துவிட்டு காத்திருக்க வேண்டும். வெகு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாக உள்ளது.

உங்கள் தோற்றத்தை பல்வேறு விதமாக கற்பனை செய்து பார்ப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அதை செய்வதற்கு என்றே ஒரு தேடியந்திரம் உருவாகி இருப்பது இன்னும் சுவாரஸ்யமானது தான்.
முக உணர்வு தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு மென்பொருள் உதவியோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளரான இரா கெமில்மாக்கர் சில்சர்மேன் என்பவர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
ஆனால் ஒன்று இது வெறும் சுவாரஸ்யமானது மட்டும் அல்ல; நடைமுறையில் பலவிதங்களில் பயன்படக்கூடியது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளரும் போது எப்படி இருப்பார்கள் என கற்பனை செய்து பார்க்கலாம். நடிகர்கள் குறிப்பிட்ட பாத்திரங்கள் எப்படி காட்சி தருவோம் என பார்த்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் காணாமல் போன குழந்தைகளின் தேடலிம் இந்த நுட்பம் கைகொடுக்கும். கடத்தல்காரர்கள் குழந்தைகளின் தலைமுடி உள்ளிட்ட அம்சங்களை மாற்றி அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். இதை முறியடித்து காணாமல் போன குழந்தையின் பல்வேறு தோற்றங்களை ஊகித்து தேடலில் ஈடுபடலாம்.

தேடியந்திர முகவரி: http://dreambit.xyz/

—-

மேலும் தேடியந்திரங்கள் பற்றி அறிய: http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-24-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8797406.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *