அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா? இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை அதிகம் நாடுகிறோம். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகள் நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டன. இணைய பயன்பாடு தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இணைய வேகம் பற்றியும், இணையதளங்களின் அணுகும் தன்மை பற்றி எல்லாம் கூட விவாதிக்கிறோம். எல்லாம் சரி, அரசு அமைப்புகளின் இணைய செயல்பாடு எப்படி இருக்கின்றன? அரசு இணையதளங்கள் எத்தனை பேர் ஆர்வத்துடன் பயன்படுத்துகிறோம்? அவற்றின் பயன்பாடு பற்றி என்ன நினைக்கிறோம்?
அநேகமாக நாம் அதிகம் பயன்படுத்தும் அரசு இணையதளம் ரெயில்வே முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமாக தான் இருக்க வேண்டும். தேவை தான் இதற்கு காரணம்! பொதுவாகவே அரசு இணையதளங்கள் நாம் தேவை கருதி தான் அணுகும் நிலை இருக்கிறது இல்லையா? குறிப்பிட்ட தகவல் தேவை என்றால் அல்லது, குறிப்பிட்ட சேவைக்காக விண்ணப்பிக்க அரசு இணையதளங்களை நாடுவது இயல்பாக இருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதே.
இதற்கு மாறாக இணையவாசிகள் விரும்பி விஜயம் செய்யும் அபிமான தளங்களின் பட்டியலில் அரசு இணையதளங்களே ஏதேனும் இருக்க கூடுமா? என்று தெரியவில்லை. இவ்வளவு ஏன் தேவை கருதி செல்லும் போதே கூட அரசு தளங்கள் ஏமாற்றத்தையும், அதிருப்தியை தரலாம். பெரும்பாலான அரசு தளங்கள் கற்கால வடிவமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. பல தளங்கள் அரசு கையேடுகளின் இணைய வடிவமாகவே எந்த புதுமையும் இல்லாமல் வெறுமையாக அமைந்திருக்கும். அதோடு தகவல்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் எப்போதும் ஒரு வித தேக்கத்துடனே இருப்பதை பல தளங்களில் பார்க்கலாம். அதிக பட்சம் போனால் செய்தி குறிப்புகள் மற்றும் அறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அவையும் கூட உடனுக்குடன் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம்.
நிற்க, அரசு இணையதளங்களை குறை சொல்வதல்ல என நோக்கம். அவற்றின் பொதுவான நிலையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சுட்டிககாட்டலின் நோக்கம், அரசு அமைப்புகளின் இணையதளங்கள் துடிப்பானதாக, செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், அவை பெரும்பாலும் அவ்வாறு இல்லை என்ற ஆதங்கமும் தான்.
ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது அழகியல் சார்ந்ததல்ல: இதன் முக்கிய அம்சம் பயன்பாட்டுத்தன்மை மற்றும் அணுகும் தன்மை. இந்த அம்சங்களைப்பொருத்தவரை மற்ற இணையதளங்களை விட அரசு தளங்களிடம் இருக்கும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசு மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தகவல்களை வழங்கவும், சேவை அளிக்கவும் இணைய வழியை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது அதை செய்வது என்பது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆகிறது.
ஆனால் எத்தனை அரசு தளங்கள் இதை நிறைவேற்றுகின்றன. காலாவதியான வடிவமைப்பை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் தகவல்கள் உரிய முறையில் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது? பேஸ்புக் ,டிவிட்டர் என சமூக ஊடக வசதிகள் வந்துவிட்ட நிலையில் அரசு தளங்கள் அவற்றை ஒருங்கிணைத்தாக இருக்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு தானே. அரசு தளங்கள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் துடிப்பானதாக இருக்க வேண்டும் அல்லவா!
இந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இணைய பிரிவுக்கு போதுமான ஊழியர்களும், நிதியும் ஒதுக்கப்படாதது துவங்கி, அரசின் பரம்பரை குணமான சிவப்பு நாடா கட்டுப்பாடு வரை பல காரணங்கள் இருக்கலாம். இவற்றை எல்லாம் விட முக்கிய காரணம், இணையத்தின் ஆற்றலை சரியாக புரிந்து கொள்ளாத தன்மையாகவே இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் இத்தகைய அறியாமை இருக்க வாய்ப்பில்லை என்பதால், இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் கூட அதை செயல்படுத்த முற்படாத சோம்பலும், அலட்சியமும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்த நிலைக்கு அரசு அமைப்புகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்ல முடியாது. மிகச்சிறந்த இணைய சேவை அளிக்க அரசை நாம் நிர்பந்திக்கவில்லை என்பது இன்னொரு முக்கிய காரணம். ‘
அதாவது எப்படி, பெரும்பாலான விஷயங்களில் அரசின் தன்மையை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலவே இணைய விஷயத்திலும் அரசு தளங்கள் என்றால் இவ்வளவு தான் என இருந்து விடுகிறோம். வேறு என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அமெரிக்காவின் கவ்டெக் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவே அந்த இணையதளத்தை பார்த்து வியந்து போனதால் எழுதப்படுவது தான்.
கவ்டெக் இணையதளம், உண்மையில் ஒரு இணைய பத்திரிகை. அதன் நோக்கம் அமெரிக்காவில் அரசு அமைப்புகளில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி அதை மேம்படுத்துவது தான். இத்தனைக்கும் அது ஒரு தனியார் அமைப்பின் லாபநோக்கிலான முயற்சியாகவே தோன்றுகிறது. அரசு அமைப்புகள் மற்றும் கல்வித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டின் புதுமையில் கவனம் செலுத்தி வரும் இ.ரிப்பளிக் எனும் நிறுவனம் இந்த இணைய பத்திரிகையை நடத்தி வருகிறது.
இந்த பத்திரிகையின் உள்ளடக்கமும், அதில் வெளியாகும் கட்டுரைகள் கவனம் செலுத்தும் விஷயங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் நவீன தொழில்நுட்பத்தை அரசு அமைப்புகள் மக்கள் நோக்கில் பயன்படுத்துவது தொடர்பானவை.
உதாரணத்திற்கு இந்த மாத இதழின் முகப்பு கட்டுரை, அரசு மற்றும் உள்ளாட்சி இணையதளங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசுகிறது. அரசு தளங்கள் தங்கள் வடிவமைப்பு உத்தியை மறு சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்று விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை.
மற்றொரு கட்டுரை, அரசின் நல்ல இணையதளத்தையும், மக்கத்தான இணையதளத்தையும் வேறுபடுத்துவது எது என்று கேட்கிறது. முந்தைய இதழ்களின் கட்டுரை இன்னும் கூட செறிவாக உள்ளன.
விஷயம் இது தான், அரசு அமைப்புகளின் இணைய செயல்பாடுகள் பற்றியும் அவற்றின் உத்தி பற்றியும் நாமும் அலசி ஆராய்ந்து உரையாடலை உண்டாக்க வேண்டும்.
எந்த விதங்களில் எல்லாம் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை அளிகக் முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் அரசு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டாக வேண்டும்!
கவ்டெக்.காம் இணையதளம்: http://www.govtech.com/magazines/gt/Government-Technology-September-2016.html