பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய தொடர் ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தக வடிவில் வெளியாகிறது. புதிய தலைமுறை கல்வி வார இதழில் தொடராக வந்த இந்த கதைகள் புதிய தலைமுறை பதிப்பக வெளியீடாக புத்தக வடிவம் பெறுகிறது.
இது என்னுடைய மூன்றாவது புத்தகம். ஒரு விதத்தில் இரண்டாம் புத்தகமான நெட்சத்திரங்களின் இன்னொரு நீட்சி என இதை சொல்லலாம். நெட்சத்திரங்கள் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் வெற்றிக்கதைகளை விவரித்தது என்றால், நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணைய உலகில் வெற்றி பெற்றவர்களையும், புதிய பாதை கண்டவர்களையும் அடையாளம் காட்டுகிறது.
இது வெறும் வெற்றிக்கதைகள் அல்ல. வெற்றியை முன் வைத்து எழுதப்பட்டதும் அல்ல. நம் காலத்தின் அடையாளமாக இணைய நிறுவனங்கள் மற்றும் நமக்கு இன்றியமையாததாக கருதும் மகத்தான இணைய சேவைகளை உருவாக்கி மனிதர்கள் இவர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் முன்னோடிகள். ஒரு விதத்தில் கிளர்ச்சியாளர்கள். ஏற்கனவே இருந்த பாதை மற்றும் சிந்தனைகளில் இருந்து விலகி யோசித்து வெற்றி பெற்றவர்கள். பெரிய அளவில் பின்புலமே, செல்வாக்கோ இல்லாமல் தங்கள் ஐடியாவால் ஜெயித்தவர்கள் என்பது இவர்களின் பெரும்பாலானோரின் பொதுவான குணாதிசயம்.
பரவலாக அறியப்பட்ட வாட்ஸ் அப், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை உருவாக்கிய நிறுவனர்கள் தவிர அதிகம் அறியப்படாத வெற்றிக்கதைகளான லைப்ரரி திங், யெல்ப், பிண்டிரெஸ்ட், டம்பளர் ஆகிய வெற்றிக்கதைகளும் இதில் அடங்கியுள்ளன.
கொடுக்க வைக்கும் தளமான கிவா மற்றும், நிதி திரட்ட உதவும் இணைய மேடையான கிக்ஸ்டார்ட்டர் பற்றி எழுத முடிந்தத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல வேர்பிரஸ் பின்னே உள்ள முல்லன்வெக் பற்றியும் பயர்பாக்ஸ் பின்னே உள்ள ராஸ் பற்றியும் எழுத முடிந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
இந்த தொடரை எழுதிய எனக்கு ஒரு கற்றல் அனுபவமாகவே அமைந்தது. இணைய உலகம் தொடர்பான பல புதிய விஷயங்கள் மற்றும் ஆளுமைகளை அறிய முடிந்தது. தொடரை எழுத வாய்ப்பளித்த புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் பொன்.தனசேகரன் மற்றும் அவரிடம் பரிந்துரைத்த ஆரூயிர் நண்பர் சுந்தரபுத்தனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.புத்தக வடிவில் பதிப்பிக்கும் புதிய தலைமுறைக்கும் நன்றிகள் பல!
அன்புடன் சிம்மன்