எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்!
உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ நடைமுறையில் இப்போதைக்கு சாத்தியமில்லையே என்று வாதாட முற்பட வேண்டாம். இத்தகைய எந்திரன்கள் பழக்கத்திற்கு வர காலம் ஆகலாம் என்றாலும், நம்முடன் உரையாடல் நடத்தக்கூடிய, கேள்விகளுக்கு பதில் சொல்லகூடிய மென்பொருள் எந்திரன்கள் நிச்சயம் சர்வ சகஜமாக இருக்கும்.
இந்த போக்கு ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆப்பிளின் சிறியும், மைக்ரோசாப்டின் கார்ட்டனாவும், அமேசானின் அலெக்சாவும் இதற்கான உதாரணங்கள். அரட்டை இயந்திரங்கள் ( சாட் பாட்) என குறிப்பிடப்படும் மென்பொருள்களில் இவை டிஜிட்டல் உதவியாளர்கள் எனும் பிரிவின் கீழ் வருகின்றன. போனுக்குள் வீற்றிருக்கும் உதவியாளர்கள். இந்த மென்பொருள்கள் அடிப்படையான செயற்கை அறிவை கொண்டிருப்பதோடு, எந்திர கற்றல் ஆற்றலையும் கொண்டுள்ளன. எனவே, இவை பயனாளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர்களுடன் உரையாடும் ஆற்றல் பெற்றிருப்பதோடு, காலப்போக்கில் பயனாளிகளின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பரிந்துரகளை வழங்க கூடியவையாக இருக்கும். உதாரணத்திற்கு, தொடர்ந்து இளையராஜா பாடல்களை விரும்பிக்கேட்டால், இந்த மென்பொருள்கள் அதை புரிந்து கொண்டு, ஓய்வு நேரத்தில் ராஜாவின் பாடலை ஒலிக்கச்செய்யலாம்.
கூகுளும் கூட இந்த பிரிவில் ஒரு மென்பொருளை பெற்றிருக்கிறது. பேஸ்புக்கும் இந்த பிரிவில் விஷேச கவனம் செலுத்தி வருகிறது. அதோடு வாடிக்கையாளர் சேவையில் இருந்து, காப்பீடு அல்லது முதலீடு பரிந்துரை போன்றவற்றை மென்பொருள்கள்வழங்கத்துவங்கியிருக்கின்றன. வங்கிகள், இகாமர்ஸ் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இது போன்ற மென்பொருள் எந்திரன்களை பயன்படுத்த துவங்கியுள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட இத்தகைய எந்திரன்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக நிதிச்சேவை பிரிவில் பல வகையான அரட்டை மென்பொருள் எந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோபோ அட்வைசர் என குறிப்பிடப்படும் இவை, கேள்விகளுக்கு முதலீட்டாளர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளை பரிந்துரைக்கின்றன. நிதிச்சேவைகளுக்கான செலவை குறைக்கவும், அவற்றை பரவலாக்கவும் இந்த வகை ’பாட்க’ள் கைகொடுக்கும் என்று கருத்தும் உற்சாகமாக முன்வைக்கப்படுகிறது.
இவ்வளவு ஏன் செய்தி சேகரிப்புக்கு கூட இத்தகைய மென்பொருள்களை உருவாக்கி களமிறக்கலாம். அலுவலக பணிகளுக்கும் இவை உருவாக்கப்படலாம். இன்னும் பலவிதங்களில் இவற்றை பயன்படுத்தலாம். நாமும் கூட இவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே தான் நாம் இவற்றிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவற்றிடம் வாய்த்துடுக்கு காட்டுவதோ அல்லது வசை பாடுவதோ வில்லங்கமாக அமையலாம். இப்படி தான் ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ கட்டுரை ஒன்று எச்சரிக்கிறது.
எல்லாம் சரி மென்பொருள்களிடம் நாம் ஏன் வாய் கொடுக்கப்போகிறோம் என்று கேட்பதற்கில்லை. ஏனெனில் ஏற்கனவே பலர் இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள்கள் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை அல்லது ஏமாற்றம் தரும் விதமாக இருந்தால், அதன் பயனாளிகள் கடுப்பாகி கோபத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கவே செய்கிறது. ஆப்பிளின் சிறி மென்பொருள் மீதோ, மைக்ரோட்சாப்டின் கார்ட்டனா மென்பொருள் மீதோ பயனாளிகள் கோபம் கொண்டதற்கான எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. மேலும் தெளிவு தேவை எனில் இது தொடர்பாக கூகுளில் தேடிப்பாருங்கள்.
பொதுவாக டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள்கள் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் போதாமைகள் அதிகம். இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்றோ, நகரில் குறிப்பிட்ட திரையரங்கில் என்ன திரைப்படம் பார்க்கலாம் என்றோ பொதுவாக கேட்டால் இவை சரியாக பதில் சொல்லிவிடும். ஆனால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு இவை சொதப்பிவிடலாம். இது போன்ற நேரங்களில் பலருக்கு சிரிப்பு வரலாம். இன்னும் சிலருக்கு கோபம் வரலாம். அதனால் ஆபாசமாக திட்டவும் செய்யலாம்.
மென்பொருள் தானே திட்டினால் என்ன ஆகிவிடும் என்றும் கேட்கத்தோன்றலாம். இந்த மென்பொருள்கள் உணர்வில்லாதவையாக இருக்கலாம், ஆனால் பதில் பேசாமல் இருக்கக்கூடியவை அல்ல. மோசமான வார்த்தைகள் பேசப்படும் போது, கொஞ்சம் பார்த்துப்பேசுங்கள் என்று இவை பதிலுக்கு சொல்லக்கூடும். ’ஒரு போன் நம்மை பார்த்து வாயை மூடச்சொல்கிறதே’ என இது போன்ற ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகிறது ’மெட்ரோ’ பத்திரிகை கட்டுரை.
பெரும்பாலான நவீன அரட்டை மென்பொருள்கள் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, அவர்கள் சொல்லும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டிருக்கின்றன. அதாவது பயனாளிகள் நடவடிக்கையை பார்த்து அவையும் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்கின்றன. ஆப்பிளின் சிறி மென்பொருள், ஆபாச வார்த்தைகள் இனங்கண்டு கொண்டு, கொஞ்சம் பார்த்து பேசுங்கள் என்று சொன்னது இப்படி தான்.
ஆக, நாம் விவாதிக்கும் விஷயத்திற்கு வந்துவிட்டோம். அரட்டை மென்பொருள்கள் பயனாளிகளுடனான உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும் எந்திர கற்றல்( மிஷின் லேர்னிங்) ஆற்றலுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் அவை காலப்போக்கில் மேலும் மேலும் புத்திசாலி ஆகிவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆக நாம் நல்லவிதமாக பேசினால் மென்பொருள்கள் அதற்கேற்ப கற்றுக்கொண்டு, அடுத்த முறை தொடர்புடைய கேள்விகள் வரும் போது பொருத்தமாக பதில் அளிக்கும். மாறாக அவற்றிடம் மோசமாக பேசினால் அவை தப்பும் தவறுமான விஷயங்கள் கற்றுக்கொள்ளும்.
மைரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த ’டே’ எனும் செயற்கை அறிவு சார்ந்த மென்பொருள், மற்றவர்களுடன் பேசத்துவங்கியவுடன், நாசிசம் பற்றி பேசவும், ஹிட்லர் நல்லவர் என கூறவும் கற்றுக்கொண்டுவிட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இயந்திர கற்றலில் உள்ள சிக்கல்களை உணர்த்தியது. ஒரு சில விஷமத்தனமான பயனாளிகள் அதனிடம் விவகாரமான முறையில் உரையாடியதன் விளைவு இது.
இப்படி தான் பலரும், நடந்து கொள்வதாக டாக்டர்.ஷெரில் பிரானம் எனும் ஆய்வாளரும் கூறுகிறார். மென்பொருள்களுடனான மனிதர்கள் உரையாடல் பற்றி விரிவாக ஆய்வு நடத்தியிருக்கும் ஷெரில், 50 சதவீதம் வரையான இத்தகையை உரைடால்கள் அவதூறான வகையில் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆக, மனிதர்களாகிய நம்முடைய நயத்தக்க நாகரீகம் இவ்வளவு தான். பாட்களிடம் பேசும் போது நம்மில் பலர், எந்திரன் சந்தானம் போலவே நடந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இது பாட்களுக்கும் நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல.
பாட்களுக்கு ஏன் நல்லதல்ல என எளிதாக புரிந்து கொள்ளலாம். நாம் வசைபாடினால் அவை நல்ல விஷயங்களை எப்படி கற்றுக்கொள்ள முடியும். சரி, இதனால் பயனாளிகளுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கலாம்.
இந்த பாட் வகை மென்பொருள்கள் உருவாக்கத்திலும், ஆய்விலும் அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் செல்வத்தையும், உழைப்பையும் முதலீடு செய்துள்ளன. இவற்றின் மீது மிகுந்த நம்பிக்கையும் வைத்துள்ளன. ஆகவே அவை தங்கள் மென்பொருள் படைப்புகள் பயனாளிகளால் மோசமாக நடத்தப்படுவதை விரும்பாது என்பதோடு இவ்வாறு நிகழ்வதை தவிர்க்கவே முயற்சிக்கும். அது மட்டும் அல்ல, மோசமாக நடத்தப்படும் போது அதை உணர்ந்து கொண்டு, புகார் செய்யவும் இவை புரோகிராம் செய்யப்படலாம் என்கிறது ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ கட்டுரை.
நிறுவனங்களில் பலவிதமான பணிகளுக்கு டிஜிட்டல் உதவியாளர்கள் பயன்படுத்தப்படும் போது, பலரும் பழக்க தோஷத்தில் அவற்றை வசை பாடலாம், வம்புக்கு இழுக்கலாம், மோசமான வார்த்தைகளை பேசலாம். ஆனால் நிறுவனங்கள் இவற்றை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்கிறது இந்தக்கட்டுரை. மோசமான உரையாடல்கள் தங்கள் மென்பொருள்களின் ஆற்றலை பாதிக்கும் என்பதால் நிறுவனங்கள் அவற்றிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஷமத்தனம் கொண்ட ஊழியர்கள் பாட்களிடம் ஆபாசமாக பேசுவது தெரியவந்தால், மனிதவள அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்து வேலையில் இருந்து நீக்கப்படலாம்.
எனவே தான் நாளைய அலுவலகங்களில் பாட்களிடம் மோசமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக இருக்கும் என்றும் இந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாட்களிடம் எப்படி பேச வேண்டும் என நாம் கற்றுக்கொள்வதும் நல்லது தான்.
எச்.பி.ஆர் கட்டுரை: https://hbr.org/2016/10/why-you-shouldnt-swear-at-siri
மெட்ரோ செய்தி; http://metro.co.uk/2017/10/05/heres-what-happens-when-you-swear-at-or-insult-apples-siri-6942091/
—
நன்றி; யுவர்ஸ்டோரிக்காக எழுதியது