ஹாரி ஹாம்ப்லேவுக்கு (Harry Hambley) 18 வயது தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவர் இணைய உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி அடையாளத்தை தேடிக்கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்ல, இன்ஸ்டாகிராம் தளத்தில் அவருக்கு என மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் இருக்கின்றனர். இணையம் மூலம் அவருக்கு வருமானமும் கொட்டுகிறது. அவரது படைப்புகளை கண்டு ரசிப்பதற்ககாக காத்திருக்கும் ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறனர். இணையத்தில் தன் பெயரை தாங்கி நிற்கும் டி-ஷர்களையும், காபி கோப்பைகளையும் விற்க கூடிய அளவுக்கு அவர் இணைய நட்சத்திரமாகவும் உருவாகி இருக்கிறார்.
சுருக்கமாக சொன்னால் ஹாம்ப்லே தனக்கான சின்னதாக ஒரு இணைய சாம்பிராஜயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். கார்ட்டூன்களாக வரைந்து தள்ளியே இந்த மினி சாம்பிராஜ்யத்தை ஹாப்லே உருவாக்கி கொண்டிருக்கிறார் என்பது தான் ஆச்சர்யமானது. இன்ஸ்டாகிராம் அடிப்படையில் ஒளிப்பட பகிர்வு செயலி என்றாலும், காட்சிரீதியான எல்லாவற்றையும் அதில் பகிர்ந்து கொள்ளலாம். இப்படி தான் இளைஞரான ஹாம்ப்லே தான் வரைந்த கார்ட்டூன்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். அவர் வரையும் படங்கள் அதிக சிக்கல் இல்லாமல் எளிமையாக இருக்கின்றன. ஒற்றை கார்ட்டூன்கள் தவிர காமிக் கதை போல தொடர் படங்களையும் அவர் வரைகிறார். பெரும்பாலான படங்களில் பீன் எனும் பாத்திரம் பிரதானமாக இடம்பெறுகிறது.
இவை எல்லாம் சேர்ந்து தான், கெட்னிப்ஸ் (ketnipz ) எனும் பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தை பக்கத்தை பிரபலமாக்கியிருக்கிறது. அவருக்கு பாலோயர்களையும் அதிகம் பெற்றுத்தந்திருக்கிறது. ஹாம்ப்லேவுக்கு எப்போதுமே வரைவதில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதன் பயனாகவே பல வகையான சித்திரங்களை வரைந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டிருந்தார். முதலில் கேட்னிப்டிராஸ் எனும் பெயரிலான பக்கத்தை தான் அமைத்திருந்தார். எனினும் கேட்னிஸ் எனும் பெயரே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்கிறார். ஆனால் இந்த பெயரில் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கம் இருந்தால், அதே ஒலி நயம் தரக்கூடிய கேட்னிப்ஸ் எனும் பெயரை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரை மாற்றியது போலவே, படங்களை வரையும் விதத்தையும் மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் படங்களையும், மனித உருவங்களையும் வரைவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இவை அலுப்பூட்டியதாக உணரவே தனது பாணியை மாற்றிக்கொண்டு, எளிதான கோடுகளோடு, கேலி மற்றும் நகைச்சுவை உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான கார்ட்டூன் பாணி படங்களை வரையத்துவங்கினார். அதன் போக்கில் மைய பாத்திரத்தையும் உருவாக்கி கொண்டார். சிக்கலான படங்களை விட்டு, கேலிச்சித்திரம் பாணியிலான படங்களை வரையத்துவங்கியது அவரது படைப்பூக்கத்திற்கு மேலும் ஊக்கமாக அமைந்தது. எளிமை தான் நல்லது, ’இதை நான் சிக்கலான்மவற்றை முயன்று பார்த்து கற்றுக்கொண்டேன்’ என் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சிக்கலானவற்றை செய்வதால் வெற்றி நிச்சயம் என சொல்ல முடியாது, திடமான ஐடியாவை வைத்துக்கொண்டு அதை அழகாக வெளிப்படுத்துவதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த முதிர்ச்சி அவரது கார்ட்டூன்களிலும் வெளிப்படுவதை பார்க்கலாம். கார்ட்டூன்களை டிஜிட்டல் வரைபலகையில் வரைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். கூடவே டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறார். ஐந்து மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு படங்களை அவர் நேர்த்தியாக உருவாக்கிய பிறகே பகிர்ந்து கொள்கிறார். நாள் ஒன்றுக்கு ஒரு கார்ட்டூனாவது உருவாக்க வேண்டும் எனும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.
நேர்த்தியாகவும், சிரத்தையுடனும் தொடர்ந்து வரைந்து வருவதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பாலோயர்கள் கூடி வருகின்றனர். இதனிடையே உள்ளூர் நாளிதழ்கள் முதல் பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களிலும் அவரது வெற்றிக்கதை பற்றிய செய்தி வெளியாகவே மேலும் பிரபலமாகிவிட்டார். அவரது பாலோயர்கள் எண்ணிக்கையும் மூன்றரை லட்சத்தை கடந்திருக்கிறது.
ஹாம்ப்லே வரையும் கார்ட்டூன்கள் இந்த அளவு பிரபலாவதற்கு முக்கிய காரணம், அவை உண்டாக்கக்கூடிய நல்லெண்ணம் என்றே சொல்ல வேண்டும். கேலி, நகைச்சுவையை பிரதானமாக கொண்டு வரைந்தாலும் அந்த படங்கள் ஒரு நல்ல செய்தியை உணர்த்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவரது படங்கள் ஒன்று ஆறுதல் அளிக்கின்றன இல்லை ஊக்கம் அளிக்கின்றன. ஒரு படத்தொடரில், கீழே கொட்டிய பாலை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் என ஒருவரை அரவணத்துச்செல்கிறார். இன்னொரு படத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் பீன், உங்களை நேசியுங்கள் என சொல்வது போல வரைந்திருக்கிறார். மற்றொரு படத்தில் லேப்டாப் , புத்தகங்கள் இறைந்து கிடக்கும் படத்தையும், பூனைகளுடன் ஜாலியாக விளையாடும் படத்தையும் வரைந்துவிட்டு, அழுத்தம் குறைவாக இருந்தால் உற்சாகம் அதிககம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அவரிடம் பயனாளிகள் பயன்படுத்தகூடிய கருணை உணர்வு ஸ்டிக்கர்களை உருவாக்கித்தருமாறு கேட்டிருக்கிறது.
உலகில் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில், மனிதகுலத்தின் கருணையான பக்கத்தை நினைவுபடுத்துவது அவசியமாகிறது என்று முதிர்ச்சியாக விளக்கம் தருகிறார். இணையத்தில் துவேஷமான கருத்துக்களை எதிர்கொண்டாலும் தனது பாணியில் ஆக்கப்பூர்வமாகவே அதற்கு பதில் அளிக்கிறார். இப்படி தான் ஒருமுறை, பின்னூட்டம் வாயிலாக துவேஷமான எண்ணங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹேட் எனும் ஆங்கில வார்த்தையை அழித்து கிரியேட் எனும் ஆங்கிய வார்த்தையாக வரைந்திருந்தார். இது போன்ற கருத்துக்களை நேரத்தை வீணடிப்பதற்கு பதில் ஆக்கப்பூர்வமாக் எதையாவது உருவாக்குங்களேன் என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்லி இருந்தார்.
அவரது படங்கள் பெரும்பாலும் எளிதாக புரிந்து கொண்டு எல்லோரும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது போலவே இருக்கின்றன. இதனால் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றன. இதற்கான அமெரிக்க நேரத்தை மனதில் கொண்டு படங்களை பதிவேற்றுகிறார். மேல்படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வரைந்தபடியே சம்பாதிக்கும் ஹாம்ப்லே வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் அமெரிக்காவில் செட்டிலாக விரும்புவதாக கூறுகிறார்.
இவை எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் என்னவெனில், தனது கார்ட்டூன்களுக்கு இத்தனை பெரிய அளவில் ரசிகர்கள் கிடைக்காமல் இருந்தாலே நன்றாக இருந்திருக்கும் என அவர் சொல்வது தான். என்னைப்பொறுத்தவரை கலை என்பது மற்ற வழிகளில் என்னைப்பற்றி வெளிப்படுத்திக்கொள்ள முடியாத விஷயங்களை வெளிப்படுத்திக்கொள்வது தான் என்கிறார் அவர். ஆனால் அதை அவர் தனது கார்ட்டூன்கள் மூலம் கச்சிதமாக செய்து வருவதே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.- https://www.ketnipz.com/