இவர் டிவிட்டர் மகாராஜா

cnnஆஷ்டன் குட்சரை டிவிட்டர் மகாராஜா என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் கிடைக்காத பெருமை குட்சருக்கு உண்டு. உண்மையில் எந்த ஒரு மனிதருக்கும் கிடைக்காத பெருமை அது.

டிவிட்டரில் முதன் முதலாக பத்து லட்சம் பின்தொடர்பவர்களை பெற்றவர் என்பதே அந்த பெருமை!

தனிநபர் ஒருவர் பத்து லட்சம் பார்வையாளர்களை பெற்றது, டிவிட்டர் வரலாற்றிலேயே ஒரு மைல்கல் என்பதோடு, சக்தி வாய்ந்த மீடியா நிறுவனமான சிஎன்என்க்கு எதிராக சவால் விட்டு இதனை சாதித்தார் என்பதே முக்கியமானது.

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்துக்களை/ செயல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த பதிவுகளை படிக்க விரும்பும் எவரும், குறிப்பிட்ட ஒருவரின் டிவிட்டர் கணக்கை பின்தொடர முன்வரலாம். டிவிட்டர் அகராதியில் இவர்கள் பின்தொடர்பவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.

பின் தொடர்பவர்களாக இருப்பதன் மூலம் ஒருவரால் தங்கள் அபிமான டிவிட்டர் கணக்கில் பதிவாகும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

அல்பமான முதல், அற்புதமான விஷயங்கள் வரை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டரை பயனுள்ளதாக ஆக்குவதே இந்த பின்தொடரும் கூட்டம்தான். டிவிட்டரிடப்படுவதை படிக்க வாசகர்கள் இருக்கின்றனர் என்னும் நம்பிக்கையே பகிர்தலுக் கான ஆர்வத்திற்கு வித்திடுகிறது.

டிவிட்டரில் ஒருவர் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பதை பொருத்து அதிக பின்தொடர்பவர்கள் கிடைக்கலாம். ஏற்கனவே பிரபலமாக இருக்கும் திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோர் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது எடுத்த எடுப்பிலேயே ஆயிரக் கணக்கான பின்தொடர்பவர்களை பெற்று விடலாம்.

இப்படி லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரபலங்கள் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த பட்டியலில் அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் முன்னிலை பெற்றிருந்தார். அதிலும் ஒபாமாவும் முன்னிலையில் இருந்தார்.

ஹாலிவுட் நடிகரும், பிரபல நடிகை டெமி மூரின் கணவருமான ஆஷ்டன் குட்சருக்கும், டிவிட்டரில் கணிசமான பின் தொடர்பவர்கள் இருந்தனர். நடிகர் என்ற முறையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர்தான் என்றாலும், டிவிட்டரின் பின் தொடர்பவர்கள் குட்சருக்கு புதிய அர்த்தத்தையும், சக்தியையும் கொடுத்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவர் டிவிட்டர் அபிமானியாகி விட்டார்.

அதோடு டிவிட்டரில் தானே ராஜா என்று உலகிற்கு உணர்த்தவும் நினைத்தார்.
]
இதன் விளைவாக பிரபலமான சிஎன்என் நிறுவனத்தை சவாலுக்கு அழைத்தார்.

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் கணக்கு வைத்துக் கொள்ளலாம். தனிநபர்கள் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்களும் நாளிதழ்கள் போன்றவையும் கூட, டிவிட்டரில் கணக்கு துவங்கலாம். செய்திகளை அவை வெளியாகும் போதே பகிர்ந்து கொள்ள நாளிதழ்களுக்கு டிவிட்டர் சாத்தியமாக்குகிறது. அமெரிக்காவின் முன்னணி செய்தி சானலான சிஎன்என்ம், டிவிட்டரின் ஆற்றலை உணர்ந்து உடனடி செய்தி உட்பட பல்வேறு பிரிவுகளுக்கான டிவிட்டர் கணக்கை இயக்கி வருகிறது. இதில் உடனடி செய்திக்கான கணக்கு மிகவும் பிரபலமாக இருந்தது.

சிஎன்என் சக்தி வாய்ந்த மீடியாவாக இருக்கலாம். ஆனால் டிவிட்டர் என்று வரும் போது தனி நபரால் கூட அதனை தோற்கடித்து விட முடியும் என்று குட்சர் நம்பினார். இந்த நம்பிக்கையே டிவிட்டரில் என்னை மிஞ்ச முடியாது என்று சிஎன்என்க்கு சாவல் விட்டார்.

இந்த சவாலுக்காக அவர் தேர்வு செய்த இலக்கு தான் பத்து லட்சம் பின் தொடர்பவர்கள்.

டிவிட்டரில் பலருக்கு லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் இருந்தாலும், அந்த எணிண்கை எவருக்கும் பத்து லட்சத்தை தொட்டுவிடவில்லை. பத்து லட்சம், அதாவது ஒரு மில்லியன் பின் தொடர்பவர்கள் என்பது ஒரு விசேஷ இலக்காகவே கருதப்பட்டது.

இந்த மாய இலக்கை அதாவது ஒரு மில்லியன் பின்தொடர்பவர்கள் முதலில் பெறப்போவது யார், நானா அல்லது சிஎன்என் நிறுவனமா? என ஒரு கை பார்க்கலாமா என்பதே குட்சர் விடுத்த சவால்.

குட்சர் இந்த சவாலை விடுத்த விதமும், அதற்கு தேர்வு செய்த விதமும் குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த நிலையில், டிவிட்டரின் பயன்பாடு பல மட்டங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி டிவிட்டர் தொடர்பான புரிதலை எளிமையாக்கிய கட்டத்தில் (2009 ஏப்ரலில்) குட்சர் தனது சவாலை அறிவித்தார்.

குட்சர் இந்த அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வெளியிடவில்லை. தனது காரில் இருந்தபடி பேசி அதனை வீடியோவில் பதிவு செய்து “qik பகிர்வு தளத்தின் மூலம் வெளியிட்டார்.

ஒரு மீடியா நிறுவனத்தை டிவிட்டரில் அதிக செல்வாக்கு இருக்க முடியும் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது’ என்றும் அவர் கூறியிருந்தார்.

உண்மையிலேயே தனி நபர்கள் தங்களுக்கான ஆதரவை பெரிய அளவில் திரட்டிக் கொள்ள டிவிட்டர் வழி செய்கிறது என்பதை உணர்த்த விரும்பினார்.

இந்த சவாலை சிஎன்என் நிறுவனமும் அலட்சியப்படுத்த வில்லை. மற்ற மீடியாவும் அலட்சியப்படுத்தவில்லை. குட்சரை டிவிட்டரில் முந்துவதற்கான பந்தயத்திற்கு சிஎன்என் தயாராக இந்த பந்தயம் பற்றி நாளிதழ்களும், செய்தி தளங்களும் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. டிவிட்டரில் பத்து லட்சம் பின்தொடர்பவர்கள் முதலில் பெறப்போவது யார் என்னும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பதையும் ஏற்படுத்தின.

சிஎன்என்க்கு சாவல் என்பது போன்ற வியப்போடு இந்த போட்டியை இணையவாசிகள் மிகுந்த ஈடுபாட்டோடு கவனிக்க, இருதரப்பிலும் பின் தொடர்பவர் களை சேர்க்கும் முயற்சியும் தீவிரமானது.

குட்சர் தனது டிவிட்டர் கணக்கு மூலம் ஆதரவு திரட்ட ரசிகர்களும், டிவிட்டர் அபிமானிகளும் அவருக்கு துணையாக களமிறங்கினர். சிஎன்என் நிறுவனமும் தன் பங்கிற்கு பின் தொடர்பவர்களை சேர்த்தது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியை விட பரபரப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் ஆஷ்டன் குட்சரே வெற்றி பெற்றார். சிஎன்என் நிறுவனத்தை விட சில மணி நேரங்கள் முன்னதாக அவர் தனது இலக்கான பத்து லட்சம் பின் தொடர்பவர்களை பெற்று விட்டார்.

உலகப்புகழ் பெற்ற மீடியா நிறுவனத்தையே மண்ணை கவ்வ வைத்துவிட்ட சந்தோஷத்தில் குட்சர் கம்பீரமாக வெற்றி முழக்கமிட்டார். அந்த முழக்கத்தில் களிப்பு இருந்ததே தவிர கர்வம் இல்லை.

சிஎன்என் இந்த சவாலில் வெற்றி பெற்றிருந்தால் நேரடி ஒளிபரப்பில் போட்டுத் தாக்கியிருக்கும் அல்லவா? குட்சரும், தனது வெற்றியை உலகிற்கு அறிவிக்க, நேரடி இணைய ஒளிபரப்பை தேர்வு செய்தார். இணைய தொலைக்காட்சி என்று சொல்லக்கூடிய வீடியோ ஸ்டிரீமிங் தளமான அஸ்டிரிம் டிவி தளத்தின் மூலம் அவர் ரசிகர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

அவருடைய குரலில் ஒரு புரட்சியாளனின் சாயல் இருந்தது. அவரது செய்தியிலும் அதே தன்மை பிரதிபலித்தது. “ஒரு புதிய அலை உருவாகிவிட்டதை உலகிற்கு உணர்த்தி விட்டோம்’ அந்த அலை இதோ, இங்கே இப்போது எழுச்சி பெற காத்திருக்கிறது. இதை சாதித்தது நீங்கள் தான். காரணம் என்னால் பின் தொடர முடியாதே?

இப்படி கூறிய குட்சர், நாம் நினைத்தால் மீடியாவை உருவாக்க முடியும்: உருவாக்குவோம்! என்றும் முழங்கினார். முடிக்கும் போது வெற்றி நமதே என்றும் ஆர்ப்பரித்தார்.

விஷயம் அதுதான்! டிவிட்டர் போன்ற சாதனங்கள் மீடியாவை மக்களின் கைகளுக்கு கொண்டு வந்துள்ளன. அதனை நிரூபித்த சந்தோஷத்தை தான் குட்சர் உற்சாகமாக வெளிப்படுத்தி யிருந்தார்.

குட்சர், நிச்சயம் சாமான்யர் இல்லை என்றாலும், சிஎன்என் போன்ற மீடியாவுக்கு நிகரான ஆதரவுக்குரலை தனி நபராலும் திரட்ட முடியும் என்று உணர்த்த முற்பட்டதில் அவரை சராசரி மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த சவாலில் மற்றொரு முக்கியமான விஷயம் தான் வெற்றி பெற்றால் ஒரு லட்சம் டாலரை மலேரியா ஒழிப்பு அமைப்பிற்கு நன்கொடையாக தருவதாக குட்சர் அறிவித்திருந்ததுதான். சொன்னபடியே நன்கொடையையும் வழங்கிவிட்டார்.

இந்த நல்ல நோக்கமும் அவருக்கு ஆதரவைத் திரட்டித் தந்திருக்கலாம். அது மட்டும் அல்ல வருங்காலத்தில் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக டிவிட்டர் மூலம் ஆதரவு திரட்டுவதில் யார் வேண்டு மானாலும் ஈடுபட்டு வெற்றி பெறலாம்.

டிவிட்டர் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சாதனம் மட்டும் அல்ல. கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான சாதனமும் தான். அதனை கொண்டு எதனையும் சாதிக்க முடியும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இவர் டிவிட்டர் மகாராஜா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *