ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்.
இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வடிவம். தொழிநுட்ப நோக்கில் சொல்வது என்றால் ஒரு வகையான பிட்மேப் இமேஜ் வடிவம். 1987 ல் கம்ப்யூசர்வ் எனும் நிறுவனம் தனது செய்தி பலகை சேவைக்காக இந்த வடிவத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு வலை (Web ) உலகில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டிஜிட்டல்மயமாக்கலின் தேவையாக உருவான பல கோப்பு இதுவும் ஒன்று. இணையத்தில் பதிவேற்ற வேண்டும் எனில் எல்லாவற்றையும் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றியாக வேண்டும். புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும் எனில் அவற்றையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும்.
ஆனால் புகைப்படங்களில் டிஜிட்டலுக்கு மாற்றுவதில் உள்ள பிரச்சனை என்னவெனில், அதன் கோப்பு அளவு பெரிதாக இருக்கும். அளவில் சிறிய படம் என்றால் கூட அதன் டிஜிட்டல் கோப்பு அளவு பெரிதாக இருக்கும். ஆக, படத்தை பதிவேற்றும் போதும் சரி, தரவிறக்கம் போதும் சரி, இந்த செயல்முறையின் சுமை தாங்காமல் அந்த கால இணைய வேகம் திண்டாடி தடுமாறியது.
இதை சமாளிக்க புகைப்படங்களை சுருக்கி அவற்றை வேறு கோப்பு வடிவில் மாற்றும் தேவை ஏற்பட்டது. இப்படி அறிமுகமானது தான் ஜிப் கோப்பு வடிவம். மூலத்தின் தரத்தை பாதிக்காமலே அதை சுருக்கியது தான் ஜிப்பின் தனித்தன்மை. எனவே பரிமாற்றமும் எளிதாக இருக்கும் ஆனால் தரத்தில் அதிக பாதிப்பு இருக்காது.
ஆனால், இந்த தனித்தன்மையை மீறி, ஜிப் வடிவத்தில் சிலகுறைகள் இருந்தன. இந்த வடிவம் 256 வண்ண பேலட்களை மட்டும் கொண்டிருக்கும். எனவே வண்ணமயமான புகைப்படங்களை விட, லோகோ போன்றவற்றுக்கே இது ஏற்றதாக இருந்தது. கிராபிக்ஸ் வகை சித்திரங்களுக்கும் உகந்ததாக இருந்தது.
1990 களில் வலைத்தளங்கள் உருவாகத்துவங்கிய போது அவற்றுக்கான பேனர்கள், லோகோ, பட்டன் போன்றவை உருவாக்க ஜிப்கள் கைகொடுத்தன. மற்றபடி புகைப்படங்களுக்கு ஜெபெக் கோப்பு வடிவமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் இது தொடர்கிறது.
ஜிப் எனும் போது, இணையம் முழுவதும் பார்க்க கூடிய அனிமேஷன் சித்திரங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். அசையும் ஜிப்கள் என்று சொல்லக்கூடிய இவற்றை ஜிப்களின் நீட்டிப்பு என்று சொல்லலாம். அனிமேட்டட் ஜின் என இவை குறிப்பிடப்படுகின்றன.
ஒரு கோப்பில் பல உருவங்கள் அல்லது பிரேம்கள் இடம் பெறும் போது அவை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். இந்த படங்களை வரிசையாக தோன்றச்செய்ய முடியும். இது அனிமேஷன் சித்திரமாக தோன்றும். ஒரே வகை படம் என்பதால் அவை மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். இதை அனிமேஷன் இன் ஏ லூப் என்கின்றனர். அதாவது சுழற்சி முறையிலான அனிமேஷன்.
இணையத்தில் நாம் பார்த்து ரசிக்கும் ஜிப்கள் பெரும்பாலும் இந்த வகை அனிமேட்டட் ஜிப்கள் தான். இணையத்தின் முதல் பிரபல பிரவுசரான நெட்ஸ்கேப் இந்த வகை ஜிப் அனிமேஷனை பயன்படுத்தியது. அதன் பிறகு மற்ற பிரவுசர்களுக்கு பரவி இணையம் முழுவதும் பிரபலமானது.
இன்று ஜிப்கள் டிஜிட்டல் கலை வடிவமாகவே உருவெடுத்துள்ளன. இவ்வளவு ஏன் ஜிப்களுக்கு என்று தனியே தேடியந்திரமும் இருக்கிறது. ஜிப்பி என்பது அதன் பெயர்.
ஜிப் இணையத்தின் பழைய கோப்பு வடிவம் என்பது மட்டும் அல்ல, அதன் பெயரில் ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. ஜிப்பை எப்படி சரியாக உச்சரிப்பது என்பது தான் அது. பலரும் ஜிப்கள் என உச்சரித்தாலும் , அது கிப் என கூறுபவர்கள் இருக்கின்றனர்.
—
டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்