மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது போல டிவிட்டரில் இந்திய தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறது. டிவிட்டர் போக்குகள் பட்டியலில் இந்திய தேர்தல் தொடர்பான பதமே முதலிடம் பிடித்திருக்கிறது.
குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என்று அழைக்கப்படும் டிவிட்டரை தேர்தல் பிரசாரம் உட்பட எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.பிரசாத்தில் டிவிட்டர் பெரிய அளவில் பயன்பட்டதாக தெரியவில்லை.ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட டிவிட்டர் சிறப்பாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடையாளமாக டிவிட்டர் போக்குகளில் இந்திய தேர்தல் தொடர்பான பதம் முதல் இடம் பிடித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நேற்று இந்தியா வோட்ஸ் 09 என்னும் பதமே அதிகம் தேடப்பட்டிருக்கிறது.
உலக அளவில் இந்திய தேர்தல் ஏற்படுத்திய ஏதிர்பார்ப்பின் அடையாளமாக இதனை கருதலாம்.
அடுத்த தேர்தலில் டிவிட்டர் இன்னும் கூட தீவிரமாக பயன்படுத்தப்படலாம்.
காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சஷி தரூர் டிவிட்டரை பயன்படுத்தியவிதம் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.