ஆதிவாசிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனையாக போராடி வரும் முக்கிய செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டரில் இது தொடர்பான விவாதம் வெடித்திருக்கிறது. இந்த விவாதத்தின் மூலம் நானும் நகர்புற நக்சல் தான் எனும் பொருள்படும் ஹாஷ்டேக் மூலம் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த் செவ்வாய் கிழமை அன்று மனித உரிமை செயல்பாட்டு வழக்கறிஞர் சுதா பர்த்வாஹ் , தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்கள் பிரதமர் மோடியை கொலை செய்யும் சதி திட்டம் தொடர்பாக கைதானதாக செய்தி வெளியானாலும், பின்னர், பீமா கோரேகான் வன்முறையை தூண்டியது தொடர்பாக இவர்கள் கைதானதாக உறுதியானது. கைது செய்யப்பட்டவர்களில் பத்திரிகையாளரும் அடக்கம். இது தவிர மேலும் ஐந்து செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டன.
இந்த கைது நடவடிக்கை அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டது ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு குரலை நெறிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், இந்த கைது நடவடிக்கை விவாதமாக வெடித்துள்ளது.
இந்த விவாதத்தின் விளைவாக, பலரும் நானும் நகர்புற நக்சல் தான் என அறிவித்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக # MetooUrbanNaxal எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் பிரபலமானது.
பொதுவாக டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், குறிப்பிட்ட விஷயம் சார்ந்த பதிவுகளை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட விவாதம் சார்ந்த மைய வார்த்தையை # எனும் குறியீட்டுடன் குறிப்பிடுவதன் மூலம் ஹாஷ்டேக் செயல்படுகிறது.
செயற்பாட்டாளர்கள் கைது நடவடிக்கை டிவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பாலிவுட் திரைப்பட இயக்குனரான விவேக் அக்னிகோத்ரி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு குறும்பதிவை வெளியிட்டிருந்தார். ” நகர்புற நக்சல்களை (#UrbanNaxals) ஆதரிப்பவர்களின் பட்டியலை தயாரிக்க விரும்புகிறேன். இது எங்கே கொண்டு செல்கிறது என்று பார்க்கலாம். இதில் பங்கேற்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்” என்று அவர் கூறியிருந்தார்.; https://twitter.com/vivekagnihotri
கைதான செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சல்கள் என பொருள் வரும் படி அவர் இப்படி குறிப்பிட்டிருந்ததோடு, இவர்கள் கைதை கண்டிப்பவர்களை நகர்புற நக்சல் ஆதரவாளர்கள் என்றும் குறிப்பால் உணர்த்தியிருந்தார். விவேக் அக்னிகோத்ரி இதே பெயரில் ஒரு நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். இவர் பாஜக ஆதரவாளராக அறியப்படுகிறார். அரசு மற்றும் காவல்துறை செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள் என முத்திரை குத்தும் வழக்கம் கொண்டவராகவும் கருதபடுகிறார்.
விவேக் அக்னிகோத்ரி, எத்தனை பெரிய பட்டியலை எதிர்பார்த்தார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் எதிர்பார்த்ததையும் விட அதிக எண்ணிக்கையில் நகர்புற நக்சல்கள் டிவிட்டரில் குவிந்தனர். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், அவர் எதிர்பார்ப்பு மாறாக, பலரும் தங்களை நகர்புற நக்சல் என்று தெரிவித்துக்கொண்டனர். இதனால் நானும் நகர்புற நக்சல் தான் எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. இந்த எதிர் அலையை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பிரதிக் சின்கா என்பவர் தான் இந்த எதிர்ப்பு அலைக்கு விதை போட்டார். ஆல்ட்நியூஸ் நிறுவனரான பிரதிக் சின்கா, தனது டிவிட்டர் பக்கத்தில் விவேக் அக்னிகோத்ரியின் குறும்பதிவை குறிப்பிட்டு அதற்கு பதில் அளிக்கும் வகையில், ” நான் உங்கள் பட்டியலில் இடம்பெற விரும்புகிறேன்” என தெரிவித்திருந்த்தோடு, நானும் நகர்புற நக்சல் தான் (#MeTooUrbanNaxal ) எனும் பட்டியலை உருவாக்கி உதவி செய்வோம் என்றும் கூறியிருந்தார். ; https://twitter.com/free_thinker
செயற்பாட்டாளர்கள் நக்சல்கள் என்றால் நானுக் நகர்புற நக்சல் தான் என அவர் நெத்தியடியாக கூறியிருந்தார். டிவிட்டரில் பலரும் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் பங்கிற்கு, நானும் நகர்புற நக்சல் தான் என தெரிவித்து, இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவிட்டனர்.
ராஜு சர்கார் என்பவர், செயற்பாட்டாளர் சுதா பரவ்த்வாஜ் நகர்புற நக்சல் என்றால் நானும் நகர்புற நக்சல் தான் என்று கூறினார். ஹர்ஷவர்தன் என்பவர் ’அரசை விமர்சிப்பது நகர்புற நக்சல் என்றால், நானும் #MeTooUrbanNaxal என்று கூறியிருந்தார்.
அக்ஷய் குப்தா என்பவர், பக்த் சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பார் என தெரிவித்திருந்தார். அமிரிதா மதுகல்யா என்பவர் “ நான் யோசிக்கிறேன், நான் வாசிக்கிறேன்,.நான் விவாதிக்கிறேன், நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன், நான் விமர்சிக்கிறேன், நான் இருக்கிறேன், “ என கூறியிருந்தார். ” கேள்வி கேப்டது, மனித நேயத்திற்காக, கருத்துரிமைக்காக எழுந்து நிற்பது நகர்புற நக்சல் என்றால் நானும் அவர்களில் ஒருவர் என பெருமைபடுகிறேன்” என கூறியிருந்தார்.
செல்வின் தாமஸ் என்பவர், “மோடி, அமித்ஷாவுக்கு எதிராக பேசுபவர்கள் நகர்புற நக்சல் என்றால் நானும் தான்” என தெரிவித்திருந்தார். இப்படி பலரும், தங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்ததோடு, மறக்காமல் #MeTooUrbanNaxal எனும் ஹாஷ்டேகை சேர்த்திருந்தனர். இதைப்பார்த்த மேலும் பலரும் இதே போன்ற கருத்துக்களை பதிவு செய்தனர். இதன் விளைவாக #MeTooUrbanNaxal எனும் ஹாஷ்டேகுடன் ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள் வெளியாகி இந்த பதம் பிரபலமானது.
செயற்பாட்டாளர்கள் கைது ஜனநாயக விரோதமானது மற்றும், எதிர்ப்பு குரலை நசுக்கும் செயல் என பரவலாக கருதப்படும் நிலையில், டிவிட்டர் பயனாளிகள் இந்த கருத்தை அழுதந்திருத்தமாக பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் டிவிட்டரில் உயிர்த்தெழுந்த ஹாஷ்டேக் இயக்கங்கள் போலவே இந்த பதிவுகளும் ஒரு இயக்கமாக அமைந்துள்ளன.