இந்தியாவின் முன்னோடி எம்.பி

m_Dr_Shashi_Tharoorகேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என்று சொல்லலாம்.

படித்தவர் ,பண்பாளர், முன்னாள் ஐ நா அதிகாரி என்ற முறையில் நன்கு அறிமுகமானவர் என்பதையெல்லாம் மீறி முதல் முறை எம் பியான அவரை முன்னோடி எம் பி என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றலாம்.

மக்கள் பிரதிநிதியாக தரூர் எப்ப‌டி செயல்படுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாலும் ,அவரை முன்னோடி எம் பி யாக கருதலாம் என கூறுவதற்கான காரணம் இல்லாமல் இல்லை.

தரூர் டிவிட்டரை பயன்படுத்தி வரும் விதமே இதற்கு காரண‌ம்.

டிவிட்ட‌ர் ப‌ய‌னுள்ள‌ சேவை என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இருக்க‌ முடியாது.பிர‌ப‌ல‌ங்க‌ளும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளும் டிவிட்ட‌ரை விரும்பி ப‌ய‌ன் ப‌டுத்திம் வ‌ருகின்ற‌ன‌ர். த‌லைவ‌ர்க‌ள் சில‌ரும் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

அப்ப‌டியிருக்க‌ த‌ரூர் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌லேயே அவ‌ரை சிற‌ந்த‌ எம் பி என்று சொல்ல‌ முடியாது தான்.

ஆனால் தரூர் டிவிட்டரை பயன்படுத்தும் விதமே முக்கியமானது.

140 எழுத்துக்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டரை கொண்டு உடனுக்குடன் தகவல்களை வெளியிட முடியும்.இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள் என்பதை டிவிட்டர் மூலம் எளிதாக தெரிவிக்கலாம்.

இந்த உடனடித்தன்மையே டிவிட்டரின் தனிச்சிறப்பு.இந்த தன்மையை கொண்டு டிவிட்டரை பூகம்பம் போன்ற நேரங்களில் அரிய தகவல்களை தெரிவிக்க டிவிட்டரை பயன்படுத்தலாம்.மும்பை தீவிரவாத தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்டவ்ர்கள் மற்றும் தாக்குதலின் தீவிரம் குறீத்த விவரங்கள் டிவிட்டர் வழியே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நிற்க‌ டிவிட்டரை இதே வித‌மாக தேர்தல் பிரசாரத்திற்காகவும் பயன்படுத்த முடியும்.தேர்த‌ல் முடிவுக‌ளை வெளியிட‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.வாக்கு எண்ணிக்கை ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அது ப‌ற்றி த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ டிவிட்டரை விட‌ பொருத்த‌மான‌ சேவை வேறு என்ன‌ இருக்க‌ முடியாது.

வேட்பாள‌ரே இதை செய்யும் போது இன்னும் சிற‌ப்பாக‌ இருக்கும். த‌க‌வ‌லை தெரிந்து கொள்வ‌தோடு வேட்பாள‌ரின் ம‌ன‌நிலையையும் டிவிட்டர் பதிவுகளின் மூலம் புரிந்து கொள்ள‌ முடியும்.

த‌ரூர் இத‌னை தான் செய்திருக்கிறார்.

டிவிட்ட‌ர் க‌ண‌க்கு வைத்திருக்கும் அவ‌ர் வாக்கு எண்ணிக்கை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ நிலையில் அவ‌ப்போது வாக்கு எண்ணிக்கை குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த‌ ப‌திவுக‌ளில் அவ‌ர‌து ம‌ன‌ ஓட்டம் துல்லிய‌மாக‌ பிர‌திப‌லித்த‌து.

30 ஆயிரம் வாக்குகள் முன்னில பெற்றுள்ளேன். ந‌ல்ல‌ சேதி தான் என‌ ஒரு க‌ட்ட‌த்தில் தெரிவித்த‌ அவ‌ர் அடுத்த‌தாக‌ 59000 வாக்குக‌ள் முன்னிலை பெற்றுவிட்டேன் ,இனி வெற்றி தான் என‌ நினைக்கிறேன் என‌ குறிப்பிட்டார். அத‌ன் பிற‌கு முன்னிலை ஒரு ல‌ட்ச‌த்தை தாண்டிவிட்ட‌து ,என்ன‌ல் இன்னும் ந‌ம்ப‌முடிய‌வில்லை என‌ விய‌ந்து போனார்.

வேறு எந்த காங் வேட்பாளரையும் விட அதிக வாகு வித்தியாசத்தில் வென்றிருக்கிறேன் ,மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

டிவிட்டரில் அவரை பின்தொடர்பவராக இருந்தால் வேட்பாளராக அவர் என்ன நினைக்கிறார் என்பதை தொடர்ந்து கவணித்திருக்க முடியும்.

இப்போது சொல்லுங்கள் வேறு எந்த வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையின் போது என்ன நனைத்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?தருர் டிவிட்டர் மூலம் தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டதால் வேட்பாளராக அவ‌ர் மன‌நிலையை அறீவது சாத்தியமானது.

அது மட்டுமல்ல வெற்றி பெற்ற பிறகும் த‌ரூர் டிவிட்டர் செய்து கொண்டே இருந்தார் என்பதே முக்கியமான‌து..

என‌து தொகுதி வ‌ழியே வெற்றி ஊர்வ‌ல‌ம் சென்றுகொண்டிருக்கிறேன். எங்கும் ம‌கிழ்ச்சி வெள்ள‌ம் என வெற்றிக்குப்பின்ன‌ர் குறீப்பிட்ட‌ அவ‌ர் எம் பியாக் முத‌ல் நாள் என்று ம‌றுநாள் த‌ன‌து ப‌திவை துவ‌க்கினார்.இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையால் பிடித்துச்செல்ல‌ப்ப‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ள் விடுத‌லைக்காக‌ வாதாடினேன் என்றூம் குறிப்பிட்டிருந்தார்.

தொகுதியில் ஒரு க‌ல‌வர‌ம் அவ‌ச‌ரமாக‌ சென்றுக்கொண்டிருக்கிறேன் என்றூம் இன்னொரு ப‌திவில் சொல்லியிருந்தார்.

இது தான் விஷ‌ய‌ம் அவ‌ர் என்ன‌ செய்கிறார் என்ப‌தையும் டிவிட்ட‌ர் மூல‌ம் அறிந்துகொண்டு விட‌லாம்.மற்றொரு ப‌திவில் இது வ‌ரை 100 பேருக்கு மேல் பார்த்து பேசிவிட்டேன். இன்று ஞாயிற்றுக்கிழ‌மை . அர‌சிய‌ல்வாதிக்கு எது விடுமுறை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆக‌ த‌ரூர் தொட‌ர்ந்து டிவிட்ட‌ர் செய்து வ‌ந்தார் என்றால் அவ‌ர் என்ன‌ செய்து கொன்டிருக்கிறார் என்ப‌தை தொகுது ம‌க்க‌ள் சுல‌ப‌மாக‌ தெரிந்து கொள்ள‌லாம். ஒரு ம‌க்க‌ள் பிர‌திநிதியாக‌ அவ‌ர் எப்ப‌டி செய‌ல்ப‌டுகிறார் என்றும் க‌ண்காணிக்க‌ முடியும்.

டிவிட்ட‌ர் ப‌திவுகளின் மூல‌ம் அவ‌ர் எவ‌ற்றை முக்கிய‌மாக‌ க‌ருதுகிறார், எவ‌ற்றை அல‌ட்சிய‌ப்ப‌டுத்துகிறார் என்றும் அறீய‌ முடியும். டிவிட்ட‌ர் மூல‌மே தொட‌ர்பு கொண்டு வாக்காள‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை சொல்ல‌ முடியும் . முக்குஇஅய் பிர‌ச்ச்னை அல்ல‌து விவாத‌ங்க‌ளின் போது எம்பியின் நிலை என்ன‌ என்ப‌தையும் டிவிட்ட‌ரில் வெளிடடாக‌ வேண்டும்.

த‌ரூர் இதையெல்லாம் செய்வாரா என்று தெரிய‌வில்லை. ஆனால் ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் டிவிட்ட‌ர் முலம் தொட‌ர்பு கொள்ளும் போது என்ன‌வெல்லாம் சாத்திய‌ம் என‌ அவ‌ர் நின‌த்துப்பார்க்க‌ வைத்திருக்கிறார்.

இவ‌ற்றை செய்தார் என்றால் அவ‌ர் தான் முன்னோடி எம் பி.

—–

link;
http://twitter.com/ShashiTharoor

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *