இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி

oov7c5ocjfqpk69ev9uzபுத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL)  ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் முழு நாவல்களை இன்ஸ்டாகிராமிலேயே படித்துவிடலாம்.

வீடியோ வடிவில் கதை சொல்ல உதவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் வசதியை பயன்படுத்தி நியூயார்க் பொது நூலகம் இந்த இன்ஸ்டா நாவல்களை உருவாக்கியுள்ளது. இதற்காக ’மதர் இன் நியூயார்க்’ எனும் விளம்பர நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் தான், இன்ஸ்டா நாவல்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளது.

சிறுவர் இலக்கியத்தில் அழியா புகழ் பெற்ற லூயிஸ் கரோல் எழுதிய ‘அலைஸ் இன் தி வொண்டர்லாண்ட்’ நாவல், இந்த வரிசையில் முதல் புத்தகமாக அறிமுகமாகி இருக்கிறது. அடுத்ததாக சார்லட்டே பெர்கின்சின், ’தி யெல்லோ வால்பேப்பர்’ மற்றும் பிரான்ஸ் காப்காவின் ’மெட்டமார்பாசிஸ்’ ஆகிய நாவல்கள் இன்ஸ்டா நாவல்களாக வெளியாக உள்ளன.

இன்ஸ்டாகிராமில் எப்படி படங்களையும், வீடியோக்களையும் பார்ப்போமோ அதே போல, இன்ஸ்டா நாவல்களையும் வாசிக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராமில் நியூயார்க் பொது நூலகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தை  (https://www.instagram.com/nypl/) பின் தொடர்வதன் மூலம் நாவல்களை வாசிக்கலாம். அலைஸ் இன் தி வொண்டர்லாண்ட் நாவல் இரு பகுதிகளாக வெளியாகியுள்ளது. முதல் பகுதியில் 80 பக்கங்கள் உள்ளன.

நாவலுக்கான பக்கத்தில் கீழே கைவிரலை அழுத்தினால் அதில் உள்ள பக்கங்களை படிக்கலாம். கைவிரலை எடுத்துவிட்டால் அடுத்த பக்கம் திருப்ப படும். இப்படி ஒவ்வொரு பக்கமாக படிக்கலாம். பின்னோக்கி செல்ல இடதுபுறமாக கைவிரலால் செய்கை செய்ய வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை வாசிப்பதோடு, அதற்கான விளக்க சித்திரங்கள் மற்றும் அன்மேஷன் படங்களையும் இடையில் காணலாம்.

டிஜிட்டல் யுகத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்து இளம் தலைமுறை கேட்ஜெட் திரைகளில் மூழ்கி இருப்பதாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் நூலகங்கள் மியூசியங்களாக மாறும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்த இரட்டை சவாலுக்கு நடுவே நூலகங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் சபாஷ் போட வைக்கும் செயலாக இன்ஸ்டா நாவல்கள் அமைகிறது.

நெட்டிசன்கள் அதிக நேரம் செலவிடும் ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் அதில் பிரபலமாக இருக்கும் சேவைகளில் ஒன்றான புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் இரண்டையும் இணைத்து, நியூயார்க் பொது நூலகம் இன்ஸ்டா நாவல்களை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து புதிய நாவல்கள் இந்த வடிவில் வெளியாகும் போது, இந்த பக்கமே ஒரு டிஜிட்டல் புத்தக அலமாரியாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

’நூலகம் என்பது புத்தகங்கள் புழுதி படிந்து கிடக்கும் கட்டிடம் மட்டும் அல்ல என மக்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம்” என்று நியூயார்க் பொது நூலக தலைமை நூலகர் கிறிஸ்டோபர் பிலாட் பார்ட்யூன் இதழிடம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் யுகத்தில் வாசகர்களை, தேடிச்செல்வதே சரியாக இருக்கும் என்பதோடு, அவர்கள் விரும்பும் நவீன வடிவிலேயே புத்தகங்களை வழங்குவது சரியாக இருக்கும் எனும் எண்ணத்தில் அமெரிக்க நூலகம் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது. மற்ற நூலகங்களும் இதே போல யோசிக்கத்துவங்கி நவீன் டிஜிட்டல் சேவைகளை பொருத்தமான முறையில் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டால், இது போன்ற மேலும் பல முன்னோடி முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.

நியூயார்க் பொது நூலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/nypl/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *