இணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்!

_55c0f17e-19a2-11e9-b190-a6170a1d34c9சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவாலில் பங்கேற்க பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம், இரு வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் போதுமானது. அதனுடன் 10 ஆண்டு சவால் (#10YearChallenge ) எனும் ஹாஷ்டேகை சேர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

இதற்குள் நீங்களே இது பற்றி ஊகித்திருக்கலாம். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், இந்த சவால் தான் வைரலாக பரவி பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் உங்கள் நண்பர்கள் இரு வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம். ஏன், நீங்களே கூட, இந்த சவாலிலும் பங்கேற்றிருக்கலாம்.

இந்த பரபரப்பை மீறி, அதென்ன 10 ஆண்டு சவால் என புரியாமல் கேட்க கூடிய அப்பாவிகளுக்காக, இந்த புதிய வைரல் போக்கு பற்றி சுருக்கமான அறிமுகம்: 2009 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தங்கள் புகைப்படத்துடன், 2019 ல் எடுக்கப்பட்ட தற்போதைய புகைப்படத்தை அருகருகே வைத்து, #10YearChallenge எனும் ஹாஷ்டேகுடன் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதுவே 10 ஆண்டு சவால் என குறிப்பிடப்படுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் இந்த வகை படங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சாமானியர்கள் மட்டும் அல்ல, ஹாலிவுட் பிரபலங்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை நட்சத்திரங்கள் பலரும் இந்த சவாலில் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

நட்சத்திரங்களின் பங்கேற்பு, இந்த சவாலை மேலும் பிரபலமாக்கி இன்னும் வைரலாக பரவ வைத்திருக்கிறது. இதனிடையே மீம் உருவாக்குனர்களும், இந்த போக்கில் ஐக்கியமாகி, 10 ஆண்டு சவால் கருத்தாக்கத்தை கேலியாகவும், கிண்டலாகவும் அணுகி தங்கள் பங்கிற்கு இதை பிரபலமாக்கி கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், கிரிக்கெட் உள்ளிட்ட துறைகளுக்கும் இந்த சவால் பரவியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், தல டோணி, ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், அவரது ரசிகர்கள், டோணியின் 2009 ம் ஆண்டு படம் மற்றும் 2019 ஆண்டு படத்தை ஒன்றாக இடம்பெற வைத்து, 10 ஆண்டுகளுக்குப்பிறகும் டோணி சிக்சர்களாக விளாசிக்கொண்டிருக்கிறார் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

கோஹ்லி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் படமும் இதே முறையில் பகிரப்பட்டுள்ளன. இளம் வீரர் பிரித்வி ஷா தங் பங்கிற்கு பத்தாண்டு சவாலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணையத்தில் இந்த போக்கு வைரலாவதை கவனித்த பாஜக, # 5 ஆண்டு சவால் எனும் ஹாஷ்டேகை உருவாக்கி பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை பிரச்சாரம் செய்ய பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி வெவ்வேறு துறைகளுக்கு #10 ஆண்டு சவால் பரவிக்கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, எதற்கு இந்த சவால், இது எங்கிருந்து துச்வங்கியது? போன்ற கேள்விகள் எழலாம். இணையத்தில் வைரலான பல போக்குகளைப்போல, இந்த சவாலும், எங்கே, யாரால் துவக்கப்பட்டது என்று சரியாக தெரியவில்லை. இதன் நோக்கமும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இரு வேறு கால இடைவெளியில் புகைப்படங்களை ஒப்பிட்டு பகிர்ந்து கொள்வது பலருக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

2019 ம் ஆண்டு பிறந்த நிலையில், 2009 ம் ஆண்டில் இருந்த தோற்றத்தை தற்போதைய தோற்றத்துடன் ஒப்பிட்டு, மாற்றம் அல்லது வளர்ச்சி பற்றி பேசுவது ஈர்ப்புடையதாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு, #2009 vs. 2019 சவால், # குளோஅப் சவால் Glow Up Challenge)  உள்ளிட்ட வேறு பல ஹாஷ்டேகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்றாலும் 10 ஆண்டு சவால் டேக் தான் முன்னிலை பெற்றிருக்கிறது.

DxNAr3PVYAAELufஇந்த பகிர்வுகளால் என்ன பயன்? இந்த கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை. சமூக ஊடகத்தில் பரவும் இன்னொரு நேரத்தை வீணாக்கும் போக்கு என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சுய அழகை ரசித்துக்கொள்ளும் போக்கின் வெளிப்பாடு இது என்ற விமர்சசனும் முன்வைக்கப்படுகிறது. கேலியும், கிண்டலும் தான் இதன் பின்னே இருப்பவை என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி பலவிதமாக இந்த போக்கை அலசி ஆராயலாம் என்றாலும், இதன் நோக்கம் தொடர்பாக சொல்லப்படும் இன்னொரு கருத்து உங்களை திகைப்பில் ஆழ்த்தலாம். இந்த போக்கே பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிவிட்டது என அந்த கருத்து அமைந்துள்ளது. வயர்டு இதழில் இது தொடர்பான விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.

பேஸ்புக் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? எல்லாம் தகவல் திரட்டும் நோக்கம் தான் என்கின்றனர். பேசியல் ரிகக்னைசேஷன் என சொல்லப்படும் முகமறிதல் அல்லது முக உணர்வு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. 2017 ம் ஆண்டு இதற்கான நுட்பம் பேஸ்புக்கால் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸ்புக்கில் தோன்றும் படங்களில், நண்பர்களை டேக் செய்யலாமா? என கேட்க்கப்படுவது எல்லாம் இதன் அங்கம் தான்.

முகங்களை கண்டறிந்து அதற்கேற்ப சேவைகளையும், விளம்பரங்களையும் வகுப்பது பேஸ்புக்கின் நோக்கமாக இருக்கலாம். முகமறிதல் நுட்பத்திற்கான உருவாக்கப்பட்ட அல்கோரிதம், மனித முகங்களை உணர்ந்து கொள்வதில் மேம்பட வேண்டும் அல்லது இப்போதுள்ள குறைகளை களைந்து கொள்ள வேண்டும் எனில், அதற்கு தரவுகள் தேவை. அதாவது பலவித முகங்கள் தேவை.

10 ஆண்டு சவாலில் பகிரப்படும் படங்கள் இதற்கு பொருத்தமாக அமைகின்றன. 10 ஆண்டு இடைவெளியில் எடுக்கப்பட்ட ஒருவரின் படங்கள், வயதாகும் தன்மை குறித்து நுணுக்கமான விஷயங்களை உணர்த்தக்கூடியதாக இருப்பது அல்கோரிதம் கற்றுக்கொள்ள உதவும் என கருதப்படுகிறது. எனவே, பேஸ்புக் இந்த போக்கை உருவாக்கியிருக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

Dw7H1BkUwAAg0fSஆனால் பேஸ்புக் நிறுவனம் இதை மறுத்துள்ளது. இது பயனாளிகள் தாங்களாக உருவாக்கி கொண்ட மீம் நிகழ்வு என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த போக்கிற்காக பேஸ்புக் மீது பழி போட முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நோக்கில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் படங்கள் பயன்படும் என்று சொல்லப்படுவதை மறுப்பதற்கில்லை. பொதுவாகவே உலகம் முழுவதும் முக உணர்வு நுட்பம் தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு முயற்சிகள் தனிநபர்களின் அந்தரங்கத்தில் ஊடுருபவையாக அமைந்துள்ளன. எனவே, தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் படங்களை பகிர்ந்து கொள்ளும் முன் கொஞ்சம் யோசிப்பது காலத்தின் கட்டாயம்.

இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே, இந்த போக்கு வேறு பக்கமாக திசை திரும்பியுள்ளது. அது வரவேற்க கூடியதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் புவி வெப்பமாதல் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், 10 ஆண்டு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பத்தாண்டு இடைவெளியில் மாபெரும் ஏரி பரப்பு சுருங்கி உள்ளதை ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்னொருவர் ஆர்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். விஞ்ஞானிகள் பலரும், இதே போன்ற படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதே போல, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் 2009 மற்றும் 2019 ல் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் படங்கள் மூலம் சர்வதேச அரசியலை பேசவும் இந்த போக்கு பயன்படத்துவங்கியிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *