சுயேட்சை மென்பொருளாளர்களை கண்டறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்படி அண்மையில் கண்ணில் பட்டவர், பீட்டர் தலேகிஸ் (Peter Thaleikis). பீட்டர் தன்னை பொறியாளர், உருவாக்குபவர், ஓபன்சோர்ஸ் அபிமானி என்று வலைப்பதிவி தன்னைப்பற்றி அறிமுகம் செய்திருக்கிறார்.
பீட்டரிடம் என்ன சுவாரஸ்யம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், பீட்டரைப்போன்ற சுயேட்சை மென்பொருளாளர்களிடம் என்ன சிறப்பு என குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜக்கர்பர்க் போல, ஜேக் டோர்சி போல எல்லாம் பலரும் அறிந்த நிறுவனர்கள் அல்ல. அப்படி ஆகும் விருப்பமும் இல்லாதவர்கள் என நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் இவர்கள் ஜக்கர்பர்குகள் உருவாக்கும் பேஸ்புக்குகளில் தங்கள் காலத்தை கழிக்கும் மென்பொருள் ஊழியர்களும் அல்ல.
மாறாக இவர்கள் தங்களுக்கு தெரிந்த கோடிங் திறனை வைத்துக்கொண்டு, மனதுக்கு விரும்பிய பிராஜக்ட்களை செய்து, இடையே நேரம் கிடைக்கும் போது அல்லது ஊக்கம் உந்தி தள்ளும் போது சின்னதாக ஒரு சேவையை உருவாக்கி உலாவ விடுபவர்கள். இந்த சேவையை கொஞ்சம் பெருமிதம், எதிர்பார்ப்புடன் இணையத்தில் அறிமுகம் செய்து விட்டு தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
பீட்டரும் அப்படி தான். மென்பொருள் சேவையை கிளையண்ட்களுக்கு வழங்கி வருபவர், அண்மையில் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறார். விச்லாகின் (https://whichlogin.com/ ) என்பது தான் அந்த சேவையின் பெயர்.
மிக எளிமையான சேவை தான் இது. 20 நொடியில் இந்த சேவை செயல்படும் விதத்தை புரிந்து கொள்ளலாம் என்று இதன் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால், நீங்களும், நானும் இன்னும் பல இணையவாசிகளும் உணரும் பிரச்சனைக்கான அழகான தீர்வாக அமைகிறது என்பது தான். புதிய இணையதளங்களில் உறுப்பினராக சேரும் போது எந்த சேவை கொண்டு லாகின் செய்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அந்த பிரச்சனை. இன்னும் புரியவில்லை எனில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.
புதிய இணையதளங்களில் உறுப்பினராக சேர வேண்டும் எனில், அதில் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள வேண்டும். இப்படி எத்தனை பயணர் பெயர், எத்தனை பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வது எனும் கேள்விக்கு பதிலாக பல தளங்கள் எளிய தீர்வை அளிக்கின்றன. அதாவது புதிதாக லாகின் பதிவு செய்து கொள்ளாமல், ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தும் பிரபல சேவையின் லாகின் வசதியையே பயன்படுத்தலாம் என்பது இந்த வழி. இப்படி ஜிமெயில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவை கணக்குகளை நாம் இணையத்தில் புதிதாக நுழைய பயன்படுத்தலாம். ( இந்த பழக்கம் ரிஸ்கானது என்பது வேறு விஷயம்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவெனில், புதிதாக ஒரு சேவையில் ஜிமெயில் அல்லது பேஸ்புக் கொண்டு பதிவு செய்திருப்போம். அதன் பிறகு அந்த சேவையை மறந்திருப்போம். பின்னர் திடிரென அந்த சேவையில் நுழைய நினைத்தால், எந்த சேவையை லாகினாக வைத்துக்கொண்டோம் என்பதை மறந்துவிட்டிருப்போம். பேஸ்புக் கொண்டு உள்ளே போவதா? ஜிமெயில் கொண்டு உள்ளே போவதா? என குழப்பமாக இருக்கும்.
இப்படி பலரும் எதிர்கொள்ளக்கூடிய இணைய பிரச்சனைக்கு தான் விச்லாகின் தீர்வாகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான நீட்டிப்பு ( ஆட் ஆன்) சேவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை உங்கள் பிரவுசரில் நிறுவிக்கொண்டு விட்டால், அதன் பிறகு இந்த சேவை நீங்கள் லாகினுக்கு பயன்படுத்தும் கணக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு அடையாளம் காட்டும். ஒரு சேவைக்குள் நுழைய முற்படும் போது, அதில் ஜிமெயில் அல்லது பேஸ்புக் கொண்டு பதிவு செய்தீர்கள் என இந்த தளம் உணர்த்தும்.
ஆக, இணையத்தில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் இது போன்ற நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வான சேவையை உருவாக்குவது தான் சுயேட்சை மென்பொருளாளர்களின் ஸ்பெஷாலிட்டி. பீட்டரும் இதை தான் செய்திருக்கிறார். லாகின் குழப்பம் தனக்கும் இருந்த நிலையில் சக இணையவாசி ஒருவர் இதே பிரச்சனையை டிவிட்டரில் தெரிவித்த போது, லாகினை அடையாளம் காண்பதற்கான சேவையை உருவாக்கும் ஊக்கம் உண்டானதாக தனது வலைப்பதிவில் அவர் எழுதியிருக்கிறார்.
பாஸ்வேர்டு மற்றும் லாகின் விவரங்களை சேமித்து வைப்பதில்லை என இந்த சேவை உறுதி அளிக்கிறது. ஒரு 4 டாலர் கொடுத்து தரவிற்க்கினால் ஆயுள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாமாம்.
–