முதலில் ஒரு டிஸ்கிளைமர்- அவெஞர்ஸ் திரைப்பட ரசிகர்கள் இந்த பதிவை தைரியமாக படிக்கலாம். ஏனெனில், இதில் எண்ட்கேம் திரைப்படத்தின் கதை முடிவை அம்பலமாக்கும் எந்த தகவலும் கிடையாது. மாறாக, தற்போது வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ்- எண்ட்கேம் படத்தை கொண்டாடும் வகையில் கூகுள் தனது தேடியந்திரத்தில் அறிமுகம் செய்துள்ள சுவாரஸ்யமான வசதி பற்றியே இந்த பதிவு அமைகிறது.
அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையில் முந்தைய படமான, இன்பினிட்டி வார் வெளியான போது, அந்த படத்தின் முடிவை ஒட்டி சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டது தெரியுமா? தானோஸ் உங்களை என்ன செய்தார்? எனும் பெயரில் அமைந்திருந்த அந்த தளம், இந்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்து சபாஷ் போட வைத்தது. இன்பினிட்டி வாரின் முடிவில், தானோஸ் தன் கையுரையில் மாய் சகதிகளை பெற்று பாதி பிரபஞ்சத்தை அழித்துவிடுவார் அல்லவா?
இந்த முடிவை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அப்படி என்றால் உங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என கற்பனையாக பதில் சொல்லும் வகையில் இந்த தளம் அமைந்திருந்தது. அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, நீங்கள் தானோஸ் தாக்குதலில் தப்பினீர்கள் அல்லது மன்னிக்கவும் தானோஸ் உங்களை அழித்துவிட்டார் என்பது போல பதில் வரும்.
தானோஸ் அழித்த பாதி பிரபஞ்சத்தில் உங்கள் கதி என்ன என கற்பனையாக சொல்லும் இந்த தளம் மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது அனெஞ்சர்ஸ் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடைசி படமான எண்ட்கேம் வெளியாகியுள்ள நிலையில், தேடியந்திரமான கூகுள், நீங்களும் தானோஸ் ஆக வழி செய்திருக்கிறது. அது மட்டும் அல்ல, பாதி தேடல் முடிவுகளை நீங்கள் அழிக்கவும் செய்யலாம்.
ஆம், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்காக கூகுள், தானோஸ் கையில் தனது தேடல் முடிவுகளையே இறையாக வைத்திருக்கிறது.
இந்த சுவாரஸ்யமான விளையாட்டில் ஈடுபட நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கூகுள் தேடல் கட்டத்தில் தானோஸ் என ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டியது தான். உடனே தானோஸ் தொடர்பான தேடல் முடிவுகள் தோன்றும்.
வழக்கமான தகவல்களை கொண்டிருக்கும் இந்த தேடல் பக்கத்தில் கவனமாக பார்த்தால், வலது மூளையில் தானோஸின் கையுரை மந்திர கற்களோடு மின்னுவதை பார்க்கலாம். அந்த கையுரையை அழுத்திப்பாருங்கள். உடனே, தேடல் முடிவில் ஒவ்வொரு பகுதியாக பொடி பொடியாக உதிர்ந்து காணமால் போகும்.
சில நொடிகளில் பார்த்தால் பாதி முடிவுகள் இருக்காது. அவற்றை எல்லாம் தானோஸ் அழித்துவிட்டார். தேடல் பக்கத்தில் மேலே பார்த்தால, 0.46 விநாடிகளில் தேடல் முடிவுகள் எண்ணிக்கையும் பாதியாக குறைந்திருப்பதை பார்க்கலாம்.
இன்பினிட்டி வார் படத்தில் தோன்றும் பின்னணி இசையோடு, தானோஸ் ஆற்றலால் தேடல் முடிவுகளில் பாதி அழிக்கப்படும் இந்த விளையாட்டு இணையவாசிகளை பெரிதாக கவர்ந்துள்ளது. பலரும் இந்த விளையாட்டை டிவிட்டரில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் கூட, தானோசாக மாறி பாதி தேடல் முடிவுகளை அழிக்கலாம்!