தானோஸ் உங்களை அழித்தாரா?

Screenshot_2018-12-30 Is there Uber Inஇந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங்களை மட்டும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இரண்டுமே மிக எளிமையான இணையதளங்கள். எளிமை தான் அவற்றின் சிறப்பம்சன். ஆனால் அந்த எளிமையை படு சுவாரஸ்யமாக்கும், புத்திசாலித்தனமான கருத்தாக்கத்தையும் அவை கொண்டிருந்தன.

முதல் இணையதளம் தானோஸ் உங்களை என்ன செய்தார் என்று அறிவதற்கானது- இந்த தளத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த ஆண்டு வெளியான மார்வெல் காவியமான இன்பினிட்டி வார்ஸ் படத்தை பார்த்திருக்க வேண்டும். அல்லது படத்தின் கதை என்ன என்றேனும் அறிந்திருக்க வேண்டும்.

படத்தில் முழு பிரபஞ்சத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் தானோஸ், அதை தடுக்க எதிர்த்து போராடும் சூப்பர் ஹீரோக்களை எல்லாம் வென்று, தான் அடைய விரும்பும் ஐந்து கற்களையும் அடைந்துவிடுவார். இதன் பயனாக படத்தின் முடிவில், பாதி பிரபஞ்சத்தை தானோஸ் அழித்து விடுவார். (உத்தேசமான கதை சுருக்கம் தான்).

கொஞ்சம் திகைக்க வைக்கும் முடிவு தான். படத்தை ஒன்றிப்பார்த்தால் இதன் தாக்கம் இன்னும் தீவிரமாக இருக்கும். இந்த படமும், அதன் முடிவும் நிறைய விவாதங்களை ஏற்படுத்தின. அடுத்த பகுதி வருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. அதை மார்வெல் பிரியர்களிடம் விட்டுவிடலாம்.

இப்போது இணையதளத்திற்கு வரலாம். தானோஸ் பாதி பிரபஞ்சத்தை அழித்தார் என்றால், பூமியில் இருந்தவர் கதி என்னாச்சு? நீங்களும், நானும் என்ன ஆனோம்? இப்படி கேள்விகள் எழு வாய்ப்பிருக்கிறது அல்லவா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக தான், டிட் தானோஸ் கில்.மீ (http://www.didthanoskill.me/) இணையதளம் அமைக்கப்பட்டது.

தானோஸ் என்னை கொன்றாரா? எனும் கேள்வி தான் இந்த தளத்தின் மையம். இந்த தளத்திற்கு விஜயம் செய்தால், இரண்டு விதமாக பதில் வருகிறது. நீங்கள் தானோசால் விட்டு வைக்கப்பட்டீர்கள். அல்லது மன்னிக்கவும் தானோசால் கொல்லப்பட்டீர்கள் என்பதாக அந்த பதில் இருக்கும். அவ்வளவு தான் இணையதளம்.

இன்பினிட்டி வார் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தானோஸ் செயல் பற்றி மார்வெல் பிரியர்கள் மத்தியில் பரபரபான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பட முடிவின் இணைய நீட்சியாக, தானோஸ் உங்களை என்ன செய்தார் எனும் கேள்விக்கு பதில் சொல்லும் இந்த தளம், டைம்லியானது மட்டும் அல்ல, சுவாரஸ்யமும், புத்திசாலித்தனமும் இணைந்தது அல்லவா?

Screenshot_2018-12-30 Did Thanos Kill Youஒரு இணையதளத்திற்கான கருத்தாக்கம் தொடர்பான மாஸ்டர்கிளாசும் கூட!

இரண்டாவது தளம், இணைய கால்டாக்சி சேவையான உபெர் தொடர்பானது. உபெர் சேவை உலகம் முழுவதும் கோலோச்சி வருகிறது. ( சர்ச்சைக்குள்ளாகி இருப்பதும் வேறு விஷயம்). எனவே, புதிய நகருக்கு செல்லும் போது, அங்கு உபெர் சேவை இருக்கிறதா? என்பதை அறிய விரும்புவது இயல்பானது தான். இந்த கேள்விக்கு விடை அளிக்க முற்படுகிறது ஈஸ் தேர் உபெர்  (https://isthereuber.in) இணையதளம்.

இந்த தளம் எந்த ஒரு நகரிலும் உபெர் சேவை இருக்கிறதா? என அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் முகப்பு பக்கத்தில், உள்ள ஈஸ் தேர் உபெர் இன் ————- எனும் பகுதியில் உங்கள் நகரின் பெயரை டைப் செய்தால், அங்கு உபெர் உண்டா இல்லையா என பதில் சொல்கிறது. உபெர் தவிர உள்ள பிற சேவைகளையும் சொல்கிறது. துல்லியமானதா எனத்தெரியவில்லை, ஆனால், மிகவும் பயனுள்ள, தேவைப்படும் எளிமையான சேவை. பொதுவாக பலருக்கும் பல நேரங்களில் எழக்கூடிய கேள்விக்கு பதில் சொல்லும் அழகான சேவை. இணைய தள ஐடியாவுக்கான இன்னொரு மாஸ்டர் கிளாஸ்.

போனசாக இன்னொரு இணைய தளம், இனியும் வேண்டாம் கூகுள் என்று மாற்று கூகுள் சேவைகளை பரிந்துரைக்கும் இந்த தளம்: https://nomoregoogle.com

இணைப்பு: http://cybersimman.com/2018/10/15/google-98/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *