டிஜிட்டல் குறிப்புகள்-7 தமிழில் ’இன்ஸ்டாகிராம்’ என்றால் என்ன?

main-qimg-16990e7eadf761bc1c9bb6fcb12205deதமிழ் மிக செழுமையான மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடினமான தொழில்நுட்ப விஷயங்களை கூட தமிழில் எளிதாக விளக்கிவிட முடியும். அதற்கான தமிழ் சொற்கள் இருக்கின்றன. புதிது புதிதாக தமிழில் தொழில்நுட்ப சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அநேகமான உலக மொழிகளில், இணையம், தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் வேறு எந்த மொழியையும் தமிழில் தான் அதிகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் உள்ள ஒரே பிரச்சனை, தொழில்நுட்ப பதங்களை நம் மொழியில் உருவாக்கும் போது, பெயர் சொற்களையும் அவ்விதம் மாற்ற வேண்டுமா என்பது தான்.
உதாரணத்திற்கு, இன்ஸ்டாகிராம் என்றால் தமிழில் என்ன பொருள். இன்ஸ்டாகிராம் என்பது ஒரு சேவை மற்றும் ஒரு நிறுவனத்தின் பெயர் என்பதால் தமிழ் உள்ளிட்ட எந்த மொழியிலும் அதன் பெயர் இன்ஸ்டாகிராம் தான்.
ஆனால், பேஸ்புக்கை முகநூல் என்று கூறும் நமக்கு இன்ஸ்டாகிராம் என்றால் படவரி என்று சொல்லத்தோன்றுகிறது.
இது தொடர்பாக கேள்வி பதில் தளமான குவோராவில், ஒரு கேள்விக்கு, இன்ஸ்டாகிராம் என்றால் படவரி என பதில் அளிக்கப்பட்டு, மற்ற வார்த்தைகளுக்கான தமிழ் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
நல்ல விஷயம் தான். புளுடூத் சேவையை ஊடலை என்று சொல்வதும், வை-பை சேவையை பகிரலை என்று சொல்வதும் சிறந்த விஷயம் தான். ஆன்லைனை இயங்கலை என சொல்வதும் அருமை.
ஆனால், ஸ்கைப்பை காயலை என்பது, வீசாட்டை, அளாவி என்பதும், டிவிட்டரை கீச்சகம் என்பதும் தேவை தானா என்று தெரியவில்லை. யூடியூப் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். வீடியோவை காணொலி என்று சொல்லலாம். ஆனால் யூடியூப்பை வலையொலி என சொல்வதால் எந்த வகையில் மொழிக்கு சேவை ஆற்றுகிறோம் எனத்தெரியவில்லை.
தமிழில் எல்லாவற்றையும் சொல்ல முடியும் தான். அதற்காக பெயர்களையும் பிராண்ட்களையும் ஏன் தமிழாக்க வேண்டும்”?
குவோரா தளத்தில் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள சிலர், பெயர்சொற்களுக்கு எல்லா மொழிகளிலும் ஒரே பெயர் தான் எனக்கூறியுள்ளனர்.
நிற்க, பேஸ்புக்கையும், டிவிட்டரையும் தமிழாக்கியவர்கள் ஏன் கூகுளை மட்டும் விட்டுவைத்துள்ளனர் எனத்தெரியவில்லை. கூகுளுக்கு தமிழில் என்ன பொருள்?
குவோரா கேள்வி பதில்: https://www.quora.com/What-is-the-Tamil-meaning-of-Instagram

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *