வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் தொடர் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்யும் சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோமோட்டோ முலம், அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அமீத் சுக்லா என்பவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார்.
நிறுவனம் வழக்கமாக செய்வது போல, இந்த ஆர்டர் தனது பங்குதாரர் ஒருவர் வாயிலாக டெலிவரி செய்யப்பட ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர் அமீத் சுக்லா, தனக்கு உணவு டெலிவரு செய்ய இருப்பவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்று தெரிந்து, அவரை மாற்றுமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அவர், டெலிவரி நபரை மாற்றுமாறு கேட்டிருக்கிறார். ஜோமேட்டோ நிறுவனம் இதை ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, அமீத் சுக்லா, இது பற்றி டிவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டார். ” @ZomatoIN நிறுவன ஆர்டரை இப்போது தான் ரத்து செய்தேன், என் உணவை டெலிவரி செய்ய இந்து அல்லாத டிரைவரை ஏற்பாடு செய்திருந்தனர். டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது. ரத்து செய்தால் பணத்தை திரும்பி அளிக்க முடியாது என்றும் கூறினார். பணம் வேண்டாம், ரத்து செய்துவிட்டேன்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்த கருத்திற்கு பலரும் பதில் அளித்துக்கொண்டிருந்த நிலையில், ஜோமேட்டோ நிறுவனம் ” உணவுக்கு மதம் இல்லை. அதுவே ஒரு மதம்” என கூறியிருந்தது.
மேலும் ஜோமேட்டோ நிறுவன, சி.இ.ஓ தீபேந்தர் கோயலும் இது தொடர்பாக பதில் அளித்து நிறுவன நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். “ இந்தியாவுக்கான எண்ணத்தில் பெருமை கொள்கிறோம்- மேலும் எங்களுடைய மதிப்புக்குறிய வாடிக்கையாளர்களின் வேறுபட்ட தன்மை குறித்தும் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் விழுமியங்களுக்கு குறுக்கே வரும் விஷயங்களால் வர்த்தகத்தை இழப்பத்து குறித்து கவலை இல்லை” என அவர் கூறியிருந்தார். https://twitter.com/deepigoyal/status/1156431524058652672
ஜோமேட்டோ நிறுவனத்தின் இந்த பதில் பரவலாக நெட்டிசன்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. வேற்று மதத்தை சேர்ந்த டெலிவரி நபரை மாற்றுவதற்கான கோரிக்கையை ஏற்காமல் இருந்ததற்கும், அதற்கு சரியான முறையில் உணவுக்கு மதம் இல்லை என பதில் அளித்ததற்கும் பலரும் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களும் ஜோமேட்டோ பதிலுக்கு டிவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
“ மதிக்கிறேன். உங்கள் செயலியை விரும்புகிறேன். இதன் பின்னே இருக்கும் நிறுவனத்தை போற்றுவதற்கான காரணத்தை அளித்ததற்கு நன்றி” என உமர் அப்துல்லா கூறியிருந்தார்.
’ இது வரை உணவு ஆர்டர் செய்ததில்லை. ஆனால் இனி ஜோமேட்டோவில் இருந்து ஆர்டர் செய்வேன் என நினைக்கிறேன்” என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, “ தீபேந்தர் கோயலுக்கு சல்யூட். நீங்கள் இந்தியாவின் உண்மை முகம். உங்களுக்காக பெருமை படுகிறேன்” என கூறியிருந்தார்.
ஜோமேட்டோவின் இந்த பதில், பல்லாயிரக்கணக்கானோரால் லைக் செய்யப்பட்டு, ரிடிவீட்டும் செய்யப்பட்டு வருகிறது. பலரும், மாற்று மத டிரைவரை மாற்றக்கோரிய வாடிக்கையாளர் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். மதம் மற்றும் சாதி அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் செயலாக இது அமையும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பதில் கருத்துகளுடன் நீண்ட விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, சர்ச்சைக்குறிய அந்த வாடிக்கையாளர் இது விரதம் இருக்கும் மாதம் என்பதால் இவ்வாறு கோரியதாக தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். எனினும் அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான டிவிட்டர் உரையாடலில், ஹலால் உணவு பற்றி தனியே ஜோமேட்டோ குறிப்பிடுவது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். பங்கேற்கும் ரெஸ்டாரண்ட்கள் அவ்வாறு கோருகின்றன என்றும், திரட்டி சேவை என்ற முறையில் ஜோமேட்டோ அனைத்து வகை ரெஸ்டாரண்ட்களையும் பட்டியலிடுகின்றது என்றும் இது தொடர்பாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.