அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் என வழிகாட்டும் புத்தக பரிந்துரை தளங்களின் வரிசையில் வரும் பிராஜக்ட் அலெக்சாண்டிரியா (http://projectalexandria.net/ ) தளம், இந்த கொஞ்சம் வித்தியாசமானது.
ஒவ்வொரு புத்தகமும், ஒரு வலைப்பின்னலுக்குள் பொருந்தும் என்பதன் அடிப்படையில் சங்கில்த்தொடர் புத்தகங்களை இது பரிந்துரைக்கிறது. அதாவது,
புத்தகங்களுக்கு இடையே இருக்க கூடிய பரவலாக அறியப்படாத தொடர்புகளின் அடிப்படையில் அடுத்து படிக்க கூடிய புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது.
இந்த பரிந்துரை செயல்படும் விதமும் சுவாரஸயமாகவே இருக்கிறது.
நீங்கள் ஏற்கனவே வாசித்த அல்லது உங்களுக்கு அறிமுகமான ஒரு புத்தகத்தில் இருந்து உங்கள் தேடலை துவங்க வேண்டும். இதற்காக, தளத்தின் இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேடல் கட்டத்தில், புத்தக பெயரை குறிப்பிட வேண்டும். பெயரை டைப் செய்யும் போது, பல்வேறு புத்தகங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது நம் மனதில் உள்ள புத்தகத்தின் தலைப்பை குறிப்பிடலாம்.
புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டதுமே, அருகே, புத்தகங்களுக்கான சங்கிலி தோன்றும். நாம் தேடிய புத்தகத்தை மையமாக கொண்டு, அதனுடன் தொடர்பு கொண்ட பல்வேறு புத்தகங்கள் சின்ன சின்ன வட்டங்களாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும்.
இந்த சங்கிலியில் உள்ள எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும், அந்த புத்தகம் தொடர்பான விவரத்தை இடப்பக்கம் பார்க்கலாம்.
மையமாக இடம்பெற்றுள்ள புத்தக வட்டம் மீது மவுசை கொண்டு செல்வதன் மூலம், இந்த புத்தக சங்கிலியில், உள்ள ஒவ்வொரு புத்தகமும் எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். எழுத்தாளர்களிடையான உறவு, புத்தகங்களின் வகைகளில் உள்ள தொடர்பு என பல்வேறு பொது அம்சங்களின் அடிப்படையில் புத்தகங்கள் ஒன்றுடன் மற்றொன்று பிணைக்கப்பட்டுள்ளன.
ஆக, இவ்விதமாக புதிய புத்தகங்களை எளிதாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் மட்டுமே இதில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
குறிப்பு: புத்தக பரிந்துரை சேவையை வழங்கும் ஜோலா புக்ஸ் எனும் தளத்தின் நுட்பத்தை பயன்படுத்தி இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
–
தொடர்புடைய இணைப்புகள்:
http://cybersimman.com/2017/08/13/books-24/
http://cybersimman.com/2018/08/30/books-26/
https://yourstory.com/tamil/5f8e91eb1b-internet-service-for-b