பயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்!

89a016ba29b7636775f6184944d25177நீங்கள் பயண ஆர்வலராகவும் இருந்து புத்தக பிரியராகவும் இருந்தால் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ (www.destinationreads.com/#cities) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழத்திவிடும். ஏனெனில் இந்த தளம் பயணங்களின் போது படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. அந்த வகையில் பயணிகளுக்கான புத்தக வழிகாட்டி தளம் என்று இதை வர்ணிக்கலாம்.
இணையத்தில் அருமையான புத்தக பரிந்துரை இணையதளங்கள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தக பிரியர்கள் மனதில் எப்போதும் இருக்க கூடிய, அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தளங்கள் செயல்படுகின்றன. அருமையான புதிய புத்தகங்கள் துவங்கி தவறாமல் படிக்க வேண்டிய கிளாசிக் புத்தகங்கள் வரை, வாசகர்களின் ரசனைக்கேற்ப புத்தகங்களை பரிந்துரைக்கும் வகையில் புத்தக பரிந்துரை இணையதளங்கள் செயல்படுகின்றன.
இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ கொஞ்சம் வித்தியாசமாக பயணிகளுக்கான புத்தகங்களை பரிந்துரைக்கிறது. பயணங்களுக்கு தயாராகும் போது பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பதோடு, பயண துணையாக இசை கேட்பு சாதனம் அல்லது புத்தகங்களையும் எடுத்துச்செல்வதுண்டு. சிலர் பயணத்தில் அலுப்பை வெல்வதற்காக புத்தகங்களை நாடலாம். இன்னும் சிலர், நீண்ட நாளாக படிக்க நினைக்கும் புத்தகத்தை வாசிப்பதற்கான வாய்ப்பாக பயணத்தை கருதலாம். இவ்வளவு ஏன், ஒரு சிலர் பயண நினைவாக தாங்கள் செல்லும் ஊர்களில் புதிய புத்தகங்களை வாங்கி வரலாம்.
இதெல்லாம் இயல்பானவை தான். இந்த அனுபவத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் எந்த நகருக்கு செல்கிறாரோ அந்த நகரம் தொடர்பான புத்தகத்தை இந்த தளம் பரிந்துரைக்கிறது. அதாவது குறிப்பிட்ட அந்த நகரை மையமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகம் முன்வைக்கப்படுகிறது. அந்த புத்தகம் நாவல் போன்ற புனைகதையாக இருக்கலாம் அல்லது அபுனைவு வகையைச்சேர்ந்த்தாக இருக்கலாம்.
எந்த இடத்திற்கு செல்கிறோமோ அங்குள்ள உள்ளூர் மக்கள், கலாச்சாரம், வாழ்க்கை ஆகிய விஷயங்களை சரியாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக பயணிகள் பலரும், அதிலும் குறிப்பாக சுற்றுலாக பயணிகள் வழிகாட்டி புத்தகங்களை நாடுவதுண்டு. ஆனால் வழிகாட்டி புத்தகங்கள், குறிப்பிட்ட நகரங்களில் இடங்களுக்காக வழிகாட்டுமே தவிர, உள்ளூர் மக்களின் குணத்தை அறிந்து கொள்ளவோ அல்லது அந்த ஊரின் வரலாற்று பின்னணியை அறிந்து கொள்ளவோ உதவாது. இதற்கு, குறிப்பிட்ட நகரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல்களும், புத்தகங்களும் சரியான வழி என்று டெஸ்டினேஷ் ரீட்ஸ் கருதுகிறது.
இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நகரிலும் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கிறது. இப்போது தான் அறிமுகமாகி இருக்கும் தளம் என்பதால், விரல் விட்டு எண்ணக்கூடிய நகரங்களே தற்போது உள்ளன. கேப்டவுன், லண்டம், டோக்கியோ,மேட்ரிட், நியூயார்க்,பாரீஸ் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் எந்த நகரை கிளிக் செய்தாலும் அந்த நகருக்கான புத்தக பட்டியல் தோன்றுகிறது. புத்தக பட்டியலும் நீளமாக இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களையே கொண்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திற்கான சுருக்கமான அறிமுகம் மற்றும் மாதிரி வாசிப்பு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. புத்தக வகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரங்களுக்காக பட்டியலிப்பட்டும் புத்தகங்கள், இலக்கியத்திலும் பயணத்திலும் அனுபவம் வாய்ந்தவர்களால் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகளும் தங்கள் சிறந்தது என கருதும் புத்தகங்களை பரிந்துரைக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்தால் புத்தக தேர்வில் இன்னும் தீவிரமாக பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிக்கும் இடம் சார்ந்த புத்தகங்களை கண்டறிந்து வாசிப்பது என்பது சுவாரஸ்யமான கருத்தாக்கம் தான். அதை சாத்தியமாக்கும் இந்த தளம் உலகில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கான புத்தக பரிந்துரைப்பட்டியலை கொண்ட தளமாக உருவானால் இன்னும் சிறப்பாக இருக்கும். புதிய நகரங்கள் இணைக்கப்படுவதை அறிந்து கொள்ள விரும்பினால் இந்த தளத்தின் செய்திமடல் சேவையில் சந்தாதாராக இணையலாம்.
இந்த தளம் சுவாரஸ்யமாக இருக்கிறது என நினைப்பவர்கள், வாட் ஷுட் ஐ ரீட் நெக்ஸ்ட் (whatshouldireadnext.com/) தளத்தையும் குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளத்தின் பெயர் உணர்த்துவது போலவே, நீங்கள் அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் என இது பரிந்துரைக்கிறது. இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் தலைப்பை இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அதனடிப்படையில் பொருத்தமான புதிய புத்தகம் முன்வைக்கப்படுகிறது. எழுத்தாளரின் பெயரை டைப் செய்தும் பரிந்துரை பெறலாம். பரிந்துரைப்பட்டும் புத்தகங்களில் இருந்து பொருத்தமானதை தேர்வு செய்து வாசிக்கலாம். தேர்வு செய்யும் புத்தகங்களை கிளிக் செய்து கூடுதல் தகவல்களையும் பெறலாம். ஒரு புத்தகத்தில் இருந்து நூல் பிடித்துக்கொண்டு மேலும் பல புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், பரிந்துரையாக பெறும் புத்தகங்களை எல்லாம் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கான இணைய நூலகம் போலவும் இது அமையும்.

தகவல் புதிது; கூகுள் ஊழியர்களின் கோரிக்கை
கூகுள் மீண்டும் சீனாவில் நுழைய திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, நிறுவனத்திற்குள்ளும் சளசளப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் ஊழியர்கள் பலர் இது தொடர்பாக கடிதம் எழுதி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், நிறுவன திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக வெளிப்படையான முறையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து வெளியேறியது. தேடல் முடிவுகளை தணிக்கை செய்யும் நிர்பந்தம் காரணமாக கூகுள் இந்த முடிவை மேற்கொண்டது. ஆனால் தற்போது தணிக்கை செய்யப்பட்ட வடிவிலான தேடல் சேவையுடன் மீண்டும் சீனாவில் நுழைய கூகுள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
கூகுள் தரப்பில் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கூகுள் ஊழியர்களே தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தணிக்கைக்கு உடன்படுவது கூகுளின் தீயதை செய்யாதே எனும் கொள்கைக்கு எதிராக அமையும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுவனம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ள இருந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்தை கைவிட்டது.

செயலி புதிது: டிவிட்டர் லைட் அறிமுகம்
குறும்பதிவு சேவையான டிவிட்டர், மந்தமான இணைய இணைப்பிலும் செயல்படக்கூடிய டிவிட்டர் லைட் செயலியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது.
சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றான டிவிட்டர் 280 எழுத்துக்களில் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. டிவிட்டர் சேவையை செயலி வடிவிலும் பயன்படுத்தலாம். இதனிடையே மந்தமான இணைய இணப்பிலும் செயல்படக்கூடிய டிவிட்டர் லைட் எனும் செயலியை கடந்த ஆண்டு இறுதியில் டிவிட்டர் அறிமுகம் செய்தது.
தற்போது இந்த செயலி இந்தியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி இணைப்புகளில் சிறப்பாக செயல்படக்கூடிய இந்த செயலி வேகமாகவும் தரவிறக்கம் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்படம் மற்றும் வீடியோ பயன்பாட்டையும் இதில் கட்டுப்படுத்த முடியும்.

வீடியோ புதிது; அந்த காலத்து உபெர் எப்படி இருக்கும்?
இணைய கால்டாக்சி சேவையான உபெர் கையில் இருந்தால் உள்ளங்கையில் இருந்தே வாகனங்களை வரவைத்துவிடலாம். ஸ்மார்ட்போன் யுகத்திற்கான செயலியாக உபெர் சேவை பிரபலமாக உள்ளது. எல்லாம் சரி, உபெர் சேவை, ஸ்மார்ட்போன் யுகத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடை அளிக்கும் வகையில், அந்த கால இணையத்தில் உபெர் சேவை எப்படி இருந்திருக்கும் என விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றை ஸ்கொரில் மங்கி யூடியூப் சேனல் உருவாக்கியுள்ளது. அந்த காலத்தில் இணைய சேவையின் தன்மையை மட்டும் அல்ல, உபெர் போன்ற சேவைகள் இன்று தரும் அணுகூலத்தையும் புரிய வைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள தேவைப்பட்டிருக்க கூடிய பத்து கட்ட நவடிக்கைகளை விவரிக்கு வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. பழைய கால இணையத்தை அறிந்திராதவர்களுக்கு நிச்சயம் கூடுதல் சுவாரஸ்யத்தை இந்த வீடியோ அளிக்கும்.
வீடியோவை காண: https://youtu.be/15H8UJ9-8dA

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *