இமெயில் இன்னும் சில குறிப்புகள்

1_QsIbwFDqZ9IjpgMa-kJKugஇமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சாரம், இமெயில் செயல்திறன் என்றெல்லாம வளைத்து வளைத்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவை படிக்க சுவாரஸ்யமானவை என்பதோடு, இமெயில் பயன்பாடு தொடர்பான லேசான கண் திறப்பையும் சாத்தியமாக்குபவை.

அண்மையில் படித்த இமெயில் சார்ந்த இரண்டு கட்டுரைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

முதல் கட்டுரை, தினந்தோறும் காலையில் நீங்கள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டிய இமெயில் தொடர்பானது. ஒவ்வொரு நாளும், நீங்கள் பத்து அல்லது பதினைந்து இமெயில்களை அனுப்பி கொண்டிருக்கலாம். ஆனால், காலையில் தவறாமல் இந்த ஒரு மெயிலை அனுப்பி வைப்பது உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்கிறது இந்தக்கட்டுரை.

தினந்தோறும் காலையில் அனுப்பி வைக்க வேண்டிய அந்த இமெயில் யாருக்கு அனுப்ப வேண்டியது என நீங்கள் யோசிக்கலாம். வேறு யாருக்குமல்ல, உங்களுக்கு தான். ஆம், காலையில், முதல் வேலையாக உங்களுக்கு நீங்களே ஒரு இமெயிலை அனுப்பிக்கொள்ளுங்கள் என்கிறது இந்த க்கட்டுரை. அன்றைய இரவு அந்த இமெயில் உங்களுக்கு நினைவூட்டப்படும் படி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இந்த நமக்கு நாமே அனுப்பிக்கொள்ளும் இமெயில், அன்றைய தினம் நீங்கள் செய்ய நினைத்துள்ள செயல்களை அல்லது வேலைகளை பட்டியலிட வேண்டும். அதிகம் யோசிக்காமல், உங்களுக்கான வேலைகளை எழுதி அனுப்பிக்கொள்ளலாம்.

இப்படி செய்வதால் ஏற்படக்கூடிய மூன்று வித பலன்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் பலன், உங்களுக்கான திட்டங்களை எழுத்து வடிவில் பதிவு செய்வது மனதளவிலான தெளிவை கொடுக்கும். நீங்கள் அனுப்பிய மெயில் உங்களுக்கு நினைவூட்டப்படும் என்பது, அன்றைய தின செயல்களை செய்து முடிப்பதற்கான பொறுப்பை ஏற்படுத்தும். மூன்றாவதாக உங்கள் செயல்பாட்டை ஆய்வு செய்ய உதவும்.

சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. முயற்சித்துப்பார்த்தால் பலனுள்ளதாகவும் இருக்கலாம். தொழில்முனைவோருக்கான இன்ங் இணையதளத்தில் ஜேசன் ஆடென் என்பவர் இதை எழுதியிருக்கிறார். https://www.inc.com/jason-aten/the-1-email-you-should-send-every-day-to-be-more-productive.html

இப்படி இமெயிலை, செய்ய வேண்டிய பணிகளுக்கான பட்டியலாக பயன்படுத்துவது தொடர்பாக வேறு சில குறிப்புகளும் இருக்கின்றன.

இந்தக் கட்டுரை தினமும் அனுப்ப வேண்டிய இமெயிலை குறிப்பிடுகிறது என்றால், மைக்கேல் தாம்சன் என்பவர் வாரம் தவறாமல் அனுப்ப வேண்டிய ஏழு விதமான இமெயில்களை பட்டியலிடுகிறார்.

இமெயிலை எல்லோரும் ஒரு பரிவர்த்தனை கருவியாக அணுகி, தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தின்றனர் எனக்கூறும் தாம்சன், இதற்கு மாறாக சற்று நேரம் எடுத்துக்கொண்டு இந்த இமெயில்களை அனுப்பி வையுங்கள் என்கிறார்.

அவர் அனுப்ப சொல்லும் இமெயில்கள் வருமாறு:

ஒரு நன்றி தெரிவிப்பு மெயில்

அலுவலகத்தில் மதிய உணவை சாப்பிட அமரும் போது, சாப்பாட்டு கூடையில், நண்பரிடம் இருந்து ஒரு கோரிக்கை மற்றும் அதற்கான நன்றி எனும் குறிப்பும் இருந்தால் எப்படி இருக்கும். நன்றி எனும் வார்த்தை புன்னகைக்க வைக்கும் அல்லவா? இதே மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு அளித்தால் என்ன?

எல்லோரும் பாராட்டப்படுவதை விரும்புவதால், உங்களுக்கு உதவியதாக நினைக்கும் ஒருவருக்கு நன்றி தெரிவித்து ஒரு இமெயில் அனுப்பி வையுங்கள். அதைப்பார்த்ததும் அவர் உற்சாகம் கொள்வார். சக ஊழியருக்கு, நீண்ட நாள் நண்பருக்கு இத்தகைய நன்றி மெயில் அனுப்புங்கள். அலுவலக பணியில் அவர் செய்த உதவி அல்லது நண்பர் பரிந்துரைத்த நெட்பிளிக்ஸ் படத்திற்க்காக  ஒரு தேங்க் யூ சொல்லுங்கள்.

நீங்கள் மதிக்கும் நபருக்கான இமெயில்

நீங்கள் பார்த்து வியக்கும் மனிதர்கள் பலர் உண்டு அல்லவா? அவர்கள் உங்கள் துறையில் உங்களுக்கு மேலான நிலையில் இருக்கும் நிலையில் இருக்கலாம். அந்த நிலையை அடைய சிறந்த வழி அவர்களை தொடர்பு கொள்வது தான். எனவே, அவர்களிடம் நீங்கள் மதித்து போற்றும் அம்சங்களை குறிப்பிட்டு ஒரு மெயில் அனுப்புங்கள்.

இப்படி அழையா விருந்தாளியாக அனுப்பி வைக்கப்படும் மெயில்கள், பல நேரங்களில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

பாரட்டு மெயில்

உங்கள் மீது யாரேனும் ஒருவர் ஆர்வம் காட்டுவது ஊக்கம் அளிப்பதாகும். இதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் அறிந்த ஒருவரது திறமை அல்லது செயல்பாட்டை பாராட்டி இமெயில் அனுப்புங்கள். அந்த ஒற்றை வரி அவர்களை ஊக்கம் கொள்ள வைக்கும்.

சந்திப்பு மெயில்

இதே போல அண்மையில் தற்செயலாக சந்தித்த ஒருவருக்கு இமெயில் அனுப்பி வைத்து நலம் விசாரியுங்கள். வெவ்வேறு வகையான நட்பு வட்டங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் தொடர்பும், அனுபவமும் விசாலமாகும்.

பழைய ஊழியருக்கு மெயில்

அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுடன் தினசரி தொடர்பில் இருப்பீர்கள். அதே போல, பழைய சகாகக்களை நினைவுபடுத்தி ஒரு நலம் விசாரிப்பு  மெயில் அனுப்புங்கள்.

மேலதிகாரிக்கு அறிக்கை

வார இறுதிக்கு முன்னதாக பணியின் நிலை குறித்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கும் இமெயிலை அனுப்பி வைக்கலாம். நீங்கள் செய்து வரும் பணிகளை தெரிவிப்பதோடு, உங்கள் முன்னுரிமையை உணர்த்தவும் இது உதவும்.

இந்த பட்டியலில் இறுதியாக உங்களுக்கு நீங்களே ஒரு இமெயில் அனுப்பிக்கொள்ள வேண்டும் என்பதும் இடம்பெறுகிறது. வார இறுதியில், அந்த வார நிகழ்வுகள், செயல்பாடுகளை அலசிப்பார்க்கும் வகையில் இந்த மெயில் அமையலாம்.

இமெயில் பற்றி எப்படி எல்லாம் யோசிக்கின்றனர் பாருங்கள்!

புதிய இணையதளங்களை அறிமுகம் செய்யும், இணைய மலர் செய்தி மடலை பின் தொடருங்கள்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *