ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட.
உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் பலம் மற்று பலவீனம் இரண்டையுமே உணர்த்தக்கூடியது.
அந்த கதையை பார்ப்போம்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைமஸ் இதழை சேர்ந்த ரோடே என்னும் நிருபர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டார்.
ரோடே சாதாரணமான நபர் இல்லை. துணிச்சல் மிக்க நிருபரான அவர் அமெரிக்க இதழாளர்களின் நோபல் பரிசாக கருதப்படும் புலிட்சர் விருதை வென்றுள்ளார். செர்பியா உபட்பட பல பிரச்சனை பூமிகளில் செய்தியாளராக பணியாற்றி உண்மையை வெளிக்கொணர பாடுபட்டுள்ளார். நியூயார்க் டைமஸ் இதழில் பணியாற்றும் முன் புகழ்பெற்ற கிரிஸ்டியன் சயின்ஸ் மானிட்டரில் பணிபுரிந்திருக்கிறார்.
தனது இயல்பான துணிச்சலின் படி ஆப்கானிஸ்தானில்செய்தி சேகரிக்கச்சென்ற அவர் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது மொழிபெயர்ப்பாளரும் கடத்தப்பட்டார்.
நியூயார்க் டைமஸ் நாளிதழ் அவ்ர் கடத்தப்பட்ட செய்தி வெளியாவதை விரும்பவில்லை. ஒரு நாளிதழே இப்படி ஒரு செய்தியை மறைக்க விரும்புவது அதன் தொழில் தருமத்திற்கு விரோதமாக தோன்றலாம். ஆனால் நிருபர் கடத்தப்பட்ட செய்தி வெளியாகி பரபர்ப்பு ஏற்பட்டால் அதுவே அவரை மீட்கும் முயற்சிக்கு எமனாக அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணம். பாகிஸ்தானில் கடத்திக்கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியன் பியரலின் சோகமான முடிவை நினைத்துப்பாருங்கள்.
சக நாளிதழ்களில் இந்தசெய்தி வெளிவாரமல் பார்த்துக்கொள்வது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.காரணம் நாளிதழின் மற்ற ஆசிரியர்களிடம் நேரடியாக பேசி வெண்டுகோள் வைத்தால் அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தருவார்கள். அப்படிதான் நடந்தது.
செய்தி வெளியே கசியாத்தால் அவரை மிட்கும் பணியை ரகசியமாக மெற்கொள்ளமுடிந்தது. நாளிதழ்களிலோ பத்திரிக்கைகளிலோ செய்தி வெளியாகமல் செய்தாகிவிட்டது.ஆனால் செய்தி விக்கிபீடியவில் வெளியாகமல் இருக்க வேண்டுமே என்ற கவலை டைமஸ் குழுவை வாட்டியது.
நாளிதழ்கள் போல விக்கிபீடியா ஆசிரியரின் வழிக்காட்டுதலின் பேரில் நடத்தப்படும் தளமல்ல.எவரும் கட்டுரையை சமர்பிக்கலாம்,எவரும் அதை திருத்தலாம் என்னும் சர்வ சுதந்திரமான சித்தாந்தம் கொண்ட விக்கிபீடியாவில் உலகின் எதோ ஒரு மூலையில் உள்ள யார் வேண்டுமானாலும் எந்த தகவலையும் சமர்பிக்கலாம்.அதை யார் வேண்டுமாலும் திருத்தலாம்.
இப்படி யார் யாரோ தகவல்களை சமர்பிப்பதால் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களின் பரப்பு உண்மையிலேயே வியப்பை அளிக்ககூடியது. எந்த தலைப்பை வேண்டுமாலும் சொல்லுங்கள் விக்கிபீடியாவில் அதற்கான் கட்டுரை சின்னதாகவேனும் இருக்கும் . அதே போல விக்கிபீடியாவின் வேகம் அசாத்தியமானது.சம்பவம் நடந்தவுடன் அந்த தகவலை விக்கிபீடியாவில் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு முன்னாள் ஈராக் அதிபர் சதான் உசேன் தூக்கிலடப்பட்டபோது அவர் தொடர்பான கட்டுரையில் உடனே அந்த தகவல் இடம்பெறச்செய்யப்பட்டது.கட்டுரையின் முடிவில் சதாம் தூக்கிலடப்படார் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போல ஏ ர் ரஹ்மான் ஆஸ்கர் வென்ற தகவல் அவரது கட்டுரையில் உடனே அரங்கேறிவிட்டது.எல்லாம் விக்கிபீடியா படையின் மகிமை.
கட்டுரைகளில் புதிய தகவல்களை சேர்க்கவும், அவை தவறாயின் திருத்தம் செய்யவும் எப்போதும் யாரவது விக்கி பயனாளி காத்திருக்கின்றனர்.விக்கிபீடியாவின் பலம் இது தான்.
தகவல்கள் சரி பார்க்கப்படாமல் போவதும், பொய்த்தகவலை இடம்பெறச்செய்ய வாய்ப்பு இருப்பதும் விக்கிபீடியாவின் இன்னொரு பக்கம்.
இனி டைம்ஸ் நிருபரின் கடத்தலுக்கு வருவோம்.விக்கிபீடியாவின் இயல்பு படி டைமஸ் நிருபர் கடத்தப்பட்ட செய்தியும் யாராலேயோ சமர்பிக்கப்படும் என்பதே உண்மை.ஏற்கனவே அவர் தொடர்பான சிறிய கட்டுரை விக்கிபீடியாவில் இருந்தது.
ரோடே தலிபான் திவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என்னும் வாசகத்தை அதில் யாரோ ஒருவர் சேர்க்கப்போகிறார் என்பதும் எதிர்பார்க்கக்கூடியது தான்.ஆனால் இதைவிட வேறு வினையே வேண்டாம். உலகம் கவனிக்கிறது என்னும் உணர்வு தாலிபான் தீவிரவாதிகளின் பேரம் பேசும் தொனியையே மாற்றிவிடும்.பிடிவாத்தையும் அதிகரிக்கச்செய்யும். பினைக்கைதியின் பதிப்பு அதிகம் என்று தெரிந்தால் கொல்வோம் என்னும் மிரட்டலையும் தைரியமாகவே விடுப்பார்கள்.
இது நிகழக்கூடாது என நினைத்தது டைமஸ் நிர்வாகம்.ஆனால் வேண்டுகோள் விடுத்தெல்லாம் இதனை சாதிக்க முடியாது என தெரிந்திருந்தது.விக்கி வழியில் சென்று தான் இதனை சாமாளிக்க முடியும் என முடிவானது.
அந்த பொறுப்பை டைமஸ் நிருபர்களில் ஒருவரான மைக்கேல் மோஸ் ஏற்றுக்கொண்டார். முதல் காரியமாக ரோடே தொடர்பான கட்டுரையில் அவர் முக்கிய மாற்றங்களை செய்தார். ரோடே கிறிஸ்டியன் சயினஸ் மானிட்டர் இதழில் பணியாற்றிய குறிப்பை நீக்கனார்.காரணம் கிரிஸ்டியன் என்னும் வார்த்தையே முஸ்லீம் திவிரவாதிகளை கோபம் கொள்ள வைக்கப்போதுமானது.
தீவிரவாதிகள் தாங்களிடம் சிக்கியவர்கள் பற்றிய விவரங்களை இண்டெர்நெட்டில் தேடிப்பார்ப்பார்கள் என்பதை மோஸ் நன்கறிந்திருந்த்தால் இவ்வாறு செய்தார்.மேலும் ரோடே கட்டுரையில் அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செர்பியா போன்ற பகுதிகளில் செயல்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மறுநாள் பார்த்தால் வேறு யாரோ ரோடே கடத்தப்பட்ட செய்தியை சேர்த்திருந்தனர் .மோஸ் உடனே அத்னை கவனித்து நீக்கினார்.ஆனால் மீண்டும் அந்த தகவல் இடம்பெறச்செய்ய வைக்கப்பட்டது.மீண்டும் அந்த தகவலை நீக்கினார். இந்த முறையும் தகவல் மீண்டும் சேர்க்கப்பட்டதோடு நீக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
.
நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த டைமஸ் விக்கிபீடியாவின் தலைவர் ஜிம்மி வேல்ஸ் உதவியை நாடியது.ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வேல்சும் உதவ ஒப்புக்கொண்டார்.ஆனால் தான் தலையிடுவது தெரிந்தால் விக்கிபீடியா சமூகத்தினர் மத்தியில் அதுவே கவனத்தை உண்டக்கிவிடும் என கூறிய அவர் தன்னுடைய நிர்வாகி ஒருவரிடம் இந்தப்பணியை ஒப்படைத்தார்.
இதனையடுத்து அந்த பக்கத்தை கண்காணித்தபடி இருந்து நிருபர் ரோடே கடத்தப்பட்ட செய்தி இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளத்துவங்கினார்.நான்கு முறை அந்த தகவலை நீக்கினார்.நான்கு முறையும் தகவல் மீண்டும் பதிவேற்றப்பட்டன. கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த பக்கத்தையே தற்காலிகமாக முடக்கி வைத்தார்.முதலில் 3 நாட்களும் பின்னர் 2 வாரங்களுக்கும் முடக்கப்பட்டன.
நடுவில் பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.பிப்ரவரி மாதம் யாரோ 2 பயனாளிகல் கடத்தல் செய்தியை சேர்த்துவிட்டனர்.அவை நீக்கப்பட்ட போது பயனாளிகள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்து குறிப்புகளை எழுதி வைத்தனர்.
நீக்க நீக்க மீண்டும் சேர்ப்போம் என தெரிவித்தனர்.
அவ்ர்களை பொருத்தவரை திருத்தங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது விக்கி கொள்கைக்கு எதிரானது.எனவே காரணமில்லா நீக்கத்தை எதிர்த்து போராட தயாராக இருந்தனர். இந்த விகாரத்தின் பின்னே ஒருவரின் உயிர் உசாலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் ரோடேவின் விக்கிபீடியாவின் கட்டுரை பக்கம் நிரந்தரமாக முடக்கிவைக்கப்பட்டது. இது மிகவும் அரிதானது.
நல்ல வேலையாக கடந்த வாரம் ரோடேவும் மொழிபெயர்ப்பாளரும் தப்பி வந்து விட்டனர்.டைமஸ் அப்போது அவர் கடத்தப்பட்டு தப்பி வந்த செய்தியை அதிகாரப்பூரவமாக அறிவித்தது.
உடனே ஒரு பயனாளி , பார்த்தீர்களா நாங்கள் இடம்பெற வைத்த தகவல் சரியானது நீங்கள் செய்தது தவறு என குறிப்பிட்டிருந்தார்.
விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்களை கட்டுப்படுத்துவது எத்தனை கடினம் என்பதையும் இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
இண்டெர்நெட் யுகத்தின் பிரச்ச்னை இது.

0 Comments on “விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்”
சென்ஷி
விறுவிறுப்பான புதிய தகவல்… மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது..!
mayvee
ரொம்ப வித்யாசமான தகவல் ….
இதே போன்று பல நடந்து உள்ளது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
அஜ்மல்
உங்களுடைய கட்டுரை சிறந்ததாக இருந்தாலும் உள்ளே உள்ள சில கருத்துகள் மோசமாக உள்ளன. “கிரிஸ்டியன் என்னும் வார்த்தையே முஸ்லீம் திவிரவாதிகளை கோபம் கொள்ள வைக்கப்போதுமானது.” என்ற வாக்கியத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் yendra வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளீர்கள்.
குறிப்பாக உலக மீடியாக்கள் முஸ்லிம்கள் ஏதேனும் செய்துவிட்டால் “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி பழகிவிட்டனர்.
உதாரணமாக விடுதலை புலிகள் தீவிரவாதிகளை “இந்து தீவிரவாதிகள்” என்றோ அல்லது நக்சலைட் தீவிரவாதிகள் மற்றும் மவோஇஸ்த் தீவிரவாதிகளை அவர்களுடைய மதங்களை குறிப்பிட்டு இந்து தீவிரவாதிகள் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை.
முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என உலகமே சித்தரிக்க வேண்டும் என்பதே உலக பயங்கரவாத நாடான அமெரிக்காவின் நோக்கம். முஸ்லிம் தீவிரவாதிகள் என்பது அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இன்னும் சொல்ல போனால் உலக தீவிரவாதியாக அமெரிக்காவால் சித்தரிக்கபடும் பின்லாடனை ரஷியாவை அழிப்பதற்கு ஒருபகியதே அமெரிக்காதான் என்பதை புரிந்து கொள்ளவும். பிறருக்கும் தெரியபடுத்தவும்.
தாலிபன்களை யாரும் தீவிரவாதிகள் இல்லை என்று கூறவில்லை. அவர்களை இஸ்லாமிய மதத்தோடு ஒப்பிடவேண்டாம் என்றே கூறுகிறோம்.
சமீபத்தில் மும்பை மலேகோனில் குண்டுவைத்தது யார் என்பது உங்களுக்கே தெரியும்.
cybersimman
மன்னிக்கவும் அவை என்னுடைய கருத்து அல்ல. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.மூலக்கட்டுரையில் ( நியூயார்க் டைமஸ் ) இருந்ததை, கட்டுரையின் மைய கருத்தை உணர்த்தும் வகையிலேயே பயன்படுத்தியுள்ளேன்.
எப்படி இருந்தாலும் உங்களை புண்படுத்தியதற்கு வருந்துகிறேன்
சிம்மன்
அஜ்மல்
நன்றி.
Dyena
Very GUD Post… congrats….
Jerome
அஜ்மல், தலீபான் அமைப்பினர் மதம் சார்ந்த தீவிர கொள்கை உடயவர்கள் (மிதமான மதவாதம்)
அவர்கள் தாம் முஸ்லீம் மதத்தின் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்ண்டே, அந்த மதத்தின் அடிப்படயான அன்பு எனபத்ன் அர்த்தத்தை மறந்து விட்டார்கள்.
மதம் சார்ந்த தீவிர கொள்கை – தீவிரவாதம்,. இதனால் முஸ்லீம்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று ஆகிவிடாது, ஒரு சிலரே (1% இற்கும் குறைவான)
போராட்டத்தின் நியாயத்தன்மை சார்ந்து தீவிரவாதம் என்று பெயரிடப்பட்டவற்றை எம்மால் மீள் அர்த்தப்படுத்த முடியும், மனிதாபிமானமுள்ள மனிதர் நாம், எம்மால் இவற்றை சீர்தூக்கி பார்க்க முடியாதா என்ன?
அஜ்மல்
நன்றி
Sodabottle
விக்கிப்பீடியா என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட செய்திகளை ஆவணப்படுத்தும் மூன்றாம் தரவுத் தளம். அதாவது எழுதபட்டிருக்கும் அல்லது வெளியிடப்பட்டிருக்கும் தகவலை உறுதி செய்யும் முகமாக சான்றுகள், மேற்கோள்கள் வழங்க வேண்டும். ஒரு தகவல் எவ்வளவு உண்மையானதாக இருந்தாலும், சான்றுகள் இன்றி விக்கிப்பீடியாவில் எந்த தகவலையும் சேர்க்க முடியாது. உங்கள் கூற்றுப்படி எங்கும் வெளிவராத ஒரு தகவலை விக்கிப்பீடியாவில் முதலில் வெளியிடப்பட்டது என்பது முற்றிலும் பிழையானது.