தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. விமர்சனங்களை மீறி அல்ல, விமர்சனங்களுடன் தான் தேவர்மகன் நல்ல படம். நிற்க இப்போது தேவர்மகன் பற்றி குறிப்பிடுவதற்கான காரணம், ஜோனதன் ஆப்ராம்சின் இரண்டாவது முயற்சி பற்றி தற்செயலாக படிக்கும் போது தேவர்மகன் கிளைமாக்ஸ் காட்சி வசனம் தன்னிச்சையாக நினைவுக்கு வந்தது தான்.
’ போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா “என படத்தின் இறுதிக்காட்சியில் கமல் கூறுவது போல, ஜோனாதன் ஆப்ரம்ஸ், ஒரு பழைய பேட்டியில், சமூக ஊடகங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு போய் பெண்களோடு பேசுங்கள், என்பது போல கூறியிருக்கிறார்.
இப்படி அவர் சொல்வது சமூக ஊடகங்கள் மீது எத்தனை பெரிய விமர்சனம் என்று புரிந்து கொள்ள, ஆப்ராம்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆப்ராம்ஸ், முன்னோடி சமூக ஊடக சேவைகளில் ஒன்றான பிரன்ட்ஸ்டரை (Friendster ) துவக்கியவர். பிரெண்ட்ஸ்டர் இப்போது அநேகமாக மறக்கப்பட்டு விட்டது என்றாலும், 2003 ம் ஆண்டு அறிமுகமான போது இந்த தளம் எந்த அளவு கவனத்தை ஈர்த்தது என்பதும், அதைவிட எத்தனை வேகமாக வளர்ந்து என்பதும் ஆச்சர்யம் தரக்கூடியது.
நவீன சமூக ஊடகத்தின் துவக்கமாக கருதப்படும் முதல் சமூக வலைப்பின்னல் தளமான சிக்ஸ்டிகிரீஸ்.காம் தளத்தை தொடர்ந்து அறிமுகமான பிரண்ட்ஸ்டர், பயனாளிகளுக்கு இடையிலான தொடர்புகளை இணையமயமாக்கி கொள்வதற்கான வாய்ப்பை அளித்தது.
உண்மையில் பிரண்ட்ஸ்டர், சிக்ஸ்டிக்ரீஸ் தளத்தின் நீட்சி என்று தான் சொல்ல வேண்டும். அறுகோண தொடர்பு அடிப்படையில் செயல்பட்ட சிக்ஸ்டிகிரீஸ் பயனாளிகள் தங்கள் நண்பர்கள், அவர்களின் நண்பர்களை கொண்டு வலைப்பின்னல் அமைத்துக்கொள்ள வழி வகுத்தது.
இதன் அடுத்த கட்டமாக பிரண்ட்ஸ்டர், நண்பர்களின் வட்டம் எனும் அடிப்படையில் பயனாளிகளின் சமூக வலைப்பின்னலை உருவாக்கி கொள்ள வழி செய்தது. ஒரு இணையதளத்தில் நண்பர்களை பட்டியலிடலாம், அவர்களுக்கு இடையிலான சமூக தொடர்புகளை உருவாக்கி கொள்ளலாம் என்பது அந்த காலத்தில் மிகவும் புதுமையாக இருந்தது. இதனால் பயனாளிகள் பிரண்ட்ஸ்டரில் குவிந்தனர்.
பிரண்ட்ஸ்டருக்கு பின்னர் தான் பேஸ்புக் அறிமுகமானது. கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமான பேஸ்புக் பிரபலமாக இன்னும் சில காலம் ஆனது. அதன் பின்னும் பிரண்ட்ஸ்டர் சமூக ஊடக பரப்பில் முன்னிலையில் இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பின், பேஸ்புக்கின் வளர்ச்சியால் பிரண்ட்ஸ்டர் பின் தங்கி போனது. இது பழைய கதை தான் என்றாலும், சமூக ஊடக உலகிலும் சரி, ஸ்டார்ட் அப் பரப்பிலும் சரி, பிரன்ஸ்டர் இன்னமும் முக்கியமான ஆய்வு பொருளாக இருக்கிறது.
உண்மையில் இணைய உலகின் மிகப்பெரிய தோல்வி கதைகளில் ஒன்றாக பிரன்ட்ஸ்டர் கருதப்படுகிறது. பிரண்ட்ஸ்டர் எங்கு கோட்டை விட்டது என்பதை கொண்டே பேஸ்புக் எப்படி வெற்றி பெற்றது என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் வெற்றியில் மறைந்து போன பழைய சமூக ஊடக தளங்களில் ஒன்று என பிரண்ட்ஸ்டரை அலட்சியம் செய்துவிட முடியாது. மாறாக, சமூக ஊடக அலையின் எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி சேவைகளில் ஒன்றாக கருத வேண்டும்.
சும்மாயில்லை, 2007 ம் ஆண்டில் வலையின் 16 முக்கியமான தருணங்களை பட்டியலிட்ட பிசிவேர்ல்டு அதில் ஒன்றாக பிரண்ட்ஸ்டரை குறிப்பிட்டு, இந்த தளம் இல்லை எனில், மைஸ்பேசோ, பேஸ்புக்கோ உருவாகியிருக்க முடியாது என தெரிவிக்கிறது.
அதோடு, ஆப்ரம்ஸ் தனது மறுவருகையாக சோசியலைஸர் (Socializr ) எனும் சமூக ஊடக சேவையை துவக்கியது பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த தளமும் எடுபடாமல் போய்விட்டது என்பது எளிதாக யூகித்துக்கொள்ளலாம் என்றாலும், ஒரு முன்னோடியின் மறு முயற்சி என்பதால், இந்த சமூக ஊடக தளம் பற்றி தேடிப்பார்த்த போது தான் உண்மையிலேயே ஆப்ரம்ஸ் எத்தனை பெரிய முன்னோடி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
சோசியலைஸர் தளம், நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட தளம். இதன் மூலம் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதோடு, அதற்காக அழைப்பு அனுப்பி பங்கேற்பாளர்களை வர வைத்து நிஜ உலக தொடர்புகளை உருவாக்கி கொள்ள உதவுவதே இந்த தளத்தின் நோக்கமாக இருந்தது.
இந்த தளத்தை உருவாக்கியது தொடர்பாக ஆப்ரம்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், மக்களின் சமூக ஊடக மோகம் பற்றி வறுத்தெடுத்திருக்கிறார். சமூக உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக சமூக ஊடகத்தை நாடுவது பெரிய மடத்தனம் என ஆப்ராம்ஸ் கூறியிருக்கிறார்.
பிரண்ட்ஸ்டரை துவக்கிய போது தனது நோக்கம், சமூக வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக இருந்ததே தவிர, (நிஜ உலகில் இருந்து) தப்பித்துச்செல்வதற்கான இணைய கற்பனை உலகை அமைப்பது அல்ல என அவர் கூறியிருக்கிறார்.
அதாவது, தெரிந்தவர்களுடனும், நண்பர்களுடனும் பேசி பொழுதை கழிப்பதற்கு பதில், நண்பர்கள் எனும் மயக்கத்தில் சமூக ஊடக தளங்களில் மூழ்கியிருப்பதை அவர் குறை சொல்கிறார்.
அதே பேட்டியில், பெரிய இயக்குனர்களை கதைகளோடு நாடி வரும் உதவி இயக்குனர்கள் போல, ஸ்டார்ட் அப் ஐடியாக்களோடு தன்னை நாடி வரும் இளம் ஆர்வலர்கள் பற்றியும் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். பிரண்ட்ஸ்டர் வெற்றியால் என்னை நாடி வரும் எல்லோரும், டிவிட்டரை மையமாக கொண்ட அடுத்த சமூக ஊடக சேவை பற்றி பேசுகின்றனர். எல்லோரும், இது போன்ற சேவையை கொண்டு ஸ்லைடு இரவு விடுதி வாடிக்கையாளர்கள் எப்படி பயன்பெறலாம் என பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்லைடு என்பது நண்பர்களோடு அவர் நடத்தி வரும் இரவு விடுதி என்பதால், அவரிடம் முதலீடு பெற நினைப்பவர்கள், இரவு விடுதிக்கான புதிய சமூக ஊடக சேவைக்கான ஐடியாவை முன்வைத்து அவரை கவர முயற்சிப்பது இயல்பாது தான். ஆனால், இந்த எண்ணமே வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்துள்ளார் ஆப்ராம்ஸ்.
இரவு விடுதிக்குள் நுழைந்தால் எல்லோரும் ஐபோனை பார்த்துக்கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை, வந்தீர்களா, குடித்தீர்களா, உற்சாகமாக இருங்கள். போய் பெண்களுடன் பேசுங்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அதே வேகத்தில் தொழில்நுட்பம் சமூக வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டுமேத்தவிர அதற்கு பதிலாக அமைந்துவிடக்கூடாது, தொழில்நுட்பம் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடத்தொடங்கிவிட்டால் அதற்கு அதிக இடம் கொடுத்து விட்டீர்கள் என்று பொருள் என்றும் கூறியிருக்கிறார்.
யாரையாவது சந்திக்கும் போது அவருடன் பேசாமல் பிளாக்பெரியை பார்த்துக்கொண்டிருப்பது பற்றியும் விமர்சித்திருக்கிறார். அதனால் தான், சமூக வாழ்க்கையை திட்டமிடும் நேரத்தை குறைத்து அதை அனுபவிப்பதற்கான சோசியலைஸர் தளத்தை உருவாக்கியதாக கூறிருக்கிறார்.
இந்த தளத்தை 2007 ம் ஆண்டு வாக்கில் அவர் உருவாக்கினார் என்பதை அறியும் போது சமூக ஊடக பழக்கத்தின் மீது அவர் வைத்த விமர்சனத்தின் அருமையை நன்றாக உணர முடிகிறது. ஆனால் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் இன்னும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இப்போது திரும்பி பார்க்கையில், சமூக ஊடக பரப்பில் பேஸ்புக்கின் மார்க் வெற்றி பெற்றதற்கு பதில் ஆப்ராம்ஸ் வெற்றி பெற்றிருந்தால் எப்படி இருக்கும் எனத்தோன்றுகிறது.
அவர் சொன்னது போல, சமூக ஊடகங்களில் நேரத்தை கழிக்காமல், நேரில் மனிதர்களை பார்த்து பேசுங்கள், அதற்கு சமூக ஊடகம் உதவட்டும் என்பது தான் அவர் சொல்லும் செய்தி அல்லவா!
–