இது தான் விக்கிபீடியா! – ஒரு கிரேக்க கப்பலின் விக்கி பக்கம்.

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்கியமாக, திசியல் கப்பலுக்கான விக்கிபீடியா பக்கம் தெரியுமா?

திசியஸ் கப்பலுக்கான புதிரை விடுவிப்பதற்கு முன், ஜேசன் கோட்டகேவையும், ’டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா’ (Depths of Wikipedia ) பக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், திசியஸ் கப்பலின் பின்னே உள்ள தத்துவார்த்த புதிரை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த விக்கிபீடியா துணை பக்கத்தின் குறிப்பு அவசியம்.

இப்போது திசியஸ் கப்பலை (“Ship of Theseus”) முதலில் பார்க்கலாம். திசியஸ் புராண கால கிரேக்க நாயகர்களில் ஒருவர். கிரேக்க நகரம் ஏதென்ஸை நிறுவியவராக அறியப்படுகிறார். ஒரு பெரும் படையெடுப்பில் இருந்து ஏதென்ஸ் வாசிகளை காப்பாற்றி கப்பலில் அழைத்துச்சென்றிருக்கிறார்.

அதன் பின் ஒவ்வொரு அண்டும், திசியஸ் ஏதென்ஸ் மக்களை கப்பலில் காப்பாற்றி அழைத்துச்சென்றதை கொண்டாடும் வகையில், அதே கப்பலில் ஒரு பயணம் யாத்திரை போல மேற்கொள்ளப்படும் என்கிறது வரலாறு.

திசியசை நினைவுகூறும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த கப்பல் பயணம் ஒரு பாரம்பரியமாகவே தொடர்ந்தது. ஆனால், காலப்போக்கில் கப்பல் பழையதாக அதன் பராமரிப்பிற்காக ஒவ்வொரு பாகமாக மாற்றப்பட ஒரு கட்டத்தில் மொத்த கப்பலும் மாற்றப்பட்டு பயணமும் பாரம்பரியமும் தொடர்ந்தது.

இப்போது கேள்வி என்னவெனில், முழுவதும் பாகங்கள் மாற்றப்பட்ட அந்த கப்பல் இனியும் பழைய கப்பல் தானா? என்பதும், மாறிய கப்பல் எனில் அந்த கப்பல் புதிதாக மாறிய கப்பல் எனில், அந்த கப்பல் மாறிய தருணம் எது? என்பதாகும்.

ஆக, திசியஸ் கப்பலின் பயணம் இப்படி வரலாற்றை கடந்து தத்துவ நோக்கில் கேள்விகளை எழுப்புகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த கேள்விகள் விவாதிகப்பட்டு, விளக்கம் சொல்லப்பட்டு வருகின்றன. உளவியல் நோக்கிலும் இது அலசி ஆராயப்படுகிறது.

இந்த புதிர் நிகர்வு, சிந்தனை பரிசோதனை என்றும் பிரபலமாக குறிப்பிடப்பட்டு இன்றளவும், சான்றோர்களையும், தத்துவவாதிகளையும் கவர்ந்து வருகிறது.

ஒரு விதத்தில் டைட்டானின் கப்பலை விட திசியஸ் கப்பல் சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? இந்த தகவல்களையும், இன்னும் கூடுதல் விவரங்களையும், பார்வைகளையும்  திசியஸ் கப்பலுக்கான இப்போதைய விக்கிபீடியா பக்கத்தில் காணலாம். இங்கு தான், கூடுதல் சுவார்ஸ்யம் உண்டாகிறது.

திசியஸ் கப்பல் வரலாறு போலவே, திசியஸ் கப்பல் விக்கிபீடியா பக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. (பெரும்பாலும் இந்த வரலாற்றை நீங்கள் கவனிக்க வாய்ப்பில்லை. ) அதாவது திசியஸ் கப்பல் தகவலுக்காக உருவாக்கப்பட்ட விக்கிபீடியா பக்கத்தில் முதலில் இருந்த வாசகங்களில் ஒரு வார்த்தை கூட அந்த பக்கத்தில் தற்போது இல்லை. இடைப்பட்ட காலத்தி ஆயிரம் முறைக்கு மேல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அந்த பக்கம், இப்போது மூல பக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

மாறிக்கொண்டே இருந்து மூல வடிவில் இருந்து வேறுபட்ட திசியஸ் கப்பல் போலவே, அதன் விக்கிபீடியா பக்கமும் மூலத்தில் இருந்து வேறுபட்டிருப்பது சுவாரஸ்யம் மட்டும் தானா?

இனி அடிக்குறிப்புக்கு வந்துவிடலாம். பெரும்பாலும் வாசகர்கள், திசியஸ் கப்பல் பக்கத்தின் இந்த மாற்றத்தை கவனிக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தகைய விக்கிபீடியா மாற்றங்களை பதிவு செய்யும் டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா (https://www.instagram.com/p/C05JF2jMV-Q/ ) சமூக ஊடக கணக்கு இதை கவனித்து பதிவு செய்து நம் கவனத்தில் கொண்டு வந்துள்ளது.

விக்கிபீடியா பக்கங்கள் மாறுவதும் திருப்பத்தப்படுவதும் புதிய தகவல் அல்ல. உண்மையில் இந்த திருத்தங்களும், மாற்றமும் தான் விக்கிபீடியாவின் ஆதார பலம். ஆனால், இந்த திருத்தங்களும், மாற்றமும் எத்தனை அர்த்தம் நிறைந்தது என்பதை கச்சிதமாக உணர்த்தும் பக்கங்களில் ஒன்றாக திசியஸ் கப்பல் பக்கம் அமைகிறது.

இந்த பக்கத்தின் மாற்றம் அதன் பேசு பொருளான திசியஸ் கப்பல் போலவே இருப்பதோடு, அந்த மாற்றத்திற்கான அனைத்து நியாயங்களையும் இந்த பக்கம் கொண்டுள்ளது.

அதாவது, திசியஸ் கப்பல் தகவலை ஒற்றை சிமிழில் அடைத்துவிட முடியாது என்பதையும், அந்த தலைப்பு தொடர்பான பன்முக நோக்கிலான தகவல்களை உள்ளடக்கும் வகையில் அந்த பக்கம் மாற்றப்பட்டு மேம்படுத்தப்படுவதே முறை என்பதையும் உணரலாம். இந்த தன்மை தான் விக்கிபீடியா.

நிற்க, டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா சமூக ஊடக கணக்கு பரவலாக அறியப்பட்டதாக இருந்தாலும், அதில் சுட்டிக்காட்டப்படும் திசியஸ் கப்பல் பக்கம் போன்ற விவரத்தை சுட்டிக்காட்ட கோட்டகே போன்ற ஒரு வலைப்பதிவர் தேவை.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *