’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ அறிமுகம் செய்யக்கூடிய படம் அல்ல. பெரிதாக பேசப்பட்ட படம் இல்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது புதிய அனுபவம் தரக்கூடிய அதிக அறியப்படாத படம், நெட்பிளிக்சில் பாருங்கள் என ஸ்டிரீமிங் யுகத்தில் பரிந்துரைக்க கூடிய படமாகவும் தெரியவில்லை.
ஆனால், இணைய வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதே விஷயம். படத்தின் நடிகர்களை இணைய ரசிகர்கள் தேர்வு செய்ய அனுமதித்த முதல் இணையதளம் இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்த படத்தின் நடிகர்களை தேர்வு செய்ய காஸ்ட்யுவர்மூவி (http://www.castourmovie.com/index.shtml) எனும் இணையதளம் அமைக்கப்பட்டது. பிரெட்டி வுமன் படத்தை ஜூலியா ராபர்ட்ஸ் இல்லாமல் கற்பனை செய்ய முடியுமா? ஆனால், இது போன்ற படங்களில் வேறு ஒருவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நீங்கள் நினைப்பதுண்டு அல்லவா, இப்போது அதற்கான வாய்ப்பு எனும் விளக்கத்துடன் இந்த தளம், அப்போது உருவாக இருந்த ’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்”படத்தின் கதையையும், அதில் நடிக்க பரிசீலனையில் இருந்த நடிகர்களையும் குறிப்பிட்டு, அவர்களில் இருந்து தேர்வு செய்யுமாறு இணைய ரசிகர்களை கேட்டுக்கொண்டது.
ரசிகர்கள் மூன்று கட்டமாக இந்த தேர்வில் ஈடுபடலாம். இறுதிக்கட்டத்தில் அவர்கள் வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் அடிப்படையில் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திரைப்பட உருவாக்கம் ரசிகர்கள் கைகளில் என முழங்கிய இந்த தளத்தை இப்போது திரும்பி பார்க்கையில், (நன்றி- இணைய காப்பகம் ), வியப்பாக இருக்கிறது. இந்த தளத்தை முழுவீச்சிலான ரசிகர்கள் ராஜ்ஜியம் தளம் என்று சொல்லிவிட முடியாது தான். இணையம் பிரபலமாகத்துவங்கிய புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், விளம்ப நோக்கிலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் கருதலாம்.
ஆனால், ரசிகர்களை அழைத்து இயக்குனர் இருக்கையில் அமர வைத்த இணையதளம் என்ற வகையில், ரசிகர்கள் பங்கேற்க வழி செய்யும் இணைய ஆற்றலின் ஒரு கீற்றை புரிந்து கொண்ட இணையதளம் என வர்ணிக்கலாம். அந்த வகையில் முக்கியமான தளம் தான்.
இந்த தளத்தை பற்றி எழுதும் போது, இணைய வரலாற்றில் மற்றொரு முக்கிய படமான யூ ஹேவ் காட் மெயில் நினைவுக்கு வருகிறது.
நிற்க, இந்த இணையதளத்தை நெட்ஸ்கேப் வலைவாசல், தனது புதிய தளம் அறிமுக பகுதியில் குறிப்பிட்டிருந்தது கூடுதல் தகவல். – https://web.archive.org/web/20000303223346/http://www.netscape.com/netcenter/new2.html?cp=newbutton
அதே போல, இந்த தளம் தொடர்பான விக்கிபீடியா பக்கத்தில், இதன் கதையம்சம், பாத்திரங்கள் ஆகிய விவரங்களோடு இணையத்தில் ரசிகர்கள் பங்களிப்போடு உருவான முதல் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபி தளமும், இந்த படம் தொடர்பான சில்லரை செய்திகளில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறது.
கூகுள் தேடலிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ இந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது.
–