யூ ஹேவ் காட் மெயில்- இமெயிலில் ஒரு காதல் கதை

youve_got_mail_keyartஉங்களுக்கு மெயில் வந்திருக்கிறது என பொருள்படும், யூ ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail ) எனும் வாசகம் இணைய உலகில் மிகவும் பிரபலமானது. இணையத்தின் ஆரம்ப காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இமெயில் சேவையை பிரபலமாக்கியதில் இந்த வாசகத்திற்கு கணிசமான பங்கு உண்டு.

அமெரிக்காவில் இணைய சேவையை வர்த்தக நோக்கில் வழங்கத்துவங்கிய முதல் சில நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஓ.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இமெயில் வருகையை அறிவிப்பதற்காக இந்த வாசகத்தை பயன்படுத்தியது. புதிய மெயில் வந்திருக்கும் போது கம்ப்யூட்டரில் இந்த வாசகத்தை கேட்கலாம்.

இதே பெயரில், 1998 ல் டாம் ஹாங்ஸ் மற்றும் மேக் ரயான் ஜோடியாக நடித்த ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. நகைச்சுவையான காதல் கதையை மையமாக கொண்ட இந்த படம், ஹாலிவுட் வரலாற்றில் எந்த இடத்தை பெற்றிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால் இணைய வரலாற்றில் நிச்சயம் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு.

ஏனெனில், இந்த படம் இமெயிலில் மலர்ந்து வளர்ந்த காதலை கதையை திரையில் சொல்லி வசீகரித்தது.

இமெயில் இன்று பழைய சங்கதியாகி இருக்கலாம். இமெயிலை மிஞ்சக்கூடிய நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அறிமுகமாகி விட்டன. ஆனால் 1990 களின் துவக்கத்தில் இமெயில் என்பது புதுமையான சங்கதியாக இருந்தது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே இமெயில் அறிமுகமாகிவிட்டாலும், 1990 களில் தான் இணையம் பொதுமக்கள் மத்தியில் அறிமுகமாகி மெல்ல பிரபலமாகி கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் இணையம் சார்ந்த எல்லாமே புதுமையாக இருந்தது. அப்படி தான், இணையத்தில் பரிமாறி, கம்ப்யூட்டர் திரையில் படிக்க கூடிய இமெயில் வசதியும் புதுமையாக இருந்தது.

இமெயிலா அப்படி என்றால் என்ன? என்று பலரும் வியப்பாக கேட்டுக்கொண்டிருந்த சூழலில், யு ஹாவ் காட் மெயில் திரைப்படம் வெளியானது. இந்த படம் வழக்கமான காதல் கதை தான். நாயகனும் நாயகியும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே காதல் மலரும். இமெயில் தான் அந்த காதலுக்கான வாகனமாக இருக்கும். பெரிய அளவிலான புத்தக கடை நடத்தும் நாயகன், அந்த கடையின் போட்டியை சமாளிக்க முடியாமல் சின்னதாக ஒரு புத்தக கடையை நடத்தி வரும் நாயகி. இதுவே அவர்கள் இருவருக்கும் மோதலுக்கான காரணமாக இருக்கும் நிலையில், இருவரும் இமெயில் வடிவில் அறிமுகமாகி இணையத்தில் சந்தித்துக்கொள்வார்கள். அரட்டை அறையிலும் அவர்கள் சந்திப்பு தொடரும். நிஜ வாழ்க்கையில் இருவரும் எதிரிகள் என்பது தெரியாமலேயே இணைய உலகில் அவர்களிடையே காதல் மலரும். அதன் பிறகு எதிர்பாராத திருப்பங்களோடு சுபமாக முடியும்.

இமெயிலில் மலரும் காதல் எனும் சரட்டை மையமாக வைத்துக்கொண்டு இயக்குனர் நோரா எப்ரான் படத்தை மிகவும் சுவாரஸ்யமாக இயக்கியிருப்பார். அந்த காலகட்டத்தில் இமெயில் அறிந்தவர்களுக்கும் சரி, இமெயிலை அறியாதவர்களுக்கும் சரி, இந்த படம் புதுவித அனுபவமாக அமைந்தது. இமெயிலை மையமாக கொண்ட கதை என்பது படத்திற்கான விளம்பரத்திலும் கைகொடுத்தது. படத்தில் இமெயில் வடிவில் காதல் பரிமாற்றம் விறுவிறுப்பாகும் போது, இமெயில் வருகையை உணர்த்தும் ஒலி உண்டாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதோடு, அவர்கள் திரையில் இமெயிலை காதல் துடிப்புடன் படிக்கும் காட்சிகளும் பார்வையாளர்களை லயிக்க வைத்தன.

படத்தின் பெரும்பகுதியில், நாயகனும், நாயகியும் பெரும்பாலும் கம்ப்யூட்டர் திரையை பார்த்துக்கொண்டிருப்பதை மீறி காட்சிகளில் பார்வையாளர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது இயக்குனருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதை சமாளிக்க காட்சியமைப்பில் பல்வேறு புதுமையான உத்திகளை கையாண்டனர். நடிகர்களும் இதற்கு ஒத்துழைத்தனர்.

இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. கதை சொல்லலில் இணையம் ஒரு மையமாக அல்லது இணையம் சார்ந்த அம்சங்கள் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்று உருவான படங்களுக்கு முன்னோடியாக அமைந்த படங்களில் இந்த படமும் ஒன்று. இத்தனைக்கும் இந்த படம் பழைய நாடகம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. இதற்கு முன்னரே ஹாலிவுட்டிலும் இந்த நாடகம் படமாகியிருக்கிறது. நாடகத்தில், எதிரும் புதிருமான நாயகனும், நாயகியும் கடிதம் மூலம் காதல் வளர்த்துக்கொள்வார்கள். இந்த கதையை படமாக்கும் உரிமை பெற்றிருந்த தயாரிப்பாளர், இதே கதையை இணையத்தை மையமாக கொண்டு எடுக்கலாம் என யோசித்ததன் விளைவு தான் யூ ஹாவ் காட் மெயில்.

படம் வெளியான போது, வாரனர் பிரதர்ஸ் நிறுவனம் படத்திற்காக என்று அதே பெயரில் இணையதளம் ஒன்றையும் அமைத்தது. திரைப்படத்திற்கான விளம்பர யுத்தியாக இணையதளம் அமைக்கலாம் எனும் புதுமை உத்திக்கும் இது ஒரு முன்னோடி முயற்சி. இந்த இணையதளத்தில் நுழைந்தால், திரைப்படத்தின் கதைச்சுருக்கம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடிவதோடு, அவர்களுக்கு இமெயில் வரும் ஒலியையும் கேட்க முடிந்தது. அதோடு அவர்கள் படத்தில் பரிமாறிக்கொண்ட மெயில்களையும் படிக்க முடிந்தது.

படம் வெளியாக பல ஆண்டுகளுக்கு இந்த தளம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட இந்த தளம் இருக்கிறது. ஆனால் மெயில்களை படித்துப்பார்க்கும் வசதி தான் இல்லை.

https://www.warnerbros.com/movies/youve-got-mail/

இணையதளங்கள் வழியே இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் வலை 3.0 தமிழ் இந்து தொடருக்காக எழுதப்பட்ட பகுதி.

எல்லோருக்குமான மெயில்- ஹாட்மெயில் செய்த மாயம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.