உங்களுக்கான ’டிவிட்டர்’ நாளிதழ்

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்சு ஊடகங்களோடு, டிவிட்டரின் துணை சேவையாக அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளுக்குள் காணமால் போன டிவிட்டர் டைம்ஸ் சேவையை ஒப்பிடுவது சரியா? என கேட்கலாம். ஆனால், டிவிட்டர் டைம்ஸ் சேவை புதிய ஊடகத்தின் முக்கிய சாரம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்து என்பதால் கவனத்திற்குறியதாகிறது.

டிவிட்டர் டைம்ஸ் சேவை பற்றி பார்ப்பதற்கு முன் சில இணைய குறிப்புகள் அவசியம்:

முதலில், குறும்பதிவு சேவையான டிவிட்டர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் என்பது. தொழில்நுட்ப உலகில் இது மூன்றாம் தரப்பு சேவை என குறிப்பிடப்படுகிறது. அதாவது மூல இணைய சேவை ஒன்றை சார்ந்த துணை சேவைகளை நிறுவனத்துடன் தொடர்பு இல்லாத மூன்றாம் தரப்பினர் தன்னிச்சையாக உருவாக்குவது.

இத்தகைய மூன்றாம் தரப்பு நிறுவனங்களினால் தொடர்ந்து உருவாக்கப்பட்ட டிவீட்டெக், டிவீட்மீமி போன்ற சேவைகளே டிவிட்டர் சேவை மேலும் பரவலாக அறியப்படவும், அதைவிட முக்கியமான அதன் பயன்பாடு பல தளங்களில் உணரப்படவும் முக்கிய காரணம். இந்த பட்டியலில் டிவிட்டர் டைம்ஸ் சேவையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, தனிப்பட்ட செய்தி சேவைகள் எனும் கருத்தாக்கம். நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் ஒன்றில் இருந்து பலருக்கு எனும் அடிப்படையில் இயங்குபவை. அவற்றில் ஒரே செய்தி பலரை சென்றடைகிறது. இதற்கு மாறாக, இணையம் சார்ந்த புதிய ஊடகங்களில் பயனாளிகள் தங்கள் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்ப தனிப்பட்ட செய்திகளை பெறுவது சாத்தியம்.

பர்சனலைஸ்டு நியூஸ் எனும் இந்த தனிப்பட்ட செய்திகள் குறித்து நிக்கலோஸ் நெக்ரபோண்டே எனும் நவீன ஊடக அறிஞர் நிறைய எழுதியிருக்கிறார். ’டெய்லி மீ’ எனும் பெயரில் இந்த கருத்தாக்கத்தை விவரித்திருக்கிறார்.

நெட்ஸ்கேப் பிரவுசர் வலைவாசலாகவும் செயல்பட்ட போது, பயனாளிகள் தங்களுக்கான செய்திகளை தேர்வு செய்து அணுகும் வசதியை அளித்தது. இன்னும் எண்ணற்ற முயற்சிகளையும், சேவைகளையும் குறிப்பிடலாம்.

ஆர்.எஸ்.எஸ் எனும் செய்தியோடை வசதியும் இதில் முதன்மையானது. இந்த வகையான தனிப்பட்ட செய்திகள் வசதியை டிவிட்டர் சார்ந்து அளிக்கும் சேவையாக டிவிட்டர் டைம்ஸ் அறிமுகமானது.

மற்ற எந்த சமூக ஊடக சேவைகளையும் விட குறும்பதிவு சேவையான டிவிட்டர் செய்திகள் பகிர்வுக்கு ஏற்றதாக அமைந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில், டிவிட்டர் வளர்ச்சியில், அதன் செய்தி வாகனத்தன்மையும் ஒரு முக்கிய அம்சம்.

டிவிட்டரின் காலவரிசையில், மற்ற பகிர்வுகளோடு செய்தி பகிர்வுகளையும் காணலாம். இப்படி ஒருவரது காலவரிசையில் அவரது பின் தொடர்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்தி இணைப்புகளை எல்லாம் பிரித்தெடுத்து டிஜிட்டல் நாளிதழ் வடிவில் தொகுத்தளித்தால் எப்படி இருக்கும்? டிவிட்டர் டைம்ஸ் அத்தகைய டிவிட்டர் நாளிதழ்களை தான் உருவாக்கி கொடுத்தது.

இணையத்தில் செய்திகளை அறிவதற்கான வழிகளும் இடங்களும் ஆயிரக்கணக்கில் இருப்பது போல, அவற்றை வடிவகட்டி பெறவும் எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. அந்த வகையில், டிவிட்டரில் உங்கள் நண்பர்கள் பகிரும் செய்திகளை மட்டும் தேர்வு செய்து வாசிப்பது என்பதும் ஒரு தேர்தல் வடிகட்டல் முறை தானே. டிவிட்டர் டைம்ஸ் இதை தான் சாத்தியமாக்கியது.

பொதுவான செய்திகளை விட, டிவிட்டரில் ஒருவரது பின் தொடர்பாளர்களும், நண்பர்களும் பகிர்ந்து கொள்ளும் செய்து அவரவருக்கு முக்கியமானதாக இருக்கும் எனும் அடிப்படையில் டிவிட்டர்டைம்ஸ் ஒவ்வொருவருக்குமான டிவிட்டர் நாளிதழியை உருவாக்கி கொடுத்தது. பயனாளிகளுக்கான தனிப்பட்ட செய்தி தொகுப்பாக அமைந்ததோடு, எளிதாக வாசிப்பதற்கான இடைமுகமாகவும் அமைந்திருந்தது.

இந்த சேவை அறிமுகமான போது, இதன் தன்மையை உணர்த்துவதற்காக இணைய உலகின் முக்கிய புள்ளிகளான எஸ்டர் டைசன், ஓ ரெய்லி, ராபர்ட் ஸ்கோபல் போன்றவர்களின் டிவிட்டர் காலவரிசையில் இருந்து உருவாக்கப்பட்ட டிவிட்டர் நாளிதழ்கள் உதாரணங்களாக முன்வைக்கப்பட்டன.

இதே முறையில் டிவிட்டர் பயனாளிகள் தங்களுக்கான டிவிட்டர் நாளிதழை உருவாக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நாளிதழ் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவதோடு, நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் எனும் அடிப்படையிலும் செய்தி இணைப்புகள் திரட்டப்பட்டு நாளிதழில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

யோசித்துப்பாருங்கள், ஊடகத்தீணிப்பு, அல்கோரிதம் பரிந்துரைகள் எல்லாம் இல்லாமல், நமக்கான டிவிட்டர் நாளிதழை உருவாக்கி கொண்டு நமக்கான செய்திகளை வாசிக்கும் வசதி எப்படி இருந்திருக்கும். ஆனால், பலவேறு டிவிட்டர் துணை சேவைகள் போலவே இந்த சேவையும் இடையிலேயே கைவிடப்பட்டது.

எனினும், டிவிட்டர் டைம்ஸ் அடிப்படையாக கொண்டிருந்த டிவிட்டர் பகிர்வுகள் சார்ந்த தனிப்பட்ட செய்திகள் தொகுப்பு எனும் கருத்தாக்கம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது மட்டும் அல்ல, இப்போது நாம் நம்மை அறியாமலே, பேஸ்புக், வாட்ஸ் அப் சார்ந்த செய்தி தொகுப்புகளை தான் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம், நம் கட்டுப்பாடு இல்லாமல்.

டிவிட்டர் டைம்ஸ் நாளிதழின் பழைய வடிவை இணைய காப்பகத்தில் காணலாம். –  https://web.archive.org/web/20091102175437/http://twittertim.es/

இந்த சேவையின் துணை நிறுவனர்களில் ஒருவரான மாக்சின் கிரினேவ் (Maxim Grinev.) தனது வலைப்பதிவில் டிவிட்டர் டைம்ஸ் சேவை பற்றி விவரித்திருக்கிறார்: https://maxgrinev.com/2009/07/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *