ஏஐ என்பது தொழில்நுட்ப மாயமோ, பூதமோ அல்ல: அது காத்திருக்கும் ஆபத்தோ, மனிதகுலத்திற்கான பேரழிவின் முன்னோட்டமோ அல்ல. ஏஐ என்பது திடிரென வானத்திலிருந்து வந்திருப்பதும் அல்ல. ஏ.ஐ எனப்து அடிப்படையில் இயந்திரங்களை மனித புத்திசாலித்தனம் தேவைப்படும் செயல்களை செய்ய வைப்பது.
செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ நுட்பத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக ஏஐ மாநாடு நடத்தப்பட்ட 1956 ம் ஆண்டு ஏஐ வரலாறு துவங்கியதாக கருதப்பட்டாலும், கருத்தியல் நோக்கில் அதன் வரலாறு வெகு காலம் முன்பே துவங்கிவிட்டது.
உதாரணமாக கணித மேதை லெப்னிஸ், கம்ப்யூட்டர் எல்லாம் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே சட்ட செயல்பாடுகளை இயந்திரங்கள் மூலம் தானியங்கிமயமாக்க முடியுமா என யோசித்திருக்கிறார். பாஸ்கலின் கணித இயந்திரமும் இதற்கு முன்னோடி.
இப்படி ஏஐ நுட்பங்கள் வளர்ந்து வந்த விதத்தை வரலாற்று நோக்கில் விவரிக்கிறது ‘ஏஐ ஒரு எளிய அறிமுகம்’புத்தகம். செயற்கை அறிவின் தோற்றத்தை விவரிப்பதோடு, செயற்கை நுண்ணறிவின் வகைகள், அதன் பல்வேறு கூறுகள் உள்ளிட்டவற்றையும் இந்த புத்தகம் விவரிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய, இயந்திர கற்றல், முகமறிதல் நுட்பம் உள்ளிட்டவற்றையும் விவரிக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக அமையும் அல்கோரிதம்கள் செயல்பாட்டையும் விளக்குகிறது.
செயற்கை நுண்ணறிவு பாதையில் சாட்பாட்களின் அறிமுகம், தானியங்கி வாகன முயற்சி உள்ளிட்ட அம்சங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
வரலாற்று தகவல்களையும், தொழில்நுட்ப விவரங்களையும், பல்வேறு புள்ளிகளில் அடுக்கி கொண்டே போகிறது இந்த புத்தகம்.
இரண்டு பகுதிகளாக அமையும் இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதி, சமகால நோக்கில் ஏஐ பல்வேறு துறைகளில் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை விவரிக்கிறது. உளவியல் துவங்கி, வங்கித்துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஏஐ பயன்பாடு, தாக்கம், பாதிப்புகளை புத்தகம் அலசுகிறது.
சாட்ஜிபிடி பரபரப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே, பல்வேறு துறைகளில் ஏஐ ஊடுருவிய விதத்தையும் இதன் மூலம் அறியலாம்.
தினமலர் பட்டம் இதழ் மற்றும் இந்து தமிழ் திசை காமதேனு டிஜிட்டல் பதிப்பில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
ஏஐ தொடர்பாக அவசியம் வாசிக்க வேண்டுய நூல்:
ஏற்கனவே வெளியான சாட்ஜிபிடி சரிதம் நூலுடன் சேர்ந்த்து வாசிப்பது இன்னும் பொருத்தும்.
ஏஐ ஒரு எளிய அறிமுகம்
வெளியீடு: ஜீரோடிகிரி பப்ளிகேஷன்ஸ்
விலை: 350