ஏஐ. என்பது சமையல் குறிப்புகளின் அறிவியல்

செய்யறிவு ( ஏஐ.) என்றால் என்ன? எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. அதே போல பலவிதமான வரையறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வரையறையும், ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள தேவையான பல அம்சங்களை வலியுறுத்துகின்றன. ஒவ்வொன்றிலும் சில விடுபடல்களும் உண்டு.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் சிக்காகோ பல்கலைக்கழகம் சார்பிலான வரையறை மற்றும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

ஏஐ, என்பது மனித புத்திசாலித்தனம் தேவைப்படும் செயல்களை செய்வதற்கு ஏற்ற இயந்திரங்களை உருவாக்கும் கம்ப்யூட்டர் அறிவியலின் ஒரு பிரிவு’ என்கிறது இந்த வரையறை.

அனுபவம் (இயந்திர கற்றல்), இயற்கை மொழியை புரிந்து கொள்ளுதல், ஒரே மாதிரி தன்மைகளை கண்டறிதல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் முடிவு எடுத்தல் ஆகியவை ஏஐக்கான செயல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரையறையோடு, இயான் கேஷ் எனும் பேராசிரியர் அளித்துள்ள விளக்கம் தான் சுவாரஸ்யமாக இருக்கிறது. பல்வேறு வகை இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கான சமையல் குறிப்புகளை உருவாக்குவது தான் கம்ப்யூட்டர் அறிவியல் என்கிறார் அவர். (சமையல் குறிப்புகள் போன்ற வழிகாட்டி குறிப்புகள் என புரிந்து கொள்ள வேண்டும்.)

”கம்ப்யூட்டர் அறிவியலின் பல பிரிவுகள் நமக்குத்தேவையானவற்றை உத்திரவாதமாக செய்யக்கூடியவற்றை நம்மால் உருவாக்க முடியும். ஆனால் உலகில் மிகவும் சிக்கலான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. எனவே என்னைப்பொருத்தவரை, இந்த குறிப்புகளை பின்பற்றவும் என தெளிவாக அணுக கூடிய திருப்தி அளிக்கும் தீர்வுகளை கிடைக்காவிட்டாலும், உலகின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்படும் நுட்பங்கள், கருவிகளை செயற்கை நுண்ணறிவு என கருதலாம் என்கிறார் இயான் கேஷ்.

அடிப்படையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது தான் கம்ப்யூட்டர் நிரல்கள் மற்றும் ஏஐ நுட்பங்களின் நோக்கம். என்ன பிரச்சனை, கம்ப்யூட்டர் அவற்றை எப்படி புரிந்து கொள்ளச்செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது எல்லாமும்!

ஏஐ விளக்கம் தொடரும்..

ஏஐ அடிப்படைகள், வரலாற்றை அறிய “ ஏஐ ஒரு எளிய அறிமுகம்” புத்தகம் வாசிக்கவும்.

  •  
     
About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *