டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற மொழிகளிலும் பொழிபெயர்த்து வெளியிட உதவும் சேவை.
டிவின்ஸலேட்டர் என்னும் இந்த சேவையின் மூலம் ஒருவர் தனது டிவிட்டர் பதிவுகளை மற்ற மொழிகளிலும் வெளியிட்டுக்கொள்ளலாம்.
ஏற்கனவே கூகுல் மொழிபெயர்ப்பு சேவை மூலம் தங்கள் டிவிட்டர் பதிவுகளை மொழிபெயர்த்து வெளியிடுபவர்கள் இந்த சேவையின் மூலம் எளிதாக அதனை செய்ய முடியும்.
இந்த தளத்தில் டிவிட்டர் பதிவுகளை சம்ர்பித்தால் விரும்பும் மொழியில் இதனை மாற்றித்தந்து விடுகிறது.ஜெர்மன், போல்ந்து, என பல மொழிகளில் வெளியிட்டுக்கொள்ளலாம். இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதே போன்ற சேவையை டிவீட்டிரான்ஸ்லேட் மற்றும் டிவீட்டிரான்ஸ் ஆகிய தளங்களும் வழங்கி வருகின்றன.
இவற்றில் டிவீட்டிரான்ஸ் ஒரு மணி நேர அவகாசம் கேட்கிறது . காரணம் அது மனிதர்களை கொண்டு மொழிபெயர்த்து தருகிறது. எனவே துல்லியமாக இருக்கும். மற்றவை இயந்திர மொழிபெயர்ப்பை வழங்குகின்றன.
நிற்க பிற மொழிகளில் டிவிட்டர் செய்வதால் என்ன பயன்? மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்வவர்களுக்கு இது உதவியாக இருக்கும். மற்றவர்களுக்கு புதுவித அனுபவம். இதன் மூலம் புதிய மொழியை கற்கவும் முடியும்.அதோடு உண்மையிலேயே டிவிட்டர் மூலம் மகத்தான கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அவை மற்ற நாட்டவரையும் சென்றடையட்டுமே.
தவிரவும் இப்போது பாலிவூட் நடிகை மல்லிகா போன்றோர் டிவிட்டரில் கலக்கி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக இந்திக்கு போகும் திரிஷாவும் நயன்தாராவும் இந்தி ரசிகர்களை கவர இந்தியிலேயே டிவிட்டர் செய்ய இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
—–

0 Comments on “எந்த மொழியிலும் டிவிட்டர் செய்யலாம்”
KarthiK
என்னதான் இருந்தாலும் தமிழுக்கு இடம் ஒதுக்க மாட்டேன்கிறாங்களே????
cybersimman
ஆம். என்ன செய்வது .
colvin
தமிழில் இந்த சேவை வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
பயனுள்ளள தகவல். நன்றி நண்பரே
அன்புடன்
கொல்வின்
இலங்கை