ஐ.எம்.டி.பி., எந்த வகை இணையதளம்?

ஐ.எம்.டி.பி,. இணைய தளம் சமூக ஊடகமா? எனும் கேள்வி அர்த்தமுள்ளதா? அல்லது விலக்கங்கமானாதா? எனும் துணைக் கேள்வியும் கேட்கலாம்.

முதல் கேள்வி தான் முக்கியமானது. துணைக் கேள்வி ஏஐ யுகத்திற்கானது.

இணைய திரைப்பட களஞ்சியம் என அறியப்படும், ஐ.எம்.டி.பி., திரைபடத்துறை சார்ந்த தரவு பட்டியல் தளம் என்பது பரவலாக அறியப்பட்டதே. திரைத்துறையை பொருத்தவரை செல்வாக்கு மிக்க இணையதளம். – இணைய உலகின் ஹாலிவுட் என்றும் சொல்லலாம்.

திரைப்படங்கள் தொடர்பான தகவல்களும், தரவுகளும் தேவை என்றால் அணுக கூடிய இணையதளம் என்பதோடு, ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களின் செல்வாக்கை தீர்மானிக்கவும் உதவும் தளம். ஐஎம்டிபி தளம் பற்றி இன்னும் பல அம்சங்களை அலசலாம், விவாதிக்கலாம். இப்போதைக்கு, ஐஎம்டிபி சமூக ஊடக வகையைச்சேர்ந்த தளமா என்று மட்டும் விவாதிக்கலாம்.

வலைக்கு முன் !

இந்த கேள்வியை எழுப்புவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில், ஐஎம்டிபி, சமூக ஊடகம் எனும் சொல்லும் வரையறைக்குள் வரக்கூடிய தளம் தான். திரை தகவல் களஞ்சியமான ஐஎம்டிபி, தனி ஒரு மனிதரால் வளரந்துவிடவில்லை. திரைப்பட ’அதி ரசிகர்’ என வர்ணிக்க கூடிய கர்னல் நீதம் துவக்கிய தளம் என்றாலும், அவரைப்போன்ற ஆயிரக்கணக்கான திரைப்பட ரசிகர்களின் பங்களிப்பால் அந்த தளம் வளர்ந்தது.

ஆக, பயனாளிகள் பங்களிப்பை அடிப்படையாக கொண்ட தளம் என்பதால், சமூக ஊடக தளமாக கருதப்பட வேண்டும். அது மட்டும் அல்ல, ஆரம்ப ஆண்டுகளில் திரை ரசிகர்களுக்கான மிகத்துடிப்பான விவாத குழுக்களையும் கொண்டிருந்தது. பயனர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த அம்சமும் சமூக ஊடகத்தின் இலக்கண கூறுகளில் ஒன்று.

எனினும், ஐஎம்டிபி தளத்தை இதுவரை யாரும் சமூக ஊடக தளம் என குறிப்பிடாததற்கு காரணம், சமூக ஊடகம் எனும் கருத்தாக்கம் பரவலாவதற்கு முன்னரே இந்த தளம் உருவானது தான். இந்த இடத்தில் ஐஎம்டிபி வரலாற்று தகவலை நினைவில் கொள்வது நல்லது.

இணையத்தின் பழமையான தளங்களில் ஒன்று என்பது மட்டும் அல்ல, சமூக ஊடக சேவைகளின் முன்னோடி என கருதப்படும் யூஸ்நெட் எனும் பயனர் குழு விவாத தளத்தில் இருந்து துவங்கியது என்பது முக்கியமானது. அந்த வகையில், வலைக்கு முன்னர் உருவான இணையதளம்.

தள வரலாறு

1993 ல் தான் வலை பொதுமக்களுக்கு அறிமுகமாகிறது. நாமறந்த வகையிலான இணையதளங்கள் 1995 லிருந்து தான் உருவாயின. இந்த காலகட்டத்தில், யூஸ்நெட் திரை விவாத குழு பட்டியலை கர்னல் நீதம், ஐஎம்டிபி தளமாக மாற்றி, பயனர்கள் பங்களிப்பை வரவேற்கிறார். பயனர்கள் ஒத்துழைப்போடு, திரைத்தகவல்கள் குவிந்ததோடு, திரை ரசிகர்கள் ஆர்வமாக கூடும் இணைய சமூகமாகவும் வளர்ந்தது.

இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் ஆரம்ப வெற்றிக்கதைகளில் ஒன்றாக கருதப்படும் ஐஎம்டிபி தளம் இதனிடையே இ-காமர்ஸ் மெகா நிறுவனம் அமேசானால் கையகப்படுத்தப்பட்டது.

புத்தாயிரம் ஆண்டு காலத்தில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் வரிசையில் முன்னணியில் இருந்தது. ஐஎம்டிபி வரலாற்று குறிப்புகளை இன்னும் கூட விரிவாக குறிப்பிடலாம். ஆனால், நாம் கவனிக்க வேண்டிய அம்சம் புத்தாயிரமாண்டு வாக்கில் ஐஎம்டிபி தளம் எப்படி வகைப்படுத்தப்பட்டது என்பது தான்.

2000 ஆண்டில் வெளியான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று, அப்போது பிரபலமாக இருந்த ஜியோசிட்டிஸ், டேஜா நியூஸ் போன்ற தளங்களுடன் ஐஎம்டிபி தளத்தை குறிப்பிட்டு, இந்த தளங்களை எல்லாம் சமுதாய தளங்கள் என குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலத்தில் கம்யூனிட்டி சைட்ஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலிருந்து பதிப்பிக்கப்படும் தன்மை இல்லாமல் பயனர்கள் பங்களிப்பை மையமாக கொண்ட தளங்கள் எனும் வகையில் சமுதாய தளங்கள் என அடையாளம் காட்டியிருந்தது.

பயனர்கள் ராஜ்ஜியம்

பயனர்களால் வளர்ந்த இத்தகைய சமூதாய தளங்கள், வருவாய் தேவை நெருக்கடியால் வர்த்தக தன்மை மிக்கதாக மாறிவருவது பற்றி இந்த கட்டுரை விவாதிக்கிறது. தங்களின் அபிமான தளங்கள், விளம்பர ஊடுருவலோடு வர்த்தக தன்மை மிக்கதாக மாறியது தொடர்பான பயனாளிகள் அதிருப்தியையும் கட்டுரை பதிவு செய்கிறது.

நிற்க, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜியோசிட்டிஸ், டேஜாநியூஸ் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஐஎம்டிபி தாக்குப்பிடித்து வளர்ந்திருக்கிறது.

விஷயம் அது மட்டும் அல்ல, சமூக ஊடகம் என்பதன் அடையாளமாக கருதப்படும் பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற தளங்கள் எல்லாம் இந்த காலத்தில் உருவாக கூட இல்லை. ( இவற்றின் முன்னோடி சேவைகள் இருந்தது வேறு விஷயம்).

சமூக ஊடகமா?

பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் வெற்றியால், பயனர்கள் ராஜ்ஜியமாக விளங்கிய இந்த வகை தளங்கள் சமூக ஊடகம் என அடையாளம் காணப்பட்டன. அதன் பிறகே இந்த சொல்லும், கருத்தாக்கமும் பரவலானது.

ஆனால், இதற்கு முன்னரும் சமூக ஊடகம் இருந்தது. அதன் அங்கமான வலைப்பதிவுகள் இருந்தன. முன்னோடி சமூக ஊடக சேவையான பிளிக்கர் இருந்தது. ஆனால், இந்த காலகட்டத்தில் பயனர்கள் பங்களிப்பை மையமாக கொண்ட தளங்கள் நியூயார்க் டைம்ஸால், சமுதாய தளங்கள் என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்தால், சமூக ஊடக வரலாற்று பாதையில் ஒரு முக்கிய போக்கை உணர முடிகிறது.

இப்போது ஐஎம்டிபி சமூக ஊடக தளமா? எனும் கேள்வி எழுப்புவதன் அவசியத்தை உணரலாம். இந்த கேள்விக்கான பதிலில் சமூக ஊடக வரலாறும் பின்னி பினைந்திருப்பதை உணரலாம்.

  •  

வால்: இதே கேள்வியை கேட்டால், கூகுள் ஏஐ, இல்லை என பதில் அளித்து ஆனால் ஐஎம்டிபி சமூக ஊடக முகவரிகளை கொண்டிருக்கிறது என தவறாக பதில் தருகிறது. ஏஐ தேடியந்திரம் பிரெப்லக்சிட்டியும், தவறாகவே பதில் அளிக்கிறது. ஐஎம்டிபி தளம் சமூக ஊடகம் பரவலாகும் முன் சமூக ஊடக தன்மையோடு உருவான தளம் என்பதை எந்த ஏஐ சேவையும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றுக்கு சமூக ஊடகமும் புரியாது, இணைய வராறும் தெரியாது.

உண்மையில் இந்த கேள்விக்கான பதில், ஐஎம்டிபி சமூக ஊடக தளமாக உருவாகி வளர்ந்து பின்னர் முழுவீச்சிலான வர்த்தக தரவு பட்டியலாக மாறிவிட்ட தளம் என்றே விமர்சிக்க வேண்டும். இதெல்லாம் சாட்பாட்களால் முடியாதவை.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை வாசிக்க:  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *