உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம்.

இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த ஆண்டு, இணைய உலகில் மைல் கல் ஆண்டாக அமைந்திருப்பதை உணரலாம். ஆம், 1996 ம் ஆண்டில் தான், இணையத்தில் முதல் சமூக ஊடக சேவை தளங்கள் அறிமுகம் ஆகத்துவங்கின. அவற்றில் ஒன்றான லூனார்ஸ்டிராம் தளம் பற்றி பார்ப்பதற்கு முன், இந்த இடத்தில் சில இணைய வரலாற்று குறிப்புகள் அவசியமாகின்றன.

முதல் விஷயம்,1995 தான் இணையம் வர்த்தகமயமான ஆண்டாக கருதப்படுகிறது. இன்றளவும் இணையத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் அமேசான், இபே உள்ளிட்ட முன்னோடி இணைய நிறுவனங்கள் இந்த ஆண்டு தான் துவங்கப்பட்டன. இரண்டாவது அம்சம், சமூக ஊடக வரலாற்றில், முதல் சமூக வலைப்பின்னல் தளமாக பரவலாக கருதப்படும் சிக்ஸ்டிகிரீஸ்.காம், 1997 ல் அறிமுகமானது.

இடைப்பட்ட 1996 ம் ஆண்டில் அறிமுகமான லூனார்ஸ்டிராம் சமூக ஊடக பரப்பில் பலவிதங்களில் முக்கியமான தளமாக அமைகிறது.  இந்த தளத்தின் மூலப்பெயர் வேறு என்றாலும், இதன் மூல நோக்கம் வேறு என்றாலும், சமூக ஊடக சேவைகளில் முன்னோடி தளங்களில் ஒன்றாக அமைகிறது.

இந்த சேவை துவக்கத்தில் இணைய சமூகமாக (community site) அறிமுகமாகி பின்னர் சமூக வலைப்பின்னல் தளமாக மாறியதாக, சமூக ஊடக வல்லுனரான டேனா பாயட் (danah m. boyd ) குறிப்பிடுகிறார். சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாற்றை ஆழமாக அலசி ஆராயும் செரிவான கட்டுரையில், சமூக வலைப்பின்னல் தளங்களை வரையறை செய்து விட்டு, எல்லா ஆரம்ப கால சமூக வலைப்பின்னல் சேவைகளும் இவ்விதமாக தோன்றவில்லை என தெரிவித்து இதற்கான உதாரணமாக லூனார்ஸ்டிராம் தளத்தை குறிப்பிடுகிறார்.

பயனர்களையும், பகிர்வு அம்சத்தையும் முக்கியமாக கொண்ட தளங்களை குறிக்கும் சமூக ஊடகம் எனும் வரையறையின் கீழ் வரும் பலவிதமான சேவைகளில் சமூக தளங்கள் முக்கியமானவை மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு முன் தோன்றியவை. அந்த வகையில் வெல் ( ) போன்ற தளங்கள் வலைக்கு முந்தையவை என்றாலும், லுனார்ஸ்டிராம் வையவிரிவு வலை பிரபலமாகத்துவங்கிய காலத்தில் இந்த தளம் அறிமுகமானது.

இணையம் மூலம் பயனாளிகள் தங்களுக்கான மெய்நிகர் பரப்பை உருவாக்கி கொண்டு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட வழி செய்யும் தளங்கள், இணைய சமூக தளங்களாக கொள்ளப்படுகின்றன. இந்த வகை தளமாக ஐரோப்பாவின் ஸ்வீடனில் இருந்து உருவான லூனார்ஸ்டிராம் தளம், அந்நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேவையாக விளங்கியது. உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொண்டு, புகைப்படங்களை பதிவேற்றி, இணைய நாட்குறிப்பு பாணியிலான தகவல்களை இடம்பெற வைக்க உதவிய இந்த தளம், பத்து சதவீத ஸ்வீடன் மக்களால் பயன்படுத்தப்பட்டதாக 2005 ல் இந்த தளம் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிடுகிறது.

அந்நாட்டு மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்த தளத்தின் உறுப்பினர்கள் என்றும் இந்த கட்டுரை தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் பேஸ்புக் அதன் பிள்ளை பருவத்தில் இருந்தது என்பதை நினைவில் கொள்வது நல்லது. இந்த கட்டுரை கூட, கொரியாவின் சைவேர்டு, மற்றும் பேஸ்புக்கிற்கு முன் ஆதிக்கம் செலுத்திய மைஸ்பேஸ் ஆகிய சமூக தளங்களை தான் உதாரணமாக குறிப்பிடுகிறது.

டிஜிட்டல் தகவல் தொடர்பின் வருங்கால முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த தளம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தகவல் சமூகத்தில் இருந்து உரையாடும் தன்மை கொண்ட சமூகமாக மாறிவருவதன் அடையளமாக இந்த தளம் திகழ்வதாகவும் இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட வல்லுனர் கூறியிருந்தார்.

ஸ்வீடன் வெற்றியை அடுத்து ஆங்கில மொழி வசதியோடு, பிரிட்டனில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

சமூக ஊடக வரலாறு மற்றும் வளர்ச்சி பற்றி அலசும் போது, பேஸ்புக், டிவிட்டர் என்று மட்டுமே கம்பு சுற்றிக்கொண்டிருக்காமல் தவறாமல் லூனார்ஸ்டிராம் தளம் பற்றியும் பேச வேண்டும். இது முன்னோடி சமூக ஊடக தளம் என்பது மட்டும் அல்ல, ’இணையத்தில் உலகின் முதல் சமூக ஊடக தளம்’ என்று தனக்குத்தானே அடைமொழி கொடுத்துக்கொண்ட தளமும் கூட!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.