அமெரிக்க வீடியோகிராபரான ஜான் மெக்கார்த்தியை கூகுள் ஆசி பெற்ற அதிர்ஷ்டசாலி என்றும் சொல்லலாம் அல்லது கூகுளிடம் அங்கீகாரம் பெற்ற ஆற்றல் மிக்கவர் என்றும் சொல்லலாம். பின்னர் மெக்கார்த்தி தொடர்பான தேடலுக்கு இன்னொரு மெக்கார்த்தி கூகுளில் தேடலில் முதலிடம் பிடிப்பது என்றால் சும்மாவா?
இந்த ஜான் மெக்கார்த்தி கூகுளின் அங்கீகாரம் பெறுவதை எப்படி சாதித்தார் என்றுத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவருக்கான அங்கீகாரம் இணைய தேடல் பற்றி பலவற்றை சொல்லாமல் சொல்லுகிறது.
அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜான் மெக்கார்த்தி (John McCarthy) ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தந்தை என போற்றப்படுபவர். ஏஐ- நுட்பத்திற்கு இந்த பெயர் சூட்டியதும் இவர் தான். செயற்கை நுண்ணறிவுக்கான ஆய்வை தொடங்கி வைத்த மேடையாக கருதப்படும் டார்ட்மவுட் மாநாட்டை (1956) முன்னின்று நடத்தியவரும் இவரே.
மெக்கார்த்தி பற்றி அறிந்து கொள்ள இன்னும் எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. ஏஐ நுட்பத்திற்கான இவரது வரையறைகள் அடங்கிய இணைய பக்கம் ஏஐ ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டியது.
உலகில் இன்னும் எண்ணற்ற மெக்கார்த்திகள் இருக்கின்றனர். அமெரிக்காவிலேயே இன்னொரு பிரபலமான மெக்கார்த்தி இருந்திருக்கிறார். பனிப்போர் காலத்தில் கம்ப்யூனிஸ விரோத பார்வையால் உலகையே நடுங்க வைத்தவர். மெக்கார்த்தியிஸம் இவரது உருவாக்கம்.
ஏஐ மேதை பற்றி பேசும் போது மெக்கார்த்தியிஸம் தேவையில்லாத இடைச்சொறுகல் தான். சொல்ல வந்த விஷயம் என்னெவெனில், மெக்கார்த்தி தொடர்பான வாசிப்பின் ஒரு பகுதியாக அவரைப்பற்றிய தகவல் வரைபடங்கள் ( ) இருக்கின்றனவா? என அறியும் ஆர்வத்தில் கூகுளில் தேடிப்பார்த்த போது இரண்டு ஆச்சர்யங்கள் ஏற்பட்டன.
ஒன்று ஏஐ மேதை பற்றி பிரத்யேக தகவல் வரைபடம் எதுவும் இல்லை என்பது. அதைவிட ஆச்சர்யம், ஜான்மெக்கார்த்தி இன்போகிராபிக் எனும் தேடலுக்கு அமெரிக்க வீடியோகிராபர் ஜான் மெக்கார்த்தியின் (https://www.johnm.cc/) தனிப்பட்ட இணையதளம் முதல் முடிவாக வந்தது தான்.
இதில் என்ன ஆச்சர்யம் என கேட்பதற்கில்லை. இந்த தேடலுக்கான கூகுளின் மற்ற முதல் பக்க முடிவுகள் அனைத்தும் ஏஐ மேதை மெக்கார்த்தி சார்ந்ததாகவே இருக்கிறது. அப்படியிருக்க, வீடியோகிராபரான மெக்கார்த்தியின் இணையதளம் முதல் முடிவாக தோன்றுவதை அவருக்கான இணைய ஜாக்பாட் என்று சொல்ல வேண்டும்.
உலகில் உள்ள லட்சக்கணக்கான ஜான் மெக்கார்த்திகளில் இந்த ஜான் மெக்கார்த்தி மட்டும் கூகுள் தேடலில் முதலிடும் பெறுவது என்றால் குறிப்பிடத்தக்க விஷயம் தானே.
சரி இந்த வீடியோகிராபரின் இணையதளத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால், அவரது போர்ட்போலியோ வகை தளம் என்பதை தவிர பெரிதாக எதுவும் இல்லை. இதழியல் துறையிலும் பணியாற்றியுள்ளவர், வீடியோக்கள், புகைப்படங்கள், வடிவமைப்புகளை உருவாக்குவதோடு தகவல் வரைபடங்களையும் (INFOGRAPHICS ) உருவாக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார்.
இப்படி அவர் உருவாக்கிய தகவல் வரைபடங்களையும் தனித்தலைப்பில் பட்டியலிட்டிருக்கிறார். அதன் பயனாகவே, மெக்கார்த்தி இன்போகிராபிக்ஸ் தேடலில் அவரது தளம் முதலில் வந்திருக்கிறது.
ஜான் மெக்கார்த்தி எனும் தேடலுக்கு ஏஐ மேதை முன்னிலை பெறுவது பொருத்தமானது என்றாலும், ஏஐ மேதைக்கு மட்டும் தான் இடம் இருக்க வேண்டுமா? மற்ற மெக்கார்த்திகளும் முன்னிறுத்தப்படுவது தேடலின் ஜனநாயக தன்மையாக கருதலாம்.
ஆனால், வீடியோகிராபர் மெக்கார்த்திக்கு மட்டும் இந்த ஜனநாயகம் சாத்தியமாகி இருப்பது தான் யோசிக்க வைக்கிறது. இதன் பின்னே தேடியந்திரமயமாக்கல் கலையான எஸ்.இ.ஓ உத்திகள் மட்டும் தான் இருக்கின்றனவா? என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். அவரது இணையதளம் கூகுளுக்கு சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
எஸ்.இ.ஓ நோக்கில் இந்த தளம் ஆய்வுக்குறியதே. அதைவிட, கூகுள் தேடல் முடிவுகளின் முன்னுரிமை அம்சங்களையும் நாம் கேள்விக்கு உள்ளாக்கினால் இன்னும் நல்லது. அப்படியே, சாட்ஜிபிடி யுகத்தில் இதை ஏஐ சாட்பாட் வாயிலான தேடலிலும் நினைவில் கொள்ள வேண்டும்.