டக்டக்கோ சிறந்த தேடியந்திரம் என்று ஏற்றுக்கொள்வதில் பெரும்பலானோருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், டக்டக்கோ சிறந்ததொரு மாற்று தேடியந்திரம் என்று முன்னிறுத்தப்படுவதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்ல.
டக்டக்கோவும் தன்னை மாற்று தேடியந்திரமாகவே முன்னிறுத்திக்கொள்கிறது. – பயனாளிகளின் தனியுரிமையை மதிக்கும், பாதுகாக்க முற்படும் தேடியந்திரம்!
மாற்று தேடியந்திரம் என்ற வகையில் டக்டக்கோ பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். இப்போது, ஏஐ யுகத்தில் டக்டக்கோ தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் விதம் கவனத்தை ஈர்ப்பதால் மீண்டும் ஒரு முறை எழுதத் தோன்றுகிறது.
எங்கும் ஏஐ அலை வீசினாலும், டக்டக்கோ ஏஐ வசதியை திணிக்காமல், அதை அழகாக முன்னிறுத்துகிறது.

டக்டக்கோவில் தேடிப் பார்த்தீர்கள் என்றால், இந்த அம்சத்தை நீங்களும் உணரலாம். டக்டக்கோ தேடல் முடிவுகளை பட்டியலிடுவதோடு நிறுத்திக்கொள்கிறது. அதில் ஏஐ சுருக்கத்தை தேவையில்லாமல் கலப்பதில்லை.
ஒருவேளை பயனாளிகளுக்கு ஏஐ சுருக்கம் தேவைப்பட்டால், அதை கேட்டுப்பெறலாம். இதற்கான வசதி, சர்ச் அசிஸ்ட் (Search Assist ) மூலம் வழங்கப்படுகிறது. தேடல் முடிவுகளுக்கு மேல் சிறியதாக தோன்றும் சர்ச் அசிஸ்ட் வசதியை கிளிக் செய்தால், தேடல் முடிவு தொடர்பான ஏஐ சுருக்கத்தை பெறலாம்.
தொடர்ந்து ஏஐ வசதியுடன் உரையாட விரும்பினால், சர்ச் அசிஸ்ட் வசதி அருகே உள்ள டக்.ஏஐ (Duck.ai ) ஐகானை கிளிக் செய்து, டக்டக்கோ ஏஐ உதவியாளர் சேவையுடன் உரையாடலாம். சின்ன விஷயம் தான், ஆனால் பயனாளிகளை மதித்து, தேர்வை அவர்களிடம் வழங்கும் வகையில் இந்த அம்சங்கள் அமைகின்றன. (அதோடு பயனாளிகள் தேடலை பின் தொடர்வதில்லை எனும் அம்சத்தையும் (Protected) சுட்டிக்காட்டுகிறது. )
ஏஐ நுட்பம் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருப்பதால், தேடல் வசதியிலும் ஏஐ வசதியை தவிர்ப்பதற்கில்லை. கேள்வி பதில் வடிவில் பதில் அளிக்கும் பெர்ப்லக்சிட்டி உள்ளிட்ட ஏஐ தேடியந்திரங்கள் பிரபலமாக இருப்பதால் மற்ற தேடியந்திரங்களும், ஏஐ மூலமான கேள்வி பதில் வசதியை வழங்கும் தேவை இருக்கிறது.
ஆனால், ஏஐ சுருக்கங்களை விரும்பாதவர்களுக்கு, தேடல் முடிவுகளில் இந்த வசதி முன்னிறுத்தப்படுவது அதிருபதியை அளிக்கலாம். அவர்களுக்கு ஏஐ சுருக்க வசதியை நீக்கும் அல்லது முடக்கும் வாய்ப்பை அளித்து இன்னும் அதிருப்தி அடையச்செய்வதற்கு பதிலாக டக்டக்கோ, ஏஐ சுருக்க வசதியை தேவை எனில் பயனாளிகளே தேர்வு செய்து கொள்ள வழி செய்கிறது.
பயனாளிகள் தனியுரிமையை மதிக்கும் அம்சத்தின் நீட்சியாக இதை கருதலாம். டக்டக்கோ, பாதுகாப்பு, தனியுரிமை, மன நிம்மதி (Protection. Privacy. Peace of mind.) ஆகிய மூன்று அம்சங்களை தற்போது முதன்மையாக கருதுகிறது.
டக்டக்கோ ஏஐ உதவியாளர் சேவையை மட்டும் அல்ல, தனி பிரவுசர் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.
உலகின் முதல் சர்ச் இஞ்சின் எது தெரியுமா?
–