ஏஐ விவாதங்களில் நாம் கவனிக்க மறுப்பவை

படிக்காத மேதை எனும் பாராட்டுக்குறியவர்கள் யார் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவரை, இப்படி பாராட்டி விடக்கூடாது. வெற்றி பெற்றதோடு, அவர்கள் மேதையாகவும் இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, வெற்றி பெற்றவர்கள் மேதையாக இல்லை எனில் நாம் அதை வெளிப்படையாக சொல்லவும் வேண்டும். பேராசிரியர் ஒருவர் இதை கச்சிதமாக செய்திருக்கிறார். அதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

பென்தெட் எனும் இணைய பெயர் கொண்ட அந்த பேராசிரியர், மார்க் ஜக்கர்பர்கையும், எலான் மஸ்கையும், ஜெப் பெசோசையும், ’முறையாக படிக்காதவர்கள்’ என குறை கூறியுள்ளார்.

பட்டப்படிப்பை முடிக்காத ஜக்கர்பர்க், பேஸ்புக் வெற்றிக்காக கொண்டாடப்படும் சூழலில், இந்த பேராசிரியர், மார்க்கை , சரியாக படிக்காதவர் அதனால் யோசிக்கத்தெரியாதவர் என விமர்சித்துள்ளார்.

மார்க்கும், மஸ்கும், பெசோசும், அறம் இல்லாதவர்கள் மட்டும் அல்ல, தங்கள் துறைக்கு வெளியே எதையும் யோசிக்கத்தெரியாதவர்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓரளவு தத்துவம் படித்த பீட்டர் தியல் மற்றும் மார்க் ஆண்டசர்னும் இதே கதை தான் என்று கூறும் பேராசிரியர், உலகம் பற்றிய இவர்களின் பார்வை மேலோட்டமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் கூறியுள்ளார்.

கடுமையான விமர்சனம் தான்.

ஏஐ நுட்பத்தால் எல்லாம் மாறப்போகிறது, அதற்கு தயாராக இருங்கள் என எச்சரிக்கும் வகையில் எழுதி இணையத்தில் வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய மேட் ஷும்மரிடம் நியூயார்க் மேகசைன் நேர்காணல் தொடர்பாக பயனாளிகள் பின்னூட்டம் வாயிலாக நடைபெற்ற விவாத சரட்டில் தான், பேராசிரியர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

ஷும்மர் எச்சரிக்கை ஒரு பக்கம் இருக்க, ஏஐ நுட்பத்தை தொழில்நுட்ப நிறுவனர்கள் வர்த்தக நோக்கில் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றனர் எனும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்தை அடியொட்டி, பேராசிரியர் ”சுயநலம் மிக்க அதிரடி மனிதர்கள், மொத்த மனிதகுலத்திற்கான இயங்கு தளத்தை திணிக்க முயற்சிக்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயங்குதளத்தை மனித தன்மை இல்லாதது என்றும் குறிப்பிடுகிறார்.

25 தொழில்நுட்பவாதிகள் மனித மனசாட்சியின் தனிப்பட்ட காவலர்களாக மாறுவதை சிந்திக்கும் திறன் கொண்ட நாம் எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதா? என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

ஏஐ விவாதத்தில் பெரும்பாலும் நாம் கவனிக்க மறுக்கும் அம்சமும் இது தான். ஏஐ என்பது பரந்து விரிந்தது என்பதை மறந்துவிட்டு, யாரோ சில ஏஐ நிறுவனர்கள் சொல்வதை வைத்து நாம் மனித குல எதிர்காலம் தொடர்பாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

நேர்காணல் இணைப்பு; https://nymag.com/intelligencer/article/viral-ai-post-anthropic-chatgpt.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *