ஏஐ ரேப்பர் என்றால் என்ன? – நீங்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

ஏஐ சொற்களஞ்சியத்தில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சொல்லாக, ஏஐ ரேப்பரை (AI wrapper ) குறிப்பிட வேண்டும். ஏஐ ரேப்பர் என்றால், ஏஐ போர்வை அல்லது ஏஐ மேலுரை என குறிப்பிடலாம்.

ஏஐ நுட்பம் சார்ந்த மூல சேவையாக அல்லாமல், அத்தகைய மூல சேவையை கொண்டு உருவாக்கப்பட்ட துணை சேவைகள் பொதுவாக ஏஐ ரேப்பர் என அறியப்படுகின்றன.

அதாவது நவீன ஏஐ சேவைகளுக்கு அடித்தளமாக அமையும், எல்.எல்.எம் எனப்படும் பெரும் மொழி மாதிரிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் வசதிகள் அல்லது சேவைகளாக இவை அமைகின்றன.

இத்தகைய ஏஐ ரேப்பர் சேவைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஏன்?

மொழி மாதிரிகள் கொண்டு துணை சேவைகள் அல்லது வசதிகளை உருவாக்குவதில் தவறில்லை: உண்மையில் இத்தகைய மூன்றாம் தரப்பு சேவைகள் இணைய உலகில் பிரபலமானவை. ஆனால் பிரச்சனை என்னவென்றால், இத்தகைய துணை சேவைகள் அவை ஏதோ புதிதாக உருவாக்கப்பட்ட புதிய ஏஐ சேவை போல முன்னிறுத்தப்படுவது தான்.

ஏஐ கொண்டு உருவாக்கப்படும் துணை சேவைகள், அவை வேறொரு மூல சேவை கொண்டு உருவாக்கப்பட்டதை வெளிப்படையாக குறிப்பிடாமல் இருப்பதோடு, தாங்களாகவே உருவாக்கிய சேவை எனும் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம், ஒரு பக்கம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவதோடு, இன்னொரு பக்கம் பயனாளிகளையும் ஏமாற்றுகின்றனர்.

எங்கும் ஏஐ அலை வீசுவதை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில், ஏற்கனவே உள்ள ஒரு ஏஐ மாதிரியை அடிப்படையாக கொண்டு, ஒரு வசதியை உருவாக்கி அதை புதிய புரட்சிகரமான ஏஐ சேவை போல மார்க்கெட்டிங் செய்யும் போக்காக இது உருவெடுத்துள்ளது.

எல்லா ஏஐ துணை சேவைகளுமே பயனற்றவை என சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தேவையே இல்லாத ஆணிகள். அந்த சேவைகள் வழங்கும் வசதியை பயனாளிகளே நேரடியாக சாட்ஜிபிடி, ஜெமினி அல்லது கிளாடிடம் கேட்டு பெறலாம். இன்னும் சில நேரங்களில் இந்த மூல சேவைகளின் ஏபிஐ அனுமதி பெற்று நிறைவேற்றிக்கொள்ளலாம். ஏபிஐ (API ) வாயிலான வசதி எனும் போது, அதை அமைப்பது கொஞ்சம் சிக்கலாக அமையலாம். அதோடு கட்டணமும் செலுத்த வேண்டும்.

சராசரி பயனாளிகள் எளிதில் அணுக முடியாத வசதியை, அதற்கேற்ற இடைமுகம் கொண்டு அளிக்கும் ஏஐ துணை சேவைகளை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். துணை சேவை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக, துணை சேவை என்பதை குறிப்பிடாமல், புதிய ஏஐ சேவை என முன்னிறுத்தப்படும் சேவைகளை ஏஐ ரேப்பர் என்றே கருதுவதோடு, ஒரு விதத்தில் மோசடி என்றும் கொள்ளலாம்.

சாட்ஜிபிடி பெயரிலேயே இத்தகைய பல ஏஐ ரேப்பர்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சாட்ஜிபிடி மூலம் பிடிஎப்களுடன் உரையாடலாம் என சொல்லும் சேவையை கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதற்கு பதில் நீங்களே நேரடியாக சாட்ஜிபிடியில் பிடிஎப் கோப்பை சமர்பித்து உரையாடலாம்.

இதே போலவே, ஏஐ அலையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு, ஏற்கனவே உள்ள ஒரு சேவையில் தேவையே இல்லாமல் ஏஐ வசதியை புகுத்தி, ஏஐ சார்ந்த சேவை என முன்வைக்கப்படும் சேவைகளும் ஏஐ ரேப்பர் என்று குறிப்பிடப்படுகின்றன.

ஆக, ஏஐ ரேப்பர்களாக அதாவது ஏஐ போர்வைகளாக ஏமாற்றும் சேவைகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஏஐ ரேப்பர் சேவைகளுக்கு நூற்றுக்கணக்கான உதாரணம் இருக்கின்றன. ஜேக் கேபிள் எனும் சைபர் பாதுகாப்பு வல்லுனர் அம்பலமாக்கிய க்ளுலி ( ) எனும் சேவையை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஏஐ சார்ந்த டிஜிட்டல் உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட க்ளுலி சேவையை ரீவர்ஸ் இஞ்சினியைரிங் செய்து, உண்மையில் அந்த சேவை சாட்ஜிபிடி கொண்டு இயங்கும் சேவையை என்பதை அவர் புரிய வைத்தார். இதற்காக பயன்படுத்தப்பட்ட பிராம்ட்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த பிராம்ட்களை பயனாளிகளே பயன்படுத்தினால் க்ளுலியே தேவையில்லை.

இதை குறிப்பிட்டு, ஏஐ ரேப்பர் ஸ்டார்ட் அப்கள் பற்றி விக்னேஷ் என்பவர் லின்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்: https://www.linkedin.com/posts/sci-fi-vy-vignesh_ai-robotics-wrapper-activity-7350171474038579200-qlaJ/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *