கூகுள் தேடல் அதிருப்திக்கு உள்ளாக்கும் தருணங்கள் அநேகம் இருக்கின்றன. அதே நேரத்தில், கூகுள் தேடல் அதன் செல்வாக்கிற்கு ஏற்ப செயல்படும் தருணங்களும் உண்டு. குரோகிபீடியா (Grokipedia ) தொடர்பான தேடல் ஒரு உதாரணம்.
குரோகிபீடியா என தேடினால் கூகுள், விக்கிபீடியாவின் குரோகிபீடியா கட்டுரையை முதல் முடிவாகவும், இரண்டாவது முடிவாக குரோகிபீடியாவையும் முன்னிறுத்துகிறது.

குரோகிபீடியாவுக்கான தேடலுக்கு, குரோகிபீடியா தளத்தை முதலில் குறிப்பிடாமல், விக்கிபீடியா கட்டுரையை முன் வைத்து, குரோகிபீடியா தளத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளியிருப்பது புருவங்களை உயர்த்தலாம்.

நிற்க, இதே தேடலுக்கு, பிங் மற்றும் டக்டக்கோ தேடியந்திரங்கள், குரோகிபீடியாவை முதலில் இடம்பெற வைத்து, விக்கிபீடியா கட்டுரையை இரண்டாவதாக குறிப்பிடுகின்றன.

ஆனால், குரோகிபீடியாவுக்கான தேடலுக்கு அந்த இணையதளத்தைவிட விக்கிபீடியா கட்டுரையை முன்னிறுத்தும் கூகுளின் முடிவு யோசிக்க வைக்கிறது. விக்கிபீடியாவுக்கு போட்டியாக துவங்கப்பட்ட ஏஐ களஞ்சியமான குரோகிபீடியா, கூகுள் தேடலில் விக்கிபீடியா சுட்டிக்காட்டலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது சில செய்திகளை சொல்லாமல் சொல்வதாக கருதலாம்.
பெரும்பாலான தேடலுக்கு முதல் முடிவாக விக்கிபீடியா கட்டுரையை முன் வைப்பது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மைக்கான அடையாளமாகவும், இதை கூகுள் ஆங்கீகரிப்பதன் அடையாளமாகவும் இந்த சுட்டிக்காட்டலை கருதலாம்.
எனவே, கூகுள் தேடலில் குரோகிபீடியாவை விட விக்கிபீடியா செல்வாக்கு பெற்றிருப்படதாகவும் கருதலாம்.
எனினும், இதில் மாறுபடுபவர்களும் இருக்கலாம். குரோகிபீடியா தேடலுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமே முதல் முடிவாக வரவேண்டும் என்று கருதுவது சரியாக இருக்கலாம். அந்த விதத்தில் கூகுளின் தேடல் பட்டியலில் இது பிழையாகவும் அமையலாம். ஆனால், குரோகிபீடியா விஷயத்தில் கூகுளின் இந்த முடிவு சரியே என நினைக்க முக்கிய காரணம் இருக்கிறது.
அதாவது, ஏஐ உருவாக்கும் களஞ்சியமான குரோகிபீடியா நான்கு மாத காலமாக புதுப்பிக்கப்படாமலே இருக்கிறது. இது பற்றி லாபேர் இதழ் விரிவான அலசல் கட்டுரை எழுதிய பிறகும் குரோகிபீடியாவிடம் இருந்து பதிலும் இல்லை, அதன் முடங்கிய தன்மையில் மாற்றமும் இல்லை.
ஏஐ நுட்பத்தின் மறதியா அல்லது எலான் மஸ்கின் மறதியா தெரியவில்லை, ஆனால் குரோகிபீடியா களஞ்சியம் புதிய சேர்க்கைகள் மற்றும் திருத்தங்கள் இல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.

கூகுள் இதை கருத்தில் கொண்டதா என்று தெரியாவிட்டாலும், ( குரோகிபீடியா முடக்கம் தொடர்பான கட்டுரையை பட்டியலிட்டுள்ளது) தேக்கம் அடைந்துள்ள களஞ்சியத்தை பின்னுக்குத்தள்ளி, அந்த சேவை பற்றிய தகவல்களை சரியாக அளிக்கும் விக்கிபீடியா கட்டுரையை முதலில் முன்னிறுத்துகிறது. விக்கிபீடியாவின் குரோகிபீடியா கட்டுரையில், அந்த களஞ்சிய ஏப்ரல் மாதத்திற்கு பின் புதுப்பிக்கப்படவில்லை எனும் தகவல் சேர்க்கப்பட்டு கட்டுரை அப்டேட்டாக இருக்கிறது.

ஆனால் பரிதாபகரமாக குரோகிபீடியா முடங்கிய நிலையில் தொடர்கிறது.
குரோகிபீடியா மீட்டெடுக்கப்படுகிறதா? அல்லது ஏஐ நடத்தும் சேவைகளுக்கான மோசமான உதாரணமாக நிலைத்து நிற்கிறதா என பார்க்கலாம்.
—
குரோகிபீடியா முடங்கியது தெரியுமா? விளக்க வீடியோ