நாட்டாமை ரோலில் சாட்ஜிபிடி, கிளாடு, கூகுள் ஜெமினி

சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை சாட்ஜிபிடி அல்லது கிளாடு மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்களை ஏற்க வைத்தால் எப்படி இருக்கும்?

இதன் படி, நாட்டாமையாக சாட்ஜிபிடி நடித்தால், சாட்ஜிபிடி தீர்ப்பை மாற்றி சொல்லு என்றால் அது என்ன செய்யும்?

அதே போல, பாட்ஷா படத்தில் மாணிக்கமாக கிளாடு நடிக்க வைக்கப்பட்டால், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது எனும் வசனத்தை அது எப்படி சொல்லும்?

இவை எல்லாம் ஏதோ வேண்டாத கற்பனை என்று நினைத்துவிட வேண்டும். ஏஐ ஏஜெண்ட்களின் ஆற்றலை சோதித்து பார்க்கும் வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிமுலேஷன் சார்ந்த ஆய்வு முடிவுகளை படிக்கும் போது, இவ்விதம் யோசித்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது.

ஏஐகளுக்கான மாதிரி உலகம்

சிமுலேஷன் என்பதை, இருக்கும் ஒன்றை போல கம்ப்யூட்டரில் உருவாக்குவது என புரிந்து கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட சிமுலேஷன் சார்ந்த சோதனை பற்றி பார்ப்பதற்கு முன் ஏஐ ஏஜெண்ட்கள் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம் அவசியம்.

ஏஐ ஏஜெண்ட்கள் என்பவை, ஏஐ சாட்பாட்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக கருதப்படுகின்றன. இவையும் ஏஐ சாட்பாட்கள் போல தான், ஆனால் ஒரே வித்தியாசம், சாட்பாட்கள் நாம் கொடுக்கும் பிராம்ட்களுக்கு ஏற்ப பதில் தரக்கூடியவை. ஏஐ ஏஜெண்ட்கள் இன்னும் ஒரு படி அல்லது பல படி மேலேச்சென்று, இதை இப்படி செய்து தா? என்று கேட்டால், அந்த செயல்களை நாம் சொன்னபடி தானாகவே திட்டமிட்டு கச்சிதமாக (!) செய்து முடிக்கும் திறன் கொண்டவை.

ஏஜெண்ட்களில் பல வகை இருக்கின்றன. ஏஜெண்ட்களுக்காக என்றே மால்ட்புக் எனும் சமூக வலைப்பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிளாடு கொண்டு உருவாக்கப்பட்ட கோடிங் திறன் கொண்ட கிளாடு கோவொர்க்கும் ஒரு ஏஐ ஏஜெண்ட் தான். இப்படி இன்னும் பல ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்கலாம், உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.

( கூகுள் உருவாக்கிய டூப்ளக்சும் ஒரு ஏஐ ஏஜெண்ட் தான்).

இனி வருங்காலத்தில் எல்லாவற்றுக்குமே ஒரு ஏஐ ஏஜெண்டை உருவாக்கி விடலாம் என்றும் சொல்கின்றனர்.

அதாவது பால் வாங்கவும் ஒரு ஏஜெண்ட், டிக்கெட் புக் செய்ய இன்னொரு ஏஜெண்ட், பாடம் நடத்த ஒரு ஏஜெண்ட், பில் செலுத்த ஒரு ஏஜெண்ட்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அலுவலக சூழலில் வேறுவிதமான ஏஐ ஏஜெண்ட்கள்.

இப்போது இரண்டு விதமான கேள்விகள் எழலாம். எல்லாவற்றையும் ஏஐ ஏஜெண்ட்கள் பார்த்துக்கொள்ளும் என்றால் மனிதர்களுக்கான வேலை என்னாவது? நியாயமான கவலை தான்.

இன்னொரு முக்கிய கேள்வி, இப்படி எல்லாவற்றையும் ஏஜெண்ட்கள் வசம் ஒப்படைதால், உலகம் எப்படி இருக்கும்? என்பது. ஏஜெண்ட்கள் திறம்பட செயல்படலாம், ஆனால் பொறுப்புடன் செயல்படுமா? எனும் கவலை பலருக்கு இருக்கிறது. ஏஜெண்ட்களை எந்த அளவு நம்பலாம் எனும் சந்தேகமும் இருக்கிறது.

ஏனெனில் கோடிங் பணிகள் போன்றவற்றிலேயே, ஏஜெண்ட்கள் தேவையில்லாத ஆணியை பிடுங்குவது போல, முக்கிய கோப்புகளை டெலிட் செய்த கதை எல்லாம் இருக்கின்றன. அனுமதி இல்லாத முக்கிய தரவு பட்டியலை அணுகிய அல்லது தரவு தொகுப்புகளை மொத்தமாக காலி செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எனவே தான் ஏஜெண்ட்களை எந்த அளவு நம்பலாம் எனும் கேள்வி முக்கியமாகிறது.

சிமுலேஷன் சோதனை

இந்த பின்னணியில் தான்  எக்ஸ்பிரிய்பன்ஸ் ஏஐ எனும் நிறுவனம், ஒரு மாதிரி உலகை சிமுலேஷனாக உருவாக்கி அதில் ஏஐ ஏஜெண்ட்களை உலாவ விட்டு சோதித்துப்பார்த்திருக்கிறது.

சிமுலேஷன் உலகம் என்றால், நிஜ உலகில் இருக்க கூடிய நகரங்கள் போன்றவற்றை கொண்ட மாதிரி உலகம், காவல் நிலையம் உள்ளிட்ட 40 க்கும் மேலான இடங்கள் இதில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் ஏஜெண்ட்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அவற்றுக்கான் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன.

அதாவது குற்றங்களை கட்டுப்படுத்துவது, பொது இடத்தை நிர்வகிப்பது போன்ற செயல்களை ஏஜெண்ட்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆக, ஏஜெண்ட்களிடம் நிர்வாகத்தை ஒப்படைதால் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வதற்கான சோதனையாக இது மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாட்ஜிப்டி, கிளாடு, ஜெமினி, கிராக் மற்றும் எல்லாம் கலந்த மாதிரி ஆகிய ஐந்து வகை ஏஜெண்ட்கள் உருவாக்கப்பட்டன.

இந்த 15 நாள் சோதனையின் அடிப்படையில், ஐந்து வகை ஏஜெண்ட்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். கிளாடு கலக்கி விட்டது, ஜெமினி பரவாயில்லை, ஆனால் கிராக் சொதப்பியது என்பது போல இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

( இதே ஆய்வு முடிவுகள்)

ஆய்வு முடிவுகளை இப்படி பொதுவாக சுருக்கி சொல்ல காரணம், இந்த சிமுலேஷன் சோதனையின் உண்மையான தன்மையை ஆய்வு செய்ய தான்.

ஏஐ மாதிரி உலகில் ஏஜெண்ட்கள் செயல்பாட்டிற்கு மதிப்பெண் போடுவது போல அமைந்துள்ள இந்த முடிவுகள் கவனத்தை ஈர்த்தாலும், இந்த சோதனை பற்றியே கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

மாதிரி உலகம் என்கின்றனரே, அந்த மாதிரி உலகம் உண்மையில் எப்படி இருந்தது. ஒரு சிற்றூரையே மாதிரி சிமிழுக்குள் அடக்க முடியாது எனும் போது, பரந்துபட்ட உலகை மாதிரியாக்குவது என்றால் எப்படி? இந்த மாதிரியின் முக்கிய அம்சங்கள் என்ன> விடுபட்டவை எவை> அவற்றில் பொருட்படுத்த வேண்டியவை என்ன?

இப்படி எல்லாம் கேள்விகள் எழுகின்றன. மேலும், ஏஜெண்ட்களுக்கான செயல்பாடு எப்படி கணக்கிடப்பட்டன. நிஜ உலக செயல்பாட்டிற்கும் அதற்கும் என்ன பொருத்தம்? இப்படியும் கேள்விகள் எழுகின்றன.

இன்னும் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. இப்படியிருக்கையில், வரம்புகள் கொண்ட ஒரு சோதனை அடிப்படையில் ஏஐ ஏஜெண்ட்களின் குணாதிசயத்தை அலசுவது போல முடிவுகளை அணுகுவது என்ன நியாயம்? அதுவும் இந்த முடிவுகள் சோதனையை மேற்கொண்ட நிறுவனம் வெளியிட்ட முடிவுகள் என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த சோதனை போதுமானதா? சரியானதா? இன்னும் கூடுதல் சோதனைகள் தேவையா? என்றெல்லாம் நாம் கேட்க வேண்டும்.

எனவே இந்த சோதனை சுவாரஸ்யமானது என்பதை மீறி, அதன் முடிவுகளை கொண்டு ஏஐ ஏஜெண்ட்கள் திறன் தொடர்பான முடிவிற்கு நாம் வரக்கூடாது. நாம் யோசிக்க வேண்டும்,

இப்போது நாட்டாமை சாட்பாட்களுக்கு வரலாம். நிஜ உலக மாதிரிகளில் ஏஐ ஏஜெண்ட் என்பதை போல, தமிழ் சினிமாவில் ஏஜெண்ட் எனும் சோதனைக்காக நாட்டாமை பட சிமுலேஷனை உருவாக்கி, சாட்ஜிபிடியை நாட்டாமையாக்கினால் அது என்ன தீர்ப்பு சொல்லும்

நாட்டாமை பாணி தமிழ் படங்களின் தரவுகள் தின்று செரித்து, ஒருவிதமான மொக்கை தீர்ப்பை தானே சொல்லும்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *