திரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்றனர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்தில் தோன்றுவதை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து விடுவது அந்தபடத்தை பார்க்கலாமா? வேண்டாமா?என முடிவெடுக்க வைத்து விடுகிறது.
பட தாயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் முயற்சியை மீறி ரசிகர்கள் தங்கள் டிவீட்களிலேயே தன் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.நாளிதழ் விமர்சனங்கள், வலைப்பதிவு விமர்சனங்கள் கூட பிறகு தான் வெளியாகின்றன.ஆனால் டிவிட்டர் விமர்சனங்கள் தியேட்டரிலிருந்தே வெளியாகி படம் குறித்த பொது அபிப்ராயத்தை உணர்த்திவிடுகின்றன.
டிவிட்டர் விமர்சனத்தை எப்படி சமாளிப்பதென பட நிறுவனங்கள் குழம்பித்தவிப்பது ஒரு புறமிருக்க டிவிட்டர் கருத்துக்களால் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு வரவேற்பை பெர்றுள்ளன என கண்டறிய முடியும் தெரியுமா?
உதாரணத்திற்கு அரசையல் தலைவர் ஒருவர் எதிர்கால திட்டம் குறித்து முக்கிய உரை நிகழ்த்துவதாக வைத்துக்கொள்வோம்.அந்த உரை மக்கள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை டிவிட்டரை பார்த்தே தெரிந்து கொண்டு விடலாம்.
எப்படி என்கிறிர்களா?
உரையை கேட்டவுடனே பலரும் அதௌ பர்றி தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை டிவிட்டரில் பதிவு செய்யப்போகின்றனர்.ஆஹா பேச்சு பிரமாதம்,என்பதில் துவங்கி பெரும் ஏமாற்றம் என்பது வரை உரையை பாராட்டியும் விமர்சித்தும் கருத்துக்களை டிவிட்டர் செய்யலாம்.
இத்தகைய டிவிட்டர் கருத்துக்களை அலசி ஆராய்வதன் மூலம் தலைவரின் உரை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிந்துகொள்லாம். மேற்பூச்சோ மிகைப்படுத்தலோ இல்லாமல் உள்ளதை உள்ள படி பிரதிபலிக்கும் கண்ணாடியாக டிவிட்டர் கருத்துக்கள் அமையலாம்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் சுகாதார சீர்திருத்த திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது அவரது உரை ஏற்படுத்திய தாக்கத்தை இப்படி டிவிட்டர் கருத்துக்களின் மூலம் அறிய முடிந்ததாக சொல்கிறார்கள்.உரை நிகழ்த்தப்பட்ட பின் டிவிட்டரில் பதிவான கருத்துக்கலை வைத்துக்கொண்டு பார்த்த போது 36 சதவீதம் பேர் அதனை ஆதரித்ததும் 32 சதவீதம் பேர் விமர்சித்ததும் தெரிய வந்துள்ளது.
ஒபாமாவின் சுகாதார திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை ஆதிரித்து அவர் ஆற்றிஅய உரை மக்கள் மன்றத்தில் வரவேற்பை பெற்றதா என்பதை டிவிட்டர் சரியாக படம் பிடித்து காட்டியதாக கருதப்படுகிறது.
ஆக டிவிட்டரை இனி உலகின் மனசாட்சியாக கருதலாம் போல்.