பட்டது போதும் சீனாவால் என்னும் முடிவுக்கு கூகுல் வந்திருகிறது.இனி சீன அரசுக்காக தேடல் முடிவுகளை தணிக்கை செய்ய முடியாது என்றும் தேவைப்பாட்டால சீனாவில் இருந்து வெளியேறவும் நேரிடலாம் என்று கூகுல் அறிவித்துள்ளது.
கூகுலின் இந்த அறிவுப்பு முக்கீயத்துவம் வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுலைப்போன்ற செலவாக்கும்மதிப்பும் மிக்க நிறுவனம் ஒரு நாட்டிலிஎருந்து வெளியேறப்போவதாக அறிவிப்பது அந்நாட்டில் எல்லாம் சரியில்லை என்று தெரிவிப்பதற்கு சமம்.
கூகுல் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்க அரசு இந்த பிரச்சனை தொடர்பாக சீனாவிடம் விளக்கம் கேட்டிருப்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பிரச்சனை தொடர்பாக கூகுல் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூகுலுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரச்சனை என்னவென்றால் கூகுல் உள்ளிட்ட 20 அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து சைபர் தாக்குதலுக்கு இலக்காகி இருகின்றன.இந்த தாக்குதல் குறித்து கூகுல் முழு விவரங்களையும் வெளியிடவில்லை. தாக்குதல் கூகுலின் இமெயில் சேவையான ஜி மெயிலை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் சீன அரசுக்கு எதிராக போராடி வரும் மனித உரிமை போராளிகளின் இமெயில் முகவரியை களவாடும் நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூகுல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் பின்னே சின அரசு இருப்பதாக கூகுல் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.ஆனால் அவ்வாறு நினைக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.
இந்த தாக்குதலை அடுத்து கூகுல் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம் என்று கூறியுள்ளது.தேடல் முடிவுகளை சீன அரசின் தணிக்கைக்கு இனியும் உட்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளது.
இதன் பொருள் ஏற்கனவே சீன அரசின் நிர்பந்தம் காரணமாக நிறைய சமரசம் செய்து கொண்டு விட்டோம் ;இதன் பிறகும் அது சாத்தியமில்லை என்பதே.
உண்மை தான் கூகுல் சீனவில் நுழைந்த போதே அந்நாட்டு அரசின் கட்டுப்படுகளை ஏற்றுக்கொண்டு தான் செயல்படத்தொடங்கியது.அதற்கு காரணம் சீனாவுக்கும் இண்டெர்நெட்டுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது தான்.கம்யூனிச நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே அமலில் உள்ளது.சீனாவில் பெரிதாக கருத்த் சுதந்திரம் கிடையாது என்று கூறப்படுகிறது.அரசை எதிர்ப்பவர்கள் ஒடுக்கப்படுவதோடு மனித உரிமை ஆரவளர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக பலவித புகார்கள் உண்டு.
இண்டெர்நெட் பிரபலமடைந்த பிறகு அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடவும் ஜனநாயக கருத்துக்களை வலியுறுத்தவும் இண்டெர்நெட் பேருதவியாக இருந்ததால் சீன அரசு இண்டெர்நெட் செயல்பாடுகளில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.இவை இன்னும் அமலில் உள்ளது. புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவான கூகுல் உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் காலூன்றும் திட்டத்தோடு அந்நாட்டில் செயல்படத்துவங்கியது.
அப்போது சீனாவின் அதிகாரபூர்வ கொள்கைகளுக்கு உடன்பட்டு நடக்க வேண்டும் அன்று நிபந்தனை விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டே கூகுல் அங்கு நுழைந்தது. சீன அரசை திருப்தி படுத்தும் வகையில் தேடல் முடிவுகளை தணிக்கைக்கும் உட்படுத்தியது.
கூகுலின் இந்த செயல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் சீன சந்தை மனதில்,வைத்து கூகுல் சர்வாதிகார அணுகுமுறைக்கு துணை போவதாகவும் விமரசனத்திற்கு ஆளானது.
இருப்பினும் சீனாவில் செயல்பட வேறு வழியில்லை எனபதால் கூகுல் இவற்றை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் கூகுலின் இமெயில் சேவை தாக்கப்பட்டு சீன அரசுக்கு எதிரான மனித உரிமை போராளிகளின் முகவரியை பெற முயற்சி நடந்துள்ளது.பொருத்தது போதும் என கூகுலை பொங்கி எழ வைத்துள்ளது.
———-
பின்குறிப்பு;
கூகுல் உலகின் முன்னணி தேடியந்திரமாக இருந்தாலும் சீனிவில் அது இரண்டாவது இடத்திலேயே உள்ளது. சீன தேடிய்ந்திரமான பெய்டு தான் 60 சதவீத சந்தியோடு முதலிடத்தில் உள்ளது.பெய்டுவை கூகுலால் அசைக்க முடியவில்லை என்று கருதப்படுகிறது.
அன்மையில் சீன எழுத்தாளர் ஒருவர் கூகுல் தனது புத்தக திட்டத்திற்காக அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடரப்போவதாக மிரட்டியதை அறிவித்தார. இதனையடுத்து கூகுல் சமரசத்திற்கு தயாராக இருப்பதாக கூறியதாக அவர் தெரிவித்தார்.

6 Comments on “சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுல்”
karlmarx
இந்த சீனாகாரன் சரியான பிக்காளி பயலா இருப்பன் போல.
அப்புறோம் அது 20 கம்பெனி இல்ல 30 கம்பெனி.
தகவலுக்கு நன்றி பாஸ்
eppoodi
//சீன தேடிய்ந்திரமான பெய்டு தான் 60 சதவீத சந்தியோடு முதலிடத்தில் உள்ளது.பெய்டுவை கூகுலால் அசைக்க முடியவில்லை என்று கருதப்படுகிறது.//
உண்மை … நானும் அறிந்தேன்
நல்ல பகிர்வு
Pingback: கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை « Cybersimman's Blog

arulmozhi r.
அமெரிக்காவின் விஷமம் கூகுளின் வழியாக சீனவிற்குள் ஊடுறுவுவதை சீனா விரும்பவில்லை. இந்தியா போல் அமெரிக்கா பக்கம் சாய சீனாவிற்கு பிடிக்கவில்லை. எந்த நாட்டில் cyber attack இல்லை. இதில் முன்னோடி என்று பார்த்தால் அமெரிக்காதான் மிக பெரிய cyber attack செய்யும் நாடு. நட்பாக இருந்துகொண்டே உளவு பார்ப்பது அமெரிக்காவின் வாடிக்கைதான். இது இந்தியாவின் அனுபவம் கூட. அப்படியிருந்தும் இந்தியாவிற்கு புரியவில்லை. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் சீனாக்காரன் அசர மாட்டான். சீனாவின் சந்தையை குறிவைத்துதான் அமெரிக்கா காய் நகர்த்துகிறது.அதற்கு இந்தியாவும் ஒத்து ஊதுகிறது.சீனாவை cyber தீவிரவாதி என்று சொல்லி தனிமைபடுத்துவதுதான் இதன் நோக்கம்.
Uzhavan
நமது பிரதமர் அலுவலகக் கணிணிகளைக் ஹேக் செய்ய சீனா முயன்றதாகவும் புகார் வந்ததே.. அதுவும் உண்மைதானா?