தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?
தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர்…’ என்று துவங்கும் சராசரியான அறிமுகம் அல்ல. மாறாக கடும் எதிர்ப்புக்கு இடையே தனது நம்பிக்கைக்காகவும் கருத்து சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் சிந்தனை ஓட்டத்தை அவரது உரத்த சிந்தனைகளின் அறிமுகம்.
அப்படி என்றால் டிவிட்டரில் தஸ்லிமாவை நீங்கள் பின்தொடரலாம்.
ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தஸ்லிமா அடியெடுத்து வைத்திருக்கிறார்.தனது உள்ள குமுறல்களையும் எண்ணங்களையும் அவர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
தஸ்லிமா எப்போதுமே யாருக்காவது பதில் சொல்லும் நிலையில், எதற்காவது விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.டிவிட்டர் பதிவுகள் அதற்கு ஏற்றதாக இருக்கின்றன.அதோடு உலகோடு பகிர்ந்து கொள்ள முக்கிய செய்தி அவரிடம் இருந்து கொண்டே இருக்கிறது.அவற்றையும் டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.
தஸ்லிமாவின் டிவிட்டர் பதிவுகளை படிக்கும் போது அவரது மனம் எத்தனை உளைச்சலுக்கும் ,தாக்குதலுக்கும் ஆளாகி இருப்பதை உணர முடிகிறது.கொந்தளிப்புக்கும் பத்தியிலும் நம்பிக்கை ;இதுவே தஸ்லிமாவின் சிறப்பம்சமாக தோன்றுகிறது.
பெண்களூக்கு நாடு இல்லை ,என்று ஒரு குறும்பதிவில் குறிப்பிடும் தஸ்லிமா மற்றொரு பதிவில் ‘எந்த ஒரு பெண்ணும் அடக்குமுறைக்கு ஆளாகாத அழகான உலகை நான் கணவு காண்கிறேன்’ என ஏங்குகிறார்.
குறைந்த எண்ணிக்கையில் ஆனவர்களே சுதந்திரத்துக்கு எதிராகவும் சமத்துவம் மற்றும் மனித உரிமைக்கு எதிராகவும் இருப்பதாகவும் குறிப்பிடும் அவர் இன்னொரு இடத்தில் கடவுள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக குமுறுகிறார்.
பல பதிவுகள் கருத்து சுதந்திரம் பற்றிய அவரது உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு அதற்காக போராட தயாராக இருப்பதையும் போராடி பெற்ற வடுக்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புகள் ,ஏமாற்றங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதியை எதிர்பார்த்திருந்த நிலையில் ‘நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் உங்கள் அனுமதி புதுப்பிக்கப் படுகிறது;உங்களை யாரும் வெளீயேற்ற மாட்டார்கள்’என்ற செய்தியை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பதை படுக்கும் போது அவரது உள்ள கொந்தளிப்பை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் ‘இது வரை நடந்தவைக்கு பிறகெல்லாம் கூட ஒரு மதச்சார்பற்ற எழுத்தாளருக்கு இந்தியாவை விட சிறந்த புகலிடம் வேறில்லை என கருதுவதாக வேறொரு பதிவில் தெரிவிக்கிறார்.
தஸ்லிமா தாய்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தங்கும் நாட்டுக்காகவும் அல்லாட வேண்டியிருக்கும் நிலையையும் இதனை மீறி கருத்து சுதந்திரத்துக்காகவும் பெண்களின் உரிமைக்காக அவர் குரல் கொடுப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த பதிவுகளோடு பின்தொடர்பவர்கள் முன் வைக்கும் கருத்துக்களூக்கு அவர் தரும் பதில்கள் ஒரு உரையாடலின் தனமையோடு தஸ்லிமாவின் சிந்தனையை புரிய வைக்கிறது.
ஒரு போராளியான நீங்கள் இத்தகைய எதிர்ப்புக்ளை உங்கள் போராட்டத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு பின்தொடர்பாளர் கேட்டுள்ள கேள்விக்கு ’20 ஆண்டுகளாக பழகிகொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.
மேலும் பலர் தஸ்லிமாவின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவுகளும் தஸ்லிமாவின் பதில் பதிவுகளும் ஒரு நேர்காணலின் தன்மையை பெற்றுள்ளன.
தஸ்லிமா பற்றி மேலோட்டமான செய்திகளை மட்டுமே படித்து அவரைப்பற்றி ஒரு மேம்போக்கான சித்திரத்தை உருவாக்கி வைத்துள்ளவர்கள் இந்த பதிவுகளை படித்தால் தஸ்லிமாவை உணமையாக தெரிந்து கொள்ள்லாம்.
தஸ்லீமா டிவிட்டரிலாவது தடையில்லாமல் பயணம் செய்யட்டும்.
———-

0 Comments on “தஸ்லிமாவுடன் ஒரு டிவிட்டர் பயணம்”
roshan
thaslima says women can fulfill their sex desire any men can cybersimman implement it ?
bcs she say men r selfish they don’t want satisfy women
cybersimman
செக்ஸ் உணர்வு மற்றும் செக்ஸ் சுதந்திரம் பற்றி பலவித கருத்துக்கள் உண்டு.அது நீண்ட விவாதத்திற்கு உரியது.மேலும் தஸ்லிமா கருத்துக்களில் என்க்கு உடன்பாடு இருக்கிற்தோ இல்லையோ அதனை வெளியிடுவதில் அவ்ருக்கு உள்ள உரிமையில் முழு உடன்பாடு இருக்கிறது.அந்த உரிமைக்காக அவர் போராடுவடை மதிக்கிறேன்.எல்லாவற்றையும் விட டிவிட்டர் எப்படி ஒரு வெளியீட்டு சாதனமாக திகழ்கிறது என்பதற்கான் உதாரணமாக இந்த பதிவு.
அன்புடன் சிம்மன்
மகாராஜா
தஸ்லிமாவின் கருத்து யாராலும் ஏற்றுக் கொள்ளமுயாத கருத்து. பெண்ணுக்கு கர்பப்பை சுதந்திரம் வேண்டும் நான் யாரு கூடையும் படுத்து குழந்தை பெறுவேன் என்றால் எந்த ஆண்மகனும் ஏட்றுக்கொள்ள மாட்டான். இது மாதிரி பெண்களை சமூகம் ஒதிக்கி தள்ளவேண்டும். இது ஆணாதிக்கம் என்று சொல்லி சில அறிவுஜீவிகள் வக்காலத்து வாங்குவார்கள் . நடுநிலையோடு சிந்திக்கவேண்டும்.
நன்றி
மகாராஜா
infopediaonlinehere
she looks bold and confident…appreciate her attitude
virutcham
Taslima’s approach is actually not helping common women. It might help women in high society. If we actually observe women of India atleast in TN, muslim women were moving out freely for eductaion and job atleast in upcoming families. Now they are forced to wear parda to step out of house.
Here freedom of speech is forcing common women into restricted circles.
thalaivan
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com