சச்சினின் டிவிட்டர் பேட்டி

டிவிட்டரில் பிரபலங்கள் சேருவதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குறும்பதிவு சேவையான டிவிட்டரின் அருமை பெருமைக்கு தாங்களாகவே உணர்ந்து அதனால் கவரப்பட்டு, டிவிட்டரை பயன்படுத்துவது. இரண்டு, நண்பர்கள் அல்லது
தெரிந்தவர்கள் மூலம் டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் வலியுறுத்தல் காரணமாக டிவிட்டரில் அடியெடுத்து வைப்பது. 
.
சமீபத்தில் டிவிட்டரில் இணைந்த சச்சின் டெண்டுல்கரை பொறுத்தவரை 2வது ரகத்தை சேர்ந்தவர் என்றுசொல்ல வேண்டும். சச்சின் தன்னுடைய நண்பர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டரில் நுழைந்ததாக கூறியிருக்கிறார். 

பொதுவாக டிவிட்டரில் எந்தவொரு பிரபலமும் அடியெடுத்து வைக்கும் போது இயல்பாகவே அந்த செய்தி கவனத்தை ஈர்க்கும். ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டிவிட்டர் நுழைவு எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. டிவிட்டரில் சச்சினைவரவேற்று பாலிவுட் பிரபலங்களும்,
ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் முதல் நாளன்று சச்சின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார். வரும் நாட்களில் இது மேலும் அதிகரித்து டிவிட்டரில் சச்சின் முதலிடம் பெறக்கூடும். கிரிக்கெட் மைதானத்தில் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ள சச்சினுக்கு எளிதாக சாத்தியமாகக்கூடிய மற்றொரு சாதனையாக இதனை கூறலாம். இது ஒருபுறம் இருக்க சச்சின் தன்னுடைய டிவிட்டர் விஜயம் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.

அந்த பேட்டியில், டிவிட்டரில் நுழைந்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். தன்னுடைய நண்பரான புகைப்படக்கலைஞர் அதுல் காஸ்பேகர் மற்றும் வேறு சிலர் நீங்கள் டிவிட்டரில் இருக்கிறீர்களா என்று அடிக்கடி கேட்டதாகவும், ஏனென்று குழப்பத்தோடு வினவியபோது வேறு யாரோ ஒருவர்  டெண்டுல்கர் எனும் பெயரில் டிவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்ததாக சச்சின் கூறியுள்ளார்.

இந்த உரையாடலுக்கு பிறகு யாரோ ஒரு போலி டெண்டுல்கர் டிவிட்டரில் தனது சார்பாக கருத்துக்களை கூறுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தானே டிவிட்டரில் நுழைந்ததாக சச்சின் கூறியுள்ளார்.தயக்கத்தோடு டிவிட்டரில் நுழைந்தாலும் குறும் பதிவுகளை
வெளியிடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

சச்சின் டிவிட்டரில் நுழைந்ததும் பலருக்கு நம்ப முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது. பலரும் டிவிட்டரில் சச்சினா என்று சந்தேகத்தோடு கேட்டுள்ளனர்.  இந்த சச்சினும் போலியாக இருக்க மாட்டார் என்பதில் என்ன நிச்சயம்?

சச்சின் இதனை தெளிவுப்படுத்தும் வகையில் தனது டிவிட்டர் பதிவுகளோடு தானே எடுத்த அரிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சச்சின் வசம் உள்ள இந்த படங்களை அவரைத் தவிர வேறு யாரும் வெளியிட முடியாது அல்லவா!

சச்சினின் எண்ண ஓட்டத்தை அறியதோடு அவரே எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிக்க முடிவதும் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்திதானே! அடிப்படையில் தான் கூச்ச சுபாவம் மிக்கவன் என்பதால், டிவிட்டரிலும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று சச்சின் கூறியிருக்கிறார்.

ஆனால் இயன்றவரை தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுவேன் என்று அவர் உற்சாகமாக கூறியிருக்கிறார். ரசிகர்களுக்கு அதுதானே முக்கியம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சச்சினின் டிவிட்டர் பேட்டி

  1. டெண்டுல்கருக்கும் முன்பாக நீங்கள்தான் கொடி கட்டிப் பறக்கிறீர்களே அண்ணே..!

    Reply
    1. cybersimman

      டிவிட்டர் சேவை மீதுள்ள பற்று நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *