பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிக பின்தொடர்பாளரை கொண்டவர்கள் பட்டியலில் பிரிட்னி முதல் இடம் பிடித்திருக்கிறார்.அதோடு டிவிட்டரில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ள முதல் நபர் என்னும் பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ளது.
டிவிட்டர் சேவையை அறிந்தவர்கள் அதன் பின்தொடரும் வசதியையும் அறிந்திருப்பார்கள்.டிவிட்டரில் பின்தொடர்வது என்பது குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கிற்கான சந்தாதாராராக சேர சம்மதிப்பதாக அர்த்தம்.அதன் பிறகு யாருடைய டிவிட்டர் கணக்கை பின்தொடருகிறோமோ அவர்களின் டிவிட்டர் பதிவுகள் நம்முடைய டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இடம்பெறும்.டிவிட்டர் பதிவுகளை படிக்க இதுவே சுலபமான வழியாக கருதப்படுகிறது.
தினமும் ஒவ்வொரு டிவிட்டர் முகவரியாக டைப் செய்து படிப்பதற்கு பதிலாக யாருடைய டிவிட்டர் பதிவுகளை படிக்க விருப்பம் உள்ளதோ அவர்களீன் பின்தொடர்பாளராக மாறிவிட்டால் போதும் புதிய டிவிட்டர் செய்திகளை அவர்கள் வெளியிடும் போதெல்லாம் நம்முடைய டிவிட்டர் பக்கத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.
எனவே புதிதாக ஒருவருடைய டிவிட்டர் பதிவுகள் பிடித்திருந்தால் பின்தொடர சம்மதம் என்னும் பகுதியை கிளிக் செய்தால் போதுமானது.தொடர்ந்து அவரை டிவிட்டரில் பின்தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.
இந்த பின்தொடரும் வசதி டிவிட்டர் செய்பவரின் பிரபலயத்திற்கான அடையாளமாகவே மாறிவிட்டது.விளைவு பிரபலமாக இருப்பவர்களீன் பின்தொடர்பாளர் எண்ணிக்கை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையில் புதிய மைல்கள்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் பின்தொடர்பாளர்கள் எண்ணிகையில் முதலிடத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்.கடந்த இரண்டு ஆன்டுகளூக்கு முன்னர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்த பிரிட்னி லடசக்கணக்கில் பின்தொடர்பாளர்களை பெற்று முன்னேறிகொண்டிருந்தார்.
பின்தொடர்பாளர்களை பொருத்தவரை டிவிட்டர் மகாராஜாவாக கருதப்படும் ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குட்சரை சமீபத்தில் பிரிட்னி நெருங்கியதை அடுத்து குட்சரை அவர் முந்துவரா?என்னும் எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்தது.
குட்சர் ஹாலிவுட்டில் சூப்பர் ஸ்டாட் கிடையாதே தவிர டிவிட்டரில் சந்தேகத்திற்கிடமில்லாமல் அவர் தான் சூப்பர் ஸ்டார். டிவிட்டர் உலகில் முதன் முதலில் ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்றவர் குட்சர். அதிலும் மீடியா பேரரசான சி என் என் தொலைக்கட்சியை சவாலுகு அழைத்து அந்நிறுவனத்தின் கணக்கை விட முதலில் ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்று அவர் டிவிட்டர் சாதனை படைத்தவர்.
எண்ணிகை ஒருபுறம் இருக்க டிவிட்டரை குட்சர் பயன்படுத்திய விதம் குறிப்பிடத்தக்கது.மீடியாவின் குறுக்கீடு இல்லாமல் ரசிகர்களூடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் டிவிட்டரை அழகாக கையாண்டு கவனத்தை ஈர்த்தவர் குட்சர்.இந்த நேரடி தன்மையின் காரணமாகவே அவருக்கு பின்தொடர்பாளர்கள் குவிந்தனர்.
ஒரு மில்லியன் மைலகல்லை கடந்த குட்சர் தற்போது 5 மில்லியனை நெருங்கிவிட்டார்.இதற்குள் பிரிட்னி குட்சரை நெருங்கி இதோ இப்போது அவரை முந்தியும் இருக்கிறார்.5 மில்லியன் எண்ணிக்கையை முதலில் தொட்டிருக்கிறார்.( குட்சரும் தற்போது 5 மில்லியன் எண்ணிக்கையை தொட்டுவிட்டார்.)
டிவிட்டரில் முதல் இடம் பிடித்தை அடுத்து பிரிட்னி வெளொயிட்ட டிவிட்டர் பதிவில் ரசிகர்களூக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சாதனையை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ள அவர் எல்லோருக்கும் நன்றி என்று உற்சாகமாக கூறியுள்ளார்.சரி இதற்கு குட்சரின் பதில் என்ன தெரியுமா? எனக்கு கவலை இல்லை என்ப்தே ஆகும்.
இன்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரிட்னி நன்றி அறிவிப்பு டிவீட செய்தியை தன் கைபட வெளியிட்டுள்ளார் என்பதே.பொதுவாக பிரிட்னி தானே டிவிட்டரில் செய்திகளை வெளீயிடுவதில்லை.அவரது சார்பில் உதவியாளர்களே இதனை செய்கின்றனர். மேலும் அந்த பதிவுகள் தனிப்பட்ட கருத்து பகிர்வாக இல்லாமல் பிரிட்னியின் பாடல் ஆலபம் மற்றும் இசை பயணத்திற்கான விளம்பர வாசகங்களாகவே இருக்கும்.
குடசர் அப்படியில்லை;ரசிகர்களிடம் பேசுவது போலவே தனனைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தான் உண்மையான டிவிட்டர் மகராஜா.
——–
http://twitter.com/BRITNEYSPEARS
———————–