டிவிட்டரின் பலமும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர் பயனாளிகள் இந்த கட்டுப்பாட்டுக்கு பழகிவிட்டனர்.140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கலையும் பயனாளிகளுக்கு இயல்பாகவே சாத்தியமாகிவிடுகிறது.
டிவிட்டரின் குணம் தெரிந்து அதனை பயன்படுத்த துவங்கிய பின் அதன் 140 எழுத்து வரம்பு பற்றி குறைப்பட்டு கொள்வதில் அர்த்தமில்லை.
ஆனால் 140 எழுத்து போதவில்லையே என்று தீவிர டிவிட்டர் பயனாளிகளும் உணரக்கூடிய தருணங்கள் உண்டு.கூடுதலாக மேலும் சில வரிகளை பகிர்ந்து கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் குறிப்பிட்ட சில நேரங்களில் தோன்றலாம்.
அத்தகைய நேரங்களில் கை கொடுக்க கூடிய சேவையாக டிவிஷார்ட் அமைந்துள்ளது.
டிவிட்டர் அனுமதிக்கும் வரம்பை விட அதிக வரிகளை பதிவிடும் தேவை ஏற்பட்டால் இந்த தளத்தின் மூலமாக அதனை வெளியிடலாம்.அப்போது இந்த தளம் டிவிட்டர் பக்கத்தில் வழக்கமான அளவிலான குறும்பதிவை வெளியிட்டு அதனோடு இணைப்பு ஒன்றையும் இடம்பெறச்செய்கிறது.அந்த இணைப்பை கிளிக் செய்தால் முழு பதிவையும் படிக்கலாம்.
இந்த தளத்திற்கு என்று தனியே கணக்கு தேவையில்லை.டிவிட்டர் கணக்கு மூலமே இதனை இயக்கலாம்.
இணையதள முகவரி;http://twishort.com/

0 Comments on “டிவிட்டருக்கு ஒரு வாலாக ஒரு இணைய தளம்.”
rathnavel natarajan
நல்ல பதிவு.
சி பி செந்தில்குமார்
நீட் போஸ்ட்
Pingback: எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய! « Cybersimman's Blog