டிவிட்டரில் பின்தொடர்பாளர்களை தேர்வு செய்ய ஒரு இணையதளம்.

யாரை எல்லாம் பின்தொடருவது ?

டிவிட்டர் பயனாளிகள் பலருக்கு ஏற்படக்கூடிய குழப்பம் தான் இது,என்றாலும்
இந்த கேள்விக்கு சரியான பதில் இருப்பதாக தெரியவில்லை.

டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததும் நெருக்கமான நண்பர்களை,அபிமான நட்சத்திரங்களை ,விரும்பும் செய்தி நிறுவனங்களை பின்தொடர்வது இயல்பாக நட‌க்கிறது.அதன் பிறகு டிவிட்டரில் தினமும் எட்டிப்பார்க்கும் பரிந்துறையை ஏற்று சிலரை பின்தொடர தீர்மானிக்கலாம். நாமாக ஒரு சில டிவிட்டராளர்களை அறிமுகம் செய்து கொண்டு அவரை பிந்தொடர‌ முடிவு செய்யலாம்.

இன்னும் சிலர் என்னை பின்தொடர்பவர்களை நானும் பின்தொடர்வேன் என்னும் பரஸ்பர‌ ஆதரவு கொள்கையை பின்பற்றலாம்.

எது எப்படி இருந்தாலும் ஒரு கட்டத்தில் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை நிர்வகிக்க முடியாமல் போகலாம்.அப்போது புதிதாக யாரை பின் தொடர் தோன்றினாலும் தேவைதானா,பய‌னுள்ளதாக இருக்குமா என்ற‌ கேள்விகள் எழலாம்.ஏற்கனவே பின்தொடர்பவ‌ர்களின் பகிர்வுகளையே தவறவிடாமல் படிப்பதில்லையே என்ற எண்ணமும் ஏற்படலாம்.

ஆனால் புதிதாக பின்தொடர்பவர்களிடம் இருந்து ப‌யனுள்ள தகவல்கள் அல்லது தொடர்புகள் கிடைக்ககூடும் என்றால் அதனை ஏன் தவறவிட வேண்டும்?

ஆனால் ஒருவரை பின்தொடர்வது ப‌யனுள்ளதாக் இருக்கும் என்று எப்படி தெரிந்து கொள்வது?

இந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் பாலோடிரைல் எனும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது.

இந்த தளம் ஒருவரை பின் தொடரலாமா என்று முடிவு செய்ய அவரை பின் தொடர்ந்து பாருங்கள் என்கிறது.அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு எந்த ஒரு டிவிட்டராளரையும் பின் தொடர்ந்து பார்த்து விட்டு அவரது பகிர்வுகள் பயனுள்ளதாக தோன்றினால் நிரந்தரமாக பின் தொடரும் வாய்ப்பை இந்த தளம் வழங்குகிறது.

கார் வாங்குவதற்கு முன் சோதனை ஓட்டம் எடுத்து செல்வது போல இந்த தளம் டிவிடரில் புதிதாக ஒருவரை பின்தொடர முதலில் சோதனை முறையில் அவரை பின் தொடர்ந்து பார்க்கும் வசதியை அளிக்கிறது.யாரையும் க‌ண்மூடித்தனமாக பின் தொடர்ந்து விடாதீர்கள் முதலில் அவர்களை சோதித்து பார்த்துவிடுங்கள் என்கிறது இந்த தளம்.

யாரை பின் தொடர‌ நினைக்கிறோமோ அவரது பெயரை இந்த த‌ளத்தில் சம‌ர்பித்தால் குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு வார‌ம் முதல் ஒரு மாதம் வரை)பின் தொடர்ந்து பார்க்கலாம்.அந்த காலம் முடிந்த பின் இந்த தளம் பின்தொடர விருப்பமா என்று கேட்கும்.சோதனையில் திருப்தி இருந்தால் பின்தொடர‌ சம்மதிக்கலாம்.இல்லை என்றால் மறுத்து விடலாம்.

இல்லை பதில் அளிக்காமல் சும்மா இருந்தாலும் தானாக‌வே பின் தொடர்தல் நீக்க‌ப்பட்டு விடும்.

சுவாரஸ்யமான சேவை தான்.பயன்ப‌டுத்தி பாருங்கள்.

இணையதள முகவரி;http://www.followtrial.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *