நீங்கள் டிவிட்டர் பயன்படுத்துபவரா?ஆம் எனில் டிவிட்டரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த கேள்விக்கான பதிலை அழகாக முன் வைக்கிறது டிவிட்டர்லான்ட் இணையதளம்.
டிவிட்டர் சார்ந்த தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.டிவிட்டரில் ஒருவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் ,அவரது செல்வாக்கு என்ன,ஒருவரது தொடர் படையின் பலம் என்ன போன்ற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கலும் இருக்கின்றன.
இந்த வகையில் டிவிட்டர்லான்ட் டிவிட்டரில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அவரது டிவிட்டர் பதிவுகளை ஆராய்ந்து சொல்கிறது.ஒருவருடைய டிவிட்டர் சித்திரம் என்றும் இதனை சொல்லலாம்.டிவிட்டர் ஜாதகம் என்றும் சொல்லலாம்.
டிவிட்டர் செய்பவர் தன்னை பற்றி செய்து கொண்ட அறிமுகத்தில் இருந்து அவருக்கு இருக்கும் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை,அவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ,குறும்ப்திவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் இந்த டிவிட்டர் சித்திரத்தில் இடம் பெறுகின்றன.
இந்த விவரங்கள் எல்லாம் ஒருவரது டிவிட்டர் பக்கத்திலேயே இருக்க கூடியது தான் .ஆனால் இந்த விவரங்களை தாண்டி ஒருவரது டிவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் அவரை பற்றிய விவரங்களை இந்த சித்திரத்தில் காணலாம்.
டிவிட்டர் பதிவுகள் எத்தனை முறை ரீடிவீட் செய்யப்படுகின்றன,தினசரி பதிவுகளின் சராசரி போன்ற விவர்ங்களோடு அவரது பிரபலமான வார்த்தைகள் ,வெறுமையான பதிவுகள்,இணைப்புகள்,பதில்கள், மற்றும் ரிடிவீட்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட புகைப்படங்களையும் தொகுத்து தருகிறது.
பிரபலமான வார்த்தைகள் என்றால் ரிடீவிட் செய்யப்பட்டவர்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த பதிவுகளாகும்.வெறுமையான பதிவுகள் என்றால் இணைப்புகள் இல்லாத பதிவுகள்.இதே போல ஒருவரின் பின் தொடர்பாளர்களில் முன்னணியில் இருப்பவர்கள் யார் என்ற தகவலும் இடம் பெறுகிறது.
இந்த டிவிட்டர் சித்திரம் மூலமாக ஒருவரது டிவிட்டர் செய்பபாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பறவை பார்வை போல தெரிந்து கொள்ளலாம்.டிவிட்டரில் எத்தனை தீவிரமாக இருக்கிறார் என்பதை மட்டும் அல்லாமல் தன்னை எப்படி வெளிப்படுத்தி கொள்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் சித்திரம் முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளன.
மற்ற டிவிட்டர் பயனாளிகளின் பெயரை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி;http://twtrland.com
இது இந்த தளத்தில் என்னுடைய டிவிட்டர் சித்திரம்;http://twtrland.com/profile/iamcybersimman

0 Comments on “இது உங்கள் டிவிட்டர் ஜாதகம்.”
Tamil Comedy World
பயன்னுள்ள தகவல்!.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Pingback: இது உங்கள் டிவிட்டர் ஜாதகம் - தமிழ் ட்விட்டர்கள்