பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர்

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மற்றவர்களின் பிரார்த்தனையை மதிக்க தான் செய்வார்கள்.சில நேரங்களில் அவர்களும் கூட பிரார்த்தனையில் சேர்ந்து கொள்வார்கள்.

பிரார்த்தனை என்பது இறை நம்பிக்கை சார்ந்தது என்றாலும் கூட்டு பிரார்த்தனை என்பது பெரும்பாலும் சமூக நிகழ்வாகவே அமைகிறது.

இணைய யுகத்தில் அதிலும் வலைப்பின்னல் காலத்தில் பிரார்த்தனைகளையும் இணையத்திற்கு கொண்டு செல்வது தானே பொருத்தமாக இருக்கும்.அதற்கேற்ப இணையம் வழியே பிராத்தனை செய்ய உதவும் இணையதளங்களும் இல்லாமல் இல்லை.

இப்போது நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்ய உதவும் வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.பிரேட்டர் என்னும் பெயர் கொண்ட அந்த தளத்தை பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர் என்றும் சொல்லலாம்.

டிவிட்டர் போல 140 எழுத்துக்களுக்குள் பிரார்த்தனை செய்திகளை வெளியிட வழி செய்வதோடு டிவிட்டர் போலவே பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது இந்த தளம்.நண்பர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் இந்த தளத்தின் வழியே பிரார்த்தனை செய்யலாம்.

பிரார்த்தனை செய்ய விரும்புகிறவர்கள் முதலில் உறுப்பினராக வேண்டும்.உறுப்பினராக பதிவு செய்து கொள்வது சுலபமாகவே உள்ளது.உறுப்பினரானவுடன் ஒவ்வொருக்குமான பிரார்த்தனை பக்கம் உருவாக்கித்தரப்படுகிறது.

டிவிட்டர் கட்டம் போல இருக்கும் பகுதியில் பிரார்த்தனை வாசகங்களை டைப் செய்து விட்டு,அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பிரார்த்தனை வாசகம் பைபில் மேற்கோளாக இருக்கலாம்.தனிப்பட்ட வேண்டுகோளாக இருக்கலாம்.உலக நன்மைக்கானதாக இருக்கலாம்.

யாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்பதையும் குறிப்பிடும் வசதி இருக்கிறது.எதற்கான பிரார்த்தனை என்பதையும் தெரிவிக்கலாம்.பிரார்த்தனைக்கான குழுக்களையும் உருவாக்கி கொள்ளலாம்.

பிரார்த்தனைகளை டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இமெயில் வழியேவும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.பிரார்த்தனைகளை தனிப்பட்டதாகவும் வைத்து கொள்ளலாம்;பொதுவானதாகவும் ஆக்கி கொள்ளலாம்.

உடனடி பிரார்த்தனை என்ற அம்சமும் இருக்கிறது.இந்த வகை பிரார்த்தனை தைன்யே நில நிற பின்னணியில் குறிப்பிடப்படுகிறது. பேஸ்புக்கில் லைக் வசதி இஉர்ப்பது போல இதில் பிரார்த்தனை செய்தவர்கள் நானும் பிரார்த்தனை செய்தேன் என தெரிவிக்கும் வசதி இருக்கிறது.

வலைப்பின்னல் தளங்கள் மூலம் நண்பர்களை தேடிக்கொள்வது போல ,நட்பை பரிமாரிக்கொள்வது போல இந்த தளாத்தின் வழியே பிரார்த்தனைகளையும் நல்லெண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பெரும்பாலான வலைப்பின்னல் சேவைகளில் இருப்பது போல இதிலும் உறுப்பினர்களுக்கான முகப்பு பக்கத்தில் பல்வேறு வகையான வசதிகள் இருக்கின்றன. பிரார்த்தனைகளை பின்தொடரலாம்.பழைய பிரார்த்தனைகளை திரும்பி பார்க்கலாம்.

உறுப்பினர்கள் தங்களுக்கான பக்கத்தில் சுருக்கமான அறிமுகத்தையும் செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பலவிதமான க்ருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாது.கொஞ்சம் நல்லெண்ணத்தையும் பிரார்த்தனை வடிவில் பகிர்ந்து கொள்வோமே.

கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றிக்கு கூட்டு பிரார்த்தனை செய்யலாம்.இது உதாரணம் தான்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எதறகாக வேன்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைகள் நம்மை இணைக்கட்டும்.பிரார்த்தனை முலம் நண்பர்களாவோம்.

பிரார்த்தனை செய்ய இணைய முகவரி;http://www.prayter.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர்

  1. Pingback: பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம் | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *