டிவிட்டர் என்ன நினைக்கிறதோ அதை தான் உலகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.இதையே ,உலகம் என்ன நினைக்கிறதோ அதையே டிவிட்டர் நினைப்பதாகவும் சொல்லலாம்.
உலகம் எதை பற்றி பேடிக்கொண்டிருக்கிறதோ அதை பற்றி தான் டிவிட்டரும் பேசுகிறது.அதாவது டிவிட்டரில் குறும்பதிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.இப்படி எந்த தலைப்பின் கீழ் அதிக குறும்பதிவுகள் வெளியாகின்றனவே அந்த தலைப்பு கவனத்தை ஈர்த்து உலகை பேச வைத்து விடுகின்றன.
இப்படி டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகள் திடிரென பரபரப்பை ஏற்படுத்தி மேலும் கவனத்தை ஈர்க்கும்.அதன் பிறகு பார்த்தால் எங்கும் அந்த தலைப்பு பற்றி தான் பேச்சாக இருக்கும்.டிவிட்டர் மொழியில் இவை டிரென்டிங் டாபிக் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரே தலைப்பு பற்றி பலரும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கும் போது அவை தானாக மேலெழுத்து வந்துவிடுகின்றன.
இவ்வாறு டிவிட்டரில் மேலெழும் தலைப்புகளை கோட்டை விடாமல் இருக்க விரும்பினால் ‘வாட் த டிரென்ட்’ இணையதளம் அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இதோ இந்த நிமிடத்தில் டிவிட்டரில் எந்த தலைப்பு மேலெழுகிறதோ அந்த தலைப்புகளை எல்லாம் தொகுத்தளித்து நம் பார்வைக்கு வைக்கிறது.அதனால் தான் உடனடி வலையின் முகப்பு பக்கம் என்றும் பெருமைபட்டு கொள்கிறது.
நாளிதழ் உலகில் சுடச்சுட செய்திகள் என்று சொல்வது போல டிவிட்டர் உலகில் அந்த நிமிடத்தில் பரிமாறப்படும் தகவல்கள் ரியல் டைம் என்று சொல்லப்படுகின்றன.இந்த உடனடி செய்திகளில் கவனிக்க வேண்டியவை எவை என்பதை தான் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
செய்தி தளங்களில் எப்படி முக்கிய செய்திகள் பட்டியலிடப்பட்டிருக்குமோ அதே போல இந்த தளத்தில் டிவிட்டரில் இப்போது எந்த தலைப்பு முக்கியமாக இருக்கின்றனவோ அவை எல்லாம் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன.
குறிப்பிட்ட தலைப்பை கிளிக் செய்தால் அந்த தலைப்பில் வெளியான குறும்பதிவுகளை எல்லாம் படிக்கலாம்.முதல் பத்து தலைப்புகள் வரிசையாகவும் அதற்கு மேலே மற்ற தலைப்புகள் குறிச்சொற்களாகவும் இடம் பெறுகின்றன.
இவை உலகலாவிய போக்குகள் .அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் எநத தலைப்பு டாப்பில் இருக்கின்றன என்பதையும் தனியே தெரிந்து கொள்ளலாம்.வலது பக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட நாட்டு டிவிட்டர் போக்குகளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல முக்கிய நகரங்களுக்கான டிவிட்டர் போக்குகளையும் அந்த அந்த நகரங்களை கிளிக் செய்து பார்க்கலாம்.
அது மட்டும் அல்ல,ஒவ்வொரு தலைப்புடனும் அந்த தலைப்பு டிவிட்டரில் பிரபலமானதற்கு என்ன காரணம் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் இடம் பெறுகிறது.இந்த விளக்கத்தை உறுப்பினரகளே சமர்பிக்கலாம் என்பது தான் விசேஷம்.அப்படியே டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகளையும் சமர்பிக்கலாம்.குறும்பதிவுகளை அப்படியே ரீடிவீட் செய்யலாம் என்பதை சொல்லவே வேண்டாம்.
ஆக டிவிட்டரும் உலகமும் என்ன நினைக்கிறது என அறிய விரும்பும் போதெலாம இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம் .இல்லை இந்த தளத்தை டிவிட்டரில் பின் தொடர்ந்தால் டிவிட்டரையே பின் தொடர்வது போல பிரபலமான தலைப்புகளை எல்லாம் உடனே உடனே தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.whatthetrend.com/
பின்குறிப்பு;இப்போது இந்தியாவை பொருத்தவரை சச்சின் 100 வது சத்ததை அடிப்பதற்கு முன் என்ன விஷயம் எல்லாம் நடக்கும் என்பது தொடர்பான குறும் பதிவுகளே முன்னணியில் உள்ளன.

0 Comments on “டிவிட்டரில் இன்றைய சூடான செய்தி.”
Ravindarz Collections
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Pingback: உலக குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம். « Cybersimman's Blog